Pages

Showing posts with label பார்டர் வைத்த புடவைகள். Show all posts
Showing posts with label பார்டர் வைத்த புடவைகள். Show all posts

Tuesday, July 22, 2014

சேலை கட்டும் பெண்ணே!

நம் பாரம்பரியத்தின் அடையாளமாக புடவை விளங்குகிறது. அது சமகலத்தையும் பிரதிபலிக்கிறது. தென்னிந்தியாவில் முழு நீள புடவை அணிவதுபோல வட இந்தியாவில் பாவாடை போலவே தோற்றமளிக்கும் புடவைகள் அணிவார்கள். அனார்கலி போல இருக்கும் கலிதார் பன்ற புடவைகளும் வட இந்தியாவின் பாரம்பரியம்தான். குஜராத்திகளும், பெங்களிகாளிகளும் குர்தி போல இருக்கும் மாஷர்ஸ் புடவைகளை அணிவார்கள். இது போன்ற பாரம்பரிய புடவைகளில் மாற்றம் ஏதும் இருக்காது என்பதால் இதை எங்கேயும் எப்போதும் அணியலாம்.

ஆனால் சமகால புடவைகள்தான் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். அந்த மற்றதை புரிந்து கொண்டு, அதற்கேற்ப புடவை அணிவதில் தான் நம் திறமை அடங்கி இருக்கிறது.  பட்டு இழைகள், செயற்கை இழைகள் என்றுதான் பலரும் ராகம் பிரித்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் நாம் நினைத்துப் பார்க்காத ராகங்களிலும் புடவைகள் தயாராகின்றன. கிரேப், வெல்வெட், ஜூட் சில்க் போன்ற ரகங்களில் புடவை அணிந்தால் அனைவர் கண்ணும் நம் மீதுதான்.

உடலமைப்புக்கு ஏற்ற ரகங்களில்தான் ஆடை அணிய வேண்டும். ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் ஹெவி சில்க், புரோகேட், காஞ்சிபுரம் பட்டு அணியலாம். இது அவர்களின் கம்பீரத்தைக் கூட்டும். சணல் என்றதுமே சிலருக்கு கட்டைப் பைகளும், மிதியடிகலுமே நினைவுக்கு வரும். ஆனால் பாலிஷ் செய்யப்பட்ட சணலில் வரும் புடவைகள் கண்கவரும் விதத்தில் இருக்கும். இவற்றை மாலை நேர விருந்துகளுக்கு அணிந்து சென்றால் அந்த இடத்தில் நாம்தான் சென்டர் ஆப் அட்ராக்சனாக இருப்போம். கொஞ்சம் பூசினார் போல் உடலமைப்பு உள்ளவர்களாக இருந்தால் ஷிபான், ஜார்ஜெட், கிரேப் போன்ற ரகங்களை அணியலாம். 

ஆடை ரகங்களை போலவே நிறங்களும் நம் தோற்றத்தை மாற்றிக் காட்டும். ஒல்லியாக இருப்பவர்கள் அடர் நிறங்களில் புடவை அணிந்து செல்லலாம். இது அவர்களின் தோற்றத்தை பளீச் என்று காட்டும். பூசினார் போல் இருப்பவர்கள் வெளிர் நிறங்களில் புடவை அணிய வேண்டும் . இது அவர்களின் தொப்பையை குறைத்துக் காட்டும். மற்ற குறைபாடுகளும் மறைந்தே போகும். 

ஒல்லியாக இருப்பவர்கள் பெரிய பார்டர் வைத்த புடவை கட்டினால் அவர்கள் தோல் பரப்பை அந்த பார்டரே நிறைத்து விடும். அது அத்தனை எடுப்பாக இருக்காது. அதனால் சின்ன பார்டர் வைத்த புடைவைகளே இவர்களுக்கு பொருந்தும். குண்டாக இருப்பவர்கள் பெரிய பார்டர் வைத்த புடவைகள் அணிவதால் இவர்களுக்கு அழகான தோற்றம் கிடைக்கும். பெரிய டிசைன் பிரிண்டட் புடவைகளும் அணியலாம். 

தினமும் அணிகிற புடவையில் வித்தியாசம் தெரியணுமா? அது மிக எளிது. புடவை கட்டும் விதத்தில் கொஞ்சம் மாற்றம் செய்து விட்டால் போதும். பொதுவாக புடவையுடன் வரும் அட்டாச்சுடு பிளவுசைதான் பலரும் அணிகிறார்கள். அதை தவிர்த்து தனித்துத் தெரிகிற அடர் நிற பிளவுஸ் அணிந்தால் பளிச்சென்று இருக்கும். புரகேட், வெல்வெட் போன்ற ரகங்களில் பிளவுஸ் அணிவதும் சிறப்பான தோற்றத்தை தரும். கை வேலைப்பாடுகள், ஸ்டோன் வேலைப்பாடுகள் கொண்ட பிளவுசும் சாதாரண சேலைகளுக்கும் சிறப்பான தோற்றத்தை தரும்.

நிறங்களுக்கும், நம் மனநிலைக்கும் சம்பந்தம் உண்டு. எனவே உற்சாகம் தரும் பளிச் நிறங்களில் புடவை அணியுங்கள். அது எப்போதும் உங்களை உற்சாகமாகவே வைத்திருக்கும்.