Pages

Tuesday, July 22, 2014

ஏழைகளின் புரதம் வேர்க்கடலை

வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லோருக்கும் நியாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துக்கள், வேர்கடலை, கடலை எண்ணெயை பயன்படுத்தினால் ரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்பது பரவலாக உள்ளது. ஆனால் இந்த பயத்திற்கு எந்த வித ஆதாரமும் இல்லை.

வேர்க்கடலையில் கொழுப்பு சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு, உடலுக்கு தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை  ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவு புரத சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல 30 விதமான ஊட்டச்சத்துக்கள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.
சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?
 நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்து இருகிறார்கள். அதை கிளைகெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது வேர்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிகாரர்கள் வேர்கடலையை எந்த வித பயமுமின்றி தாராளமாகச் சாப்பிடலாம். வேர்கடலையில் உள்ள மெக்னெசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும், ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மை உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.

வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்கடலையில் உள்ளன?

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியதுக்கு உள்ளது. வேர்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்கடலை சாப்பிடுவதால்  ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும். வேர்கடலையில் நார்சத்து அதிகம். வேர்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும்.

வேர்கடலை சாப்பிட்டவுடன் "சாப்பிட்டது போதும் என்ற திருப்தி மிக விரைவில் வந்து விடும். எனவே வேர்கடலையை சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிடவேண்டும் என்று தோன்றாது. இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொரித்து உடல் எடையை அதிகரித்து கொள்ளும் பிரச்சனை இல்லை. 

வேர்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது, இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்பு கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.  

இளநீர் குடிங்க... குடிங்க குடிச்சுக்கிட்டே இருங்க!


இயற்கை நமக்கு தந்துள்ள கலப்படம் இல்லாத பானம் இளநீர். உடலுக்கு மிகுந்த நன்மை தரும் இளநீரில் அடங்கியுள்ள சத்துக்கள்:

நீர்=95% பொட்டசியம் = 310 மி. கிராம், குளோரின் = 180 மி. கிராம், கால்சியம் = 30 மி.கிராம் , பாஸ்பரஸ் = 37 மி. கிராம், சல்பர் = 25 மி. கிராம், இரும்பு = 0.15 மி.கிராம், காப்பர் = 0.15 மி.கிராம், வைட்டமின் ஏ = 20 மி. கிராம் இவை அனைத்தும் 100 கிராம் இளநீரில் உள்ள சத்துக்கள்.

மருத்துவ குணங்கள்: 

சிறுநீரகப் பணிகள் சிறுநீரகக் கற்கள் கரையப் பயன்படுகிறது. காலராவுக்கு அற்புத மருந்து. உடம்பில் நீர் சத்து குறையும் போது இளநீர் டானிக் ஆக வேலை செய்கிறது. விரைவில் ஜீரணம், உடல் சூடு, மூலச்சூடு, மூலம் விலகும். உடல் பருமன் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இளநீரால் நல்ல பயன் அடைவர். பொட்டசியம் உப்பு மிகுந்து உள்ளது. வைட்டமின் ஏ இதயம், நரம்புகள் ஜீரன உறுப்புகளை பாதுகாக்கிறது. தள்ளாத வயதிலும் இளநீர் புத்துணர்ச்சி தந்திடும். தென்னையில் வேரிலிருந்து குருந்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக்கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்கு கேடு. என்ற பிரச்சாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பரம்பரிய மருத்துவர்கள்.


தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். புரதச் சத்து மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருட்கள், வைட்டமின் சி, அனைத்துவகை பி காம்ளக்ஸ், சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக், தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு )இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதியை குணப்படுத்துகிறது. மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றிக்கு தென்னக்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாக பயன்படுத்தப்படுகிறது.  

சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போரவற்றவற்றுகுத் தேங்காய் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்க் கொண்டு  தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன.



மூட்டுவலிக்கு தீர்வு சத்தான உணவு




மூட்டு வலி

மூட்டு வலி வருவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அவை சரியான ஊட்டச்சத்தில்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி இல்லாதது, உடல் சரியான அளவில் வைக்காமல் இருப்பது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவை காரணங்களில் சில. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் வலி பறந்துவிடும்.

 
சாலமன்: கடல் உணவுகளில் அதிகமான அளவில் ஒமேக -3 உள்ளது. அதுவும் சாலமன் மீனில் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. ஆகவே இதனை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலிகள் குறைந்து சரியாகிவிடும்.

பெர்ரிஸ்:ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளுபெர்ரிகள் மருத்துவ குணம் நிறைந்த பழங்கள். அதிலும் இவை மூட்டுகளில் ஏற்ப்படும் வழிக்கு சிறந்தது என்று அமெரிக்கன் கல்லூரியில் உள்ள நியூட்ரிஷன் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளது. ஏனெனில், அவற்றில் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் புண்களை சரிசெய்யுமளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளன.

காய்கறிகள்காய்கறிகள்: உடலில் ஒமேக-3 பேட்டி ஆசிட் குறைவாக இருந்தால், மூட்டுவலிகள் ஏற்ப்படும். ஆகவே அவற்றை சரி செய்ய, கீரை, ப்ரோக்கோலி, வெங்காயம், இஞ்சி போன்றவற்றை அதிகளவில் சாப்பிட வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளான பாஸ்தா, பிரட், ஜங்க் புட் போன்றவற்றை தவிர்த்தால், மூட்டு வலி ஏற்படாமல் தடுக்கலாம்.

நட்ஸ்நட்ஸ்: பாதாம், வால்நட் மற்றும் மற்ற விதைகளான பூசணிக்காய் விதை போன்றவற்றை சாப்பிட்டால் நல்லது. ஏனெனில் இவற்றில் ஒமேக - 3 பேட்டி ஆசிட் மற்றும் ஆன்டி - ஆக்சிடன்ட் அதிகமாக உள்ளது. இதனால் மூட்டுகளில் ஏற்படும் புண் மற்றும் வலி நீங்கும். ஆகவே இனிமேல் ஜங்க் புட் சாப்பிடுவதை தொடங்குங்கள்.

பால் பொருட்கள்: உடலில் எலும்புகள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்க கால்சியம் சத்துக்கள் இருக்க வேண்டும். அவை குறைவாக இருந்தால் அடிக்கடி எலும்புகளில் வலி, சுளுக்கு ஏற்படும். ஆகவே அத்தகைய வலிகள் வராமல் இருக்க பால் பொருட்களான வெண்ணெய், பால், சீஸ் போன்றவைகளை அதிகம் உடலில் சேர்க்க வேண்டும். அதிலும் ஸ்கிம் மில்க்கை சாப்பிட்டால், உடல் எடையை அதிகரிக்காமலும், உடலில் நீரழிவு ஏற்ப்படாமலும் தடுக்கலாம்.
ஆலிவ்  ஆயில்
ஆலிவ்  ஆயில்: ஆலிவ் ஆயிலின் மகிமைகளை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஏனெனில் அந்த அளவு அதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஆகவே சமைக்கும் போது மற்ற எண்ணெய்களை பயன்படுத்துவதை விட ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி சமைத்தால் இதயத்திற்கும், எலும்புகளுக்கும் நல்லது. ஏனெனில் அந்த அளவு அதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் இவற்றில் ஆன்டி - ஆக்சிடன்ட் அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாகவும் உள்ளது.

ஆரஞ்சு ஜூஸ்: அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், எலும்புகள் நன்கு வலுவோடு இருப்பதோடு, எந்த ஒரு வலியும், புண்களும் எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்ப்படாமல் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் அதிகமாக உள்ளது.

வயதான தோற்றத்தை தடுக்கும் அபார வழி!

வயது அதிகரித்தால், சருமத்தில் சுருக்கமும் அதிகரிப்பது இயற்கையான ஒன்று தான். ஆனால் இன்றைய தலைமுறையினர் பலருக்கு விரைவிலேயே சுருக்கங்கள் ஏற்படுகிறது. இதனால் இளமையிலேயே முதுமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள்.

இப்பிரச்சனைக்கு தீர்வு காண, பல்வேறு கிரீம்களை பயன்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் அவற்றால் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை. மாறாக, சருமத்தின் இயற்கை அழகு தான் பாதிக்கப்படுகிறது. எனவே சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டால், அதனை போக்க இயற்கைநமக்கு தந்த அற்புதமான ஒரு பொருள் தான் கற்றாழை. கற்றழயினால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மட்டுமின்றி, பல்வேறு பிரச்சனைகளும் நீங்கும்.

கற்றாழையை சருமத்தில் பயன் படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்:

பட்டுப்போல மென்மை:
கற்றாழையின் ஜெல்லை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், அவை சருமத் துளைகளில் தங்கியுள்ள நச்சுகள் மற்றும் இறந்த செல்களை முற்றிலும் வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும். சுருக்கங்கள் மாறி விடும்

தினமும் இரவில் படுக்கும் போது, கற்றாழை ஜெல்லை முகம் மற்றும் கண்களை சுற்றி தடவி வந்தால், சருமத்திரு தேவையான வைட்டமின்களான ஏ, ஈ மற்றும் சி போன்றவை கிடைத்து, சருமம் சுருக்கமடைவதைத் தடுக்கலாம். முக்கியமாக கண்களைச் சுற்றி தடவும் போது கற்றாழயின் ஜெல் கண்களில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவை கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

முதுமையை தள்ளிபோடலாம்:
1:1 என்ற விகிதத்தில் கற்றாழை ஜெல்போராக்ஸ் கலந்த நீரை எடுத்து, நன்கு கொதிக்க விட்டு, பின் குளிர வைத்து, அத்துடன் 1 கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, பின் அந்த கலவையை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், அவை சுருக்கத்தையும், விரைவில் முதுமை தோற்றம் வருவதையும் தடுக்கும். இதுதான் பக்கவிளைவின்றி செயல்படும் ஆண்டி ஏஜிங் சிகிச்சை பெரும் ரகசியம். 

முகம் எப்போதும் பளபளப்பாக வசீகரமாக இருக்க வேண்டுமா?


முகம் எப்போதும் பளபளப்பாக வசீகரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இவைகளை கடைபிடியுங்கள்.

*புதினாவை, தயிரில் சேர்த்து அரைத்து, தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால், முகம் பளிச்சென மாறும்.

*முட்டையின் வெள்ளைக்கரு, வெள்ளை வெங்காயம், மருதாணி ஆகியவற்றை அரைத்து முகத்தில் பூசினால், முக வசீகரம் அதிகரிக்கும்.

* தக்காளியை நறுக்கி, முகத்தில் அடிக்கடி தேய்த்தால், முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் நீங்கும்.

* வெள்ளரிக்காயை சிப்ஸ் போல சீவி, கண்களுக்கு கீழே வைத்தால், கருவளையம் நீங்கும்.

* கோடை காலத்தில், மோரை துணியால் முக்கி, முகத்தில் தேயுங்கள். மினுமினுப்பு அதிகரிக்கும்.

* பாலில் எலுமிச்சை பழச்சாறை கலந்து, முகத்தை கழுவினால் நல்லது.

* ஆப்பிளை கூழ்போல் ஆக்கி, முகத்தில் பூசுவதும், முகத்தை
பொலிவாக்கும்.

சேலை கட்டும் பெண்ணே!

நம் பாரம்பரியத்தின் அடையாளமாக புடவை விளங்குகிறது. அது சமகலத்தையும் பிரதிபலிக்கிறது. தென்னிந்தியாவில் முழு நீள புடவை அணிவதுபோல வட இந்தியாவில் பாவாடை போலவே தோற்றமளிக்கும் புடவைகள் அணிவார்கள். அனார்கலி போல இருக்கும் கலிதார் பன்ற புடவைகளும் வட இந்தியாவின் பாரம்பரியம்தான். குஜராத்திகளும், பெங்களிகாளிகளும் குர்தி போல இருக்கும் மாஷர்ஸ் புடவைகளை அணிவார்கள். இது போன்ற பாரம்பரிய புடவைகளில் மாற்றம் ஏதும் இருக்காது என்பதால் இதை எங்கேயும் எப்போதும் அணியலாம்.

ஆனால் சமகால புடவைகள்தான் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். அந்த மற்றதை புரிந்து கொண்டு, அதற்கேற்ப புடவை அணிவதில் தான் நம் திறமை அடங்கி இருக்கிறது.  பட்டு இழைகள், செயற்கை இழைகள் என்றுதான் பலரும் ராகம் பிரித்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் நாம் நினைத்துப் பார்க்காத ராகங்களிலும் புடவைகள் தயாராகின்றன. கிரேப், வெல்வெட், ஜூட் சில்க் போன்ற ரகங்களில் புடவை அணிந்தால் அனைவர் கண்ணும் நம் மீதுதான்.

உடலமைப்புக்கு ஏற்ற ரகங்களில்தான் ஆடை அணிய வேண்டும். ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் ஹெவி சில்க், புரோகேட், காஞ்சிபுரம் பட்டு அணியலாம். இது அவர்களின் கம்பீரத்தைக் கூட்டும். சணல் என்றதுமே சிலருக்கு கட்டைப் பைகளும், மிதியடிகலுமே நினைவுக்கு வரும். ஆனால் பாலிஷ் செய்யப்பட்ட சணலில் வரும் புடவைகள் கண்கவரும் விதத்தில் இருக்கும். இவற்றை மாலை நேர விருந்துகளுக்கு அணிந்து சென்றால் அந்த இடத்தில் நாம்தான் சென்டர் ஆப் அட்ராக்சனாக இருப்போம். கொஞ்சம் பூசினார் போல் உடலமைப்பு உள்ளவர்களாக இருந்தால் ஷிபான், ஜார்ஜெட், கிரேப் போன்ற ரகங்களை அணியலாம். 

ஆடை ரகங்களை போலவே நிறங்களும் நம் தோற்றத்தை மாற்றிக் காட்டும். ஒல்லியாக இருப்பவர்கள் அடர் நிறங்களில் புடவை அணிந்து செல்லலாம். இது அவர்களின் தோற்றத்தை பளீச் என்று காட்டும். பூசினார் போல் இருப்பவர்கள் வெளிர் நிறங்களில் புடவை அணிய வேண்டும் . இது அவர்களின் தொப்பையை குறைத்துக் காட்டும். மற்ற குறைபாடுகளும் மறைந்தே போகும். 

ஒல்லியாக இருப்பவர்கள் பெரிய பார்டர் வைத்த புடவை கட்டினால் அவர்கள் தோல் பரப்பை அந்த பார்டரே நிறைத்து விடும். அது அத்தனை எடுப்பாக இருக்காது. அதனால் சின்ன பார்டர் வைத்த புடைவைகளே இவர்களுக்கு பொருந்தும். குண்டாக இருப்பவர்கள் பெரிய பார்டர் வைத்த புடவைகள் அணிவதால் இவர்களுக்கு அழகான தோற்றம் கிடைக்கும். பெரிய டிசைன் பிரிண்டட் புடவைகளும் அணியலாம். 

தினமும் அணிகிற புடவையில் வித்தியாசம் தெரியணுமா? அது மிக எளிது. புடவை கட்டும் விதத்தில் கொஞ்சம் மாற்றம் செய்து விட்டால் போதும். பொதுவாக புடவையுடன் வரும் அட்டாச்சுடு பிளவுசைதான் பலரும் அணிகிறார்கள். அதை தவிர்த்து தனித்துத் தெரிகிற அடர் நிற பிளவுஸ் அணிந்தால் பளிச்சென்று இருக்கும். புரகேட், வெல்வெட் போன்ற ரகங்களில் பிளவுஸ் அணிவதும் சிறப்பான தோற்றத்தை தரும். கை வேலைப்பாடுகள், ஸ்டோன் வேலைப்பாடுகள் கொண்ட பிளவுசும் சாதாரண சேலைகளுக்கும் சிறப்பான தோற்றத்தை தரும்.

நிறங்களுக்கும், நம் மனநிலைக்கும் சம்பந்தம் உண்டு. எனவே உற்சாகம் தரும் பளிச் நிறங்களில் புடவை அணியுங்கள். அது எப்போதும் உங்களை உற்சாகமாகவே வைத்திருக்கும். 

Monday, July 21, 2014

தும்பைப்பூவில் ஜலதோஷ மருந்து!


சின்ன சீக்கு வந்தாலும் பரயில்லை... இந்த ஜலதோஷம் மட்டும் வரவே கூடாதுப்பா... ச்சூ! மனுசனை என்ன பாடுபடுத்துது.... மூக்கை கர்ச்சீப்பால் அழுந்த துடைத்தப்படி, இந்த டயலாக்கை கூறதவர்கள் மிக சிலரே. அந்தளவுக்கு ஜலதொஷம் வந்து தங்கி செல்லலும் வரை ஒரு வழி செய்து விடுகிறது.

இப்பேர்பட்ட ஜலதோஷத்தையும், தலைவலியையும் பாடாய் படுத்த ஒரு வழி இருக்கின்றது. தும்பைப்பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பூவை பாலில் போட்டுக்க் காய்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடிவிடும்.

தலைவலி போக்கும் சாறு;

தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் தும்பைப்பூவை சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும். காணும் இடம் எங்கும் சாலையோரங்களில் மலர்ந்திருக்கும் வெண்ணிற தும்பை மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.

தீராத தலைவலி மற்றும் ஜலதோஷம் போக்கும் தன்மை இந்த தும்பைப்ப் பூக்களுக்கு உண்டு. தலைவலி போக்கும் சாறு, தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் பத்து தும்பைபூக்களைப் பறித்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து இரண்டு துளிகள் மூக்கில் விட்டு உறிஞ்சினால் தீராத தலைவலி நீங்கும். சகலவிதமான காய்ச்சலுக்கு தும்பைப்பூ அருமருந்தாகும். ஒரு டீ ஸ்பூன் தும்பைப்பூ சாறுடன் சம அளவு தேன் சேர்த்து தினம் இரு வேலை கொடுத்து வந்தால், காய்ச்சல் குணமடையும். சளியினால் மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருக்கும் நிலையிலும் தும்பைப்பூ இலை, சமஅளவு எடுத்து கசக்கி அதில் சாறு எடுத்து 2 துளிகள் தினமும் இருவேளை மூக்கில் எளிதில் குணம் தெரியும்.

வாதம் குணமடையும்:

கால் டீஸ்பூன் அளவு மிளகை பொன் வறுவலாக வறுத்து எடுத்து, அத்துடன் ஒரு டீஸ்பூன் அளவு தும்பைப்பூவும், சிறிது வெல்லமும் சேர்த்து லேகியம் போல செய்து, தினம் இருவேளை சாப்பிட்டால் குளிர் ஜுரம், வாத ஜுரம் குணமடையும்.

பாம்புக்கடி குணமடையும்:

பம்புக்கடித்து மயக்கமானவர்களுக்கு, உடனடியாக தும்பைபூவின் சாறை மூக்கில் பிழிந்து விட்டால் மயக்கம் தெளியும். அதன் பின் கடிக்கு வைத்தியம் பார்க்கலாம்.
கண்கோளாறுகளுக்கு மருந்து:

கண் தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கைப்பிடியளவு தும்பைப்பூவை  சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து வதக்கி ஒரு டம்ளர் வீதம் எடுத்து, தேக்கரண்டியளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், கண் நோய்கள் குணமடையும்.