Pages

Tuesday, July 22, 2014

இளநீர் குடிங்க... குடிங்க குடிச்சுக்கிட்டே இருங்க!


இயற்கை நமக்கு தந்துள்ள கலப்படம் இல்லாத பானம் இளநீர். உடலுக்கு மிகுந்த நன்மை தரும் இளநீரில் அடங்கியுள்ள சத்துக்கள்:

நீர்=95% பொட்டசியம் = 310 மி. கிராம், குளோரின் = 180 மி. கிராம், கால்சியம் = 30 மி.கிராம் , பாஸ்பரஸ் = 37 மி. கிராம், சல்பர் = 25 மி. கிராம், இரும்பு = 0.15 மி.கிராம், காப்பர் = 0.15 மி.கிராம், வைட்டமின் ஏ = 20 மி. கிராம் இவை அனைத்தும் 100 கிராம் இளநீரில் உள்ள சத்துக்கள்.

மருத்துவ குணங்கள்: 

சிறுநீரகப் பணிகள் சிறுநீரகக் கற்கள் கரையப் பயன்படுகிறது. காலராவுக்கு அற்புத மருந்து. உடம்பில் நீர் சத்து குறையும் போது இளநீர் டானிக் ஆக வேலை செய்கிறது. விரைவில் ஜீரணம், உடல் சூடு, மூலச்சூடு, மூலம் விலகும். உடல் பருமன் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இளநீரால் நல்ல பயன் அடைவர். பொட்டசியம் உப்பு மிகுந்து உள்ளது. வைட்டமின் ஏ இதயம், நரம்புகள் ஜீரன உறுப்புகளை பாதுகாக்கிறது. தள்ளாத வயதிலும் இளநீர் புத்துணர்ச்சி தந்திடும். தென்னையில் வேரிலிருந்து குருந்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக்கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்கு கேடு. என்ற பிரச்சாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பரம்பரிய மருத்துவர்கள்.


தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். புரதச் சத்து மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருட்கள், வைட்டமின் சி, அனைத்துவகை பி காம்ளக்ஸ், சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக், தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு )இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதியை குணப்படுத்துகிறது. மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றிக்கு தென்னக்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாக பயன்படுத்தப்படுகிறது.  

சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போரவற்றவற்றுகுத் தேங்காய் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்க் கொண்டு  தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன.



No comments: