Pages

Showing posts with label பொடுகு தொல்லையை நீக்க. Show all posts
Showing posts with label பொடுகு தொல்லையை நீக்க. Show all posts

Thursday, July 24, 2014

பொடுகு பிரச்சனையா... போக்க இதோ வழிகள்!


பொடுகு என்பது என்ன? தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்து போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதை தான் பொடுகு என்கிறோம். 

பொடுகு வர காரணம் என்ன? 
வறட்சியான சருமம், அவசரமாக தலைக்கு குளித்து, நன்றாக துவட்டாமல் இருப்பது, எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது, தலையில் வியர்வை உருவாவது போன்றவை பொடுகு வர முக்கியக் காரணங்கள். பிடி ரோஸ்போரம் ஓவல் என்ற நுண்ணுயிர் கிருமியினாலும் பொடுகு வரலாம். சொரியாசிஸ் என்ற தோல் வியாதியும், பொடுகு வர காரணமாகும். அதிகளவில் ஷாம்பூ பயன்படுத்துவது, மன அழுத்தம், கவலை போன்றவையும் பொடுகு வரக் காரணங்கள்.

எதெல்லாம் கூடாது?
 
ஒருவர் பயன்படுத்திய சீப்பு, தலையணை, துண்டை அடுத்தவர் பயன்படுத்தக் கூடாது. தலையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உணவில் கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் போன்ற உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும்.
எப்படி தவிர்க்கலாம்?

தலையில் புண், வெட்டுக்காயம் இல்லாமல் இருந்தால், செலெனியம் சல்பைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள ஷாம்பூவை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். salaisilik அமிலம், சல்பர் கலந்த ஷாம்பூவை பயன்படுத்தலாம். பிடிரோஸ்போரம் ஓவல் என்ற நுண்ணுயிர் கிருமி மூலம் பரவுவதை தடுக்க மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். சின்ன வெங்காயத்தை, அரைத்து தலையில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு குறையும். பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து சேர்த்து தலையில் தேய்த்து, 15 நிமிஷம் கழித்து குளிக்கலாம். தலையில் தயிர் தேய்த்தும் குளிக்கலாம்.

வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம். பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிப்பது, வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளிப்பது பொடுகு தொல்லையை குறைக்கும். உடல் உஷ்ணம் குறையும். அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன்  சேர்த்து நன்றாக காய்ச்சி, பின் ஆற வைத்து, தினசரி தலையில் தேய்த்து குளிப்பது பொடுகு தொல்லையை குறைக்கும்.

வேப்பில்லைச் சாறு, துளசி சாறு கலந்து தலையில் தேய்ப்பது, வசம்பு பவுடரை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தேய்ப்பது, குளித்த பின் தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து குளித்து, பின் துவட்டுவது, மருதாணி இலையை அரைத்து, அதனுடன் கொஞ்சம் தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்ப்பது, தேங்காய் எண்ணெயுடன், வெப்ப எண்ணெயை காய்ச்சி தலையில் தேய்ப்பது என, பொடுகு தொல்லையை நீக்க பல வழிகள் உண்டு.