வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லோருக்கும் நியாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துக்கள், வேர்கடலை, கடலை எண்ணெயை பயன்படுத்தினால் ரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்பது பரவலாக உள்ளது. ஆனால் இந்த பயத்திற்கு எந்த வித ஆதாரமும் இல்லை.
வேர்க்கடலையில் கொழுப்பு சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு, உடலுக்கு தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவு புரத சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல 30 விதமான ஊட்டச்சத்துக்கள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.
சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்து இருகிறார்கள். அதை கிளைகெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது வேர்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிகாரர்கள் வேர்கடலையை எந்த வித பயமுமின்றி தாராளமாகச் சாப்பிடலாம். வேர்கடலையில் உள்ள மெக்னெசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும், ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மை உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.
வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்கடலையில் உள்ளன?
ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியதுக்கு உள்ளது. வேர்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும். வேர்கடலையில் நார்சத்து அதிகம். வேர்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும்.
வேர்கடலை சாப்பிட்டவுடன் "சாப்பிட்டது போதும் என்ற திருப்தி மிக விரைவில் வந்து விடும். எனவே வேர்கடலையை சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிடவேண்டும் என்று தோன்றாது. இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொரித்து உடல் எடையை அதிகரித்து கொள்ளும் பிரச்சனை இல்லை.
வேர்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது, இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்பு கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.