தாவரங்களில் மனிதர்கள் உண்ணக்கூடிய கீரை வகைகளில் அதிக சத்துகள் நிறைந்துள்ளது. அந்த வகையில், மனிதனுக்கு தேவையான பல சத்துக்களையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளது அகத்திக்கீரை. வீட்டு தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாக அகத்திக்கீரை பயிரிடப்படுகிறது.
அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா நாடாகும். அதிக பட்சம் ௧௦ மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்ட அகத்திச்செடி மென்மையான கட்டை வகையாகும். அகத்திச்செடியில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் உள்ளன. இலைகள் இரட்டை சிரகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களை கொண்ட அகத்தியை சாதாரண அகத்தி என்றும், சிவப்பு பூக்களை கொண்ட அகத்தியை செவ்வகத்தி என்றும் நடைமுறையில் அழைக்கிறோம். அகத்தி கீரை மற்றும் பூக்களை மனிதர்கள் உட்கொள்ளலாம்.
இவற்றில் ஈரப்பதம் 73 சதவிகிதம், புரதச் சாத்து 83 சதவிகிதம், தாதுஊப்புகள் 3.1 சதவிகிதம், நார்சத்து 2.2 சதவிகிதம், மாவுச்சத்து 12 சதவிகிதம், கொழுப்புச்சத்து 1.4 சதவிகிதம், என்ற அளவில் உள்ளன. தாது உப்புக்களில் சுண்ணாம்பூச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. வைட்டமின் 'ஏ' தயாமின், நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின் 'சி' போன்றவை அடங்கிஉள்ளன. அகத்தி மரப்பட்டையில் டானின், பிசின் குணங்கள் நிறைந்துள்ளன. இந்த குணங்கள் நச்சை நீக்கும் தன்மையுள்ளதால், அலோபதி மருந்து சாப்பிடும் காலங்களில் அகத்தி கீரை, பூ போன்றவற்றை தவிற்க வேண்டும்.
அகத்தி கீரை பித்தம் போக்கும்; ஜீரண சக்தியை உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுதரும். வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் அதிக அளவில் இருப்பதால் உடல் வளர்ச்சியை கொடுக்கும்; கண் பார்வை தெளிவாக்கும். அகத்தி கீரையை நறுக்கி, வதக்கி சாப்பிடலாம். பூக்களில் மகரந்த பூக்களை நீக்கி விட்டு, வறுத்து சாப்பிடலாம். பூக்களை கசாயமாக்கி குடிக்கலாம். இலைச்சாறை தேனில் கலந்து சாப்பிடலாம்.
அகத்தி பூவை சமைத்து சாப்பிடும் போது மலச்சிக்கல் நீங்கும். அகத்தி கீரை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி விதம் சாப்பிட்டால், ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு நோய் நீங்கும். அகத்தி கீரை சாறு ஒரு ஸ்பூன் உடன், அதே அளவு தென் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி தீரும். கீரையை அரைத்து அடிபட்ட புண் மீது வைத்து கட்டினால், காயம் குணமாகும். அகத்தி கீரை பொடியை பால் அல்லது நீரில் கலந்து குடித்தால் வயிற்று வலி நீங்கும்.
அகத்தி பூ சாறு எடுத்து, நெற்றியில் பூசினால் தலைவலி போகும். அகத்தி கீரை சாறு ஒரு துளியை முக்கில் விட்டால் ஜலதோஷம் நீங்கும். அகத்தி பட்டை கஷாயம் காய்ச்சலின் போது உட்கொள்ளலாம். கீரை உடல் சூட்டை தணித்து, பித்த நோயை நீக்கும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு அகத்தி கீரை அருமருந்து. இது மலத்தை இளக்கி வெளியேற்றும். அகத்தி கீரை மற்றும் பூவை இரவு வேளை உணவில் சேர்த்துகொள்ளுவதை தவிர்க்க வேண்டும். அகத்தி செடியில் வேர் முதல் நுனி வரை மனித குலத்துக்கு பயனுள்ளதாக உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் அகத்தி செடியை வள்ர்த்தால் ஆரோக்கியம், ஆனந்த வாழ்வும் கிடைக்கும்,