Pages

Saturday, December 7, 2013

ஒவ்வொரு மரமும் ஒரு வரம்!



மரங்கள் இயற்கை மனிதனுக்கு அளித்த மிகப்பெரிய பொக்கிஷம். ஆனால், மரத்தின் மகத்துவம் தெரியாமல்,பல்லாண்டுகளாக நம்மோடு உறவாடிய மரங்களை, ஒரு கணத்தில் வெட்டும் செயல் தொடர்கிறது. இச்செயல் நம்மை நாமே புதை குழிக்குள் தள்ளுவதற்கு நிகரானது.

அதனால் மரம் வெட்டுவதை ஒருகாலத்திலும் அனுமதிக்கக்கூடாது. மரம் வெட்டுவதற்கு முன்பு, மரங்களால் மனித இனம் எவ்வாறு சுகமாக வாழ்கிறது என்பதை சிறிது அறிந்தால் போதும். மரம் வெட்டும் எண்ணமே, துளி கூட இல்லாமல் போகும். மனித இனம் மரங்களை பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறது. பயங்களின் பட்டியலில் சிற்சில மட்டும் இங்கே...
  • மரங்கள் உணவை தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கை கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமாக உணவை தயாரிக்கும் திறனை பெற்றுள்ளன. நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராணவாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று.
  • வேலை நேரம் தவிர, நாம் பெரும்பாலான நேரத்தை வீட்டில் தான் கழிக்கிறோம். வீட்டை சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும். மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர் புறங்களிலும் வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப் படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியை தருகின்றன. மரங்கள் மழையை தருகின்றன. வானில் மழை மேகம் உருவாகும்போது, மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப் படுகிறது. இதனால், அப்பகுதியில் மேகங்கள் மழையை பொழிகின்றன.
  • மரங்கள் மண்ணரிப்பை தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு, ஆறு குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால், ஒருபுறம் வளமான மேல்மண் அரித்து செல்வதும், மறுபுறம் ஆறுகள்,  குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமல் வேர்கள் இறுக பிடித்துக் கொள்கின்றன. இதனால் அடிமண் அடித்து செல்லப் படாமல் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.
  • கோடையில் அனல் காற்று வீசும்போது, நிலம் வண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்து செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனம் ஆகாமல் தடுக்கப்படுகிறது. புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள், வேர்களில் மண்னை சேகரித்து வைப்பதால், அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் தான் 'அலையாத்தி காடுகள்' என்ற பெயரும் வந்தது.
  • பலமான வேர்களை கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது. உயிரோடு இருக்கும் போது மட்டுமின்றி இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக, எரிபொருளாக பயன்படுகிறது. மரமும் பலவகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன.
  • கட்டுமான பொருட்களில் இருந்து வீட்டு தேவைகள், அலங்கார பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களை கொண்டே தயாரிக்கப்படுகின்றன. அதனால், மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும். இன்னும் நிறைய மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும்.

No comments: