உணவு விஷயத்தில் நாம் எந்த அளவுக்கு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்? கட்டுப்பாடாக இல்லாவிட்டால் உடலின் எந்தெந்த பாகங்கள் பாதிக்கப்படும்?- விளக்குகிறார் காஸ்ட்ரோ என்டராலஜிஸ்ட் டாக்டர் உஷா ஸ்ரீனிவாஸ்:
மனிதன் உயிர் வாழ உணவு அவசியம். ஆனால், கிடைத்ததையெல்லாம் ஒரு வெட்டு வெட்டுவது என்றால் அவஸ்தைப்பட வேண்டியதுதான். ' இதைச் சாப்பிடு, இதை சாப்பிடாதே' என சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறோம். சாதாரணமானவர்களுக்கே இப்படியென்றால் நோயாளிகளுக்குக் கேட்கவே வேண்டாம். உதாரணமாக நிரழிவு நோயாளிகள் தங்களுக்கு ஒவ்வாத உணவு வகைகளை உண்டால், அது வயிற்றிலிலுள்ள காஸ்ட்ரிக் இன்டஸ்டைனைப் பாதிக்கும். வயிற்றுப் போக்கு, வாந்தி என துவங்கிவிடும். இதை 'அட்டானமிக்' நியுரோபதி என்பார்கள் மருத்துவர்கள்.
ஹைப்போ தைராய்டு பாதிப்பு ஏற்பட்டால், தைராய்ட் ஹார்மோன் குறைவாகச் செயல்படும். அப்போது உடல் எடை கூடிவிடும் ஆபத்து இருக்கிறது. லிவரில் கொழுப்புச் சத்து படிந்துவிடும். அப்படி ஆகும்போது, லிவர் இயக்கம் பாதிக்கப்படும். லிவரில் கொழுப்பு அதிக காலம் தங்கிவிட்டால் அது கான்சரில் கொண்டு விடும். லிவர் பெரிதாவது, வீக்கம் ஏற்படுவது எல்லாம் அதன் இயக்கத்தைப் பாதிக்கும். சுருங்கிப் போனாலும் ஆபத்து தான்.
'சிரோஸிஸ் ஆஃப் த லிவர்' நேரும் அபாயம் இருக்கிறது. ஆசிடிடி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆசிட் மேலே எதிர்த்து வருவதை 'ரீஃப்ளெக்ஸ்' என்பார்கள். அதனால் உணவுக்குழாய் பாதிக்கப்படும். ஈஸஃபேகஸ் பகுதியில் புண் வந்து அது வருடக்கணக்காக இருந்துவிட்டால், அதற்கும் கேன்சர் தான் முற்றுப் புள்ளி. அதனால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
ஜீரணப்பாதையில் வரும் புற்றுநோய் (டைஜெஸ்டிவ் டிராக் கான்செர்) அந்த பாதையின் மேல் பாகத்தில் உருவாகத் தொடங்கும். உணவுக்குழாய், வயிறு அல்லது பெருங்குடலின் கீழ் பகுதியிலோ மலக்குடலிலோ இது தோன்றும். இந்த வகை நோய்களுக்குச் சிகிச்சை அளித்த பிறகும் கூட, அந்த நோய் நம்மை விட்டு போய் பூரண குணம் அடைந்துவிடுவோம், முன்னெச்சரிக்கையாக என்று எச்செரிக்கை உணர்வை ஊட்ட, நமது உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.
உணவுக்குழாயில் வரும் புற்று நோயைத்தான் ஈஸஃபேகஸ் கேன்சர் என்கிறார்கள். இந்த நோய் பொதுவாக தங்குமிடம், உணவுக்குகுழலையும் வயிற்றுப் பகுதியும் சேர்கிற இடமாகும். இதன் அறிகுறியாக உணவு சாப்பிடுவதே மிகவும் கஷ்டமாக இருக்கும். நோய் தீவிரமாகிவிட்டால் திரவ வடிவில் இருக்கும் உணவு கூட ஜீரணமாகாமல் அவதியை உண்டாக்கும். இதனால், உடலுக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து கிடைக்காததால் உடல் எடை குறையத் தொடங்கும். வயதானால் வரும் மலச்சிக்கல் இன்னொரு பிரச்னை. உணவில் நார்ச்சத்து குறைந்து விட்டால் வரும். நார்ச்சத்து பழங்கள் காய்கறிகள், ஒட்ஸ் மற்றும் கேழ்வரகு பொன்ற தனியங்களில் இருக்கிறது.
ரீபைன்ட் உணவு வகைகள், பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, மைதா, பிட்சா, சீஸ் என நமது வாழ்க்கை முறை மேற்கத்திய பாணிக்கு மாறிக் கொண்டிருக்கிறது. அப்படி ஆகும்போது மலச்சிக்கல் பாதிக்கத்தான் செய்யும். அவர்களுக்கு வாரத்தில் மோஷன் ஆச்சு என்றால் அது நார்மல். நமக்கு தினசரி 2 அல்லது 3 வேலை மோஷன் ஆனால் கூட அது நார்மல் தான். மலக்குடல் வேகத்துடன் சுருங்கும்போது, டைவர்ட்டிகுலம் எனப்படும் பகுதி, சின்ன சின்ன பாக்கெட்டுகளாக உருவாகி, கிருமித் தொற்று மற்றும் ரத்தம் கசியும் நிலை ஏற்படும்.
No comments:
Post a Comment