வயது அதிகரித்தால், சருமத்தில் சுருக்கமும் அதிகரிப்பது இயற்கையான ஒன்று தான். ஆனால் இன்றைய தலைமுறையினர் பலருக்கு விரைவிலேயே சுருக்கங்கள் ஏற்படுகிறது. இதனால் இளமையிலேயே முதுமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள்.
இப்பிரச்சனைக்கு தீர்வு காண, பல்வேறு கிரீம்களை பயன்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் அவற்றால் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை. மாறாக, சருமத்தின் இயற்கை அழகு தான் பாதிக்கப்படுகிறது. எனவே சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டால், அதனை போக்க இயற்கைநமக்கு தந்த அற்புதமான ஒரு பொருள் தான் கற்றாழை. கற்றழயினால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மட்டுமின்றி, பல்வேறு பிரச்சனைகளும் நீங்கும்.
கற்றாழையை சருமத்தில் பயன் படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்:
பட்டுப்போல மென்மை:
கற்றாழையின் ஜெல்லை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், அவை சருமத் துளைகளில் தங்கியுள்ள நச்சுகள் மற்றும் இறந்த செல்களை முற்றிலும் வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும். சுருக்கங்கள் மாறி விடும்
தினமும் இரவில் படுக்கும் போது, கற்றாழை ஜெல்லை முகம் மற்றும் கண்களை சுற்றி தடவி வந்தால், சருமத்திரு தேவையான வைட்டமின்களான ஏ, ஈ மற்றும் சி போன்றவை கிடைத்து, சருமம் சுருக்கமடைவதைத் தடுக்கலாம். முக்கியமாக கண்களைச் சுற்றி தடவும் போது கற்றாழயின் ஜெல் கண்களில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவை கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
முதுமையை தள்ளிபோடலாம்:
1:1 என்ற விகிதத்தில் கற்றாழை ஜெல்போராக்ஸ் கலந்த நீரை எடுத்து, நன்கு கொதிக்க விட்டு, பின் குளிர வைத்து, அத்துடன் 1 கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, பின் அந்த கலவையை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், அவை சுருக்கத்தையும், விரைவில் முதுமை தோற்றம் வருவதையும் தடுக்கும். இதுதான் பக்கவிளைவின்றி செயல்படும் ஆண்டி ஏஜிங் சிகிச்சை பெரும் ரகசியம்.