Pages

Saturday, December 7, 2013

ஒவ்வொரு மரமும் ஒரு வரம்!



மரங்கள் இயற்கை மனிதனுக்கு அளித்த மிகப்பெரிய பொக்கிஷம். ஆனால், மரத்தின் மகத்துவம் தெரியாமல்,பல்லாண்டுகளாக நம்மோடு உறவாடிய மரங்களை, ஒரு கணத்தில் வெட்டும் செயல் தொடர்கிறது. இச்செயல் நம்மை நாமே புதை குழிக்குள் தள்ளுவதற்கு நிகரானது.

அதனால் மரம் வெட்டுவதை ஒருகாலத்திலும் அனுமதிக்கக்கூடாது. மரம் வெட்டுவதற்கு முன்பு, மரங்களால் மனித இனம் எவ்வாறு சுகமாக வாழ்கிறது என்பதை சிறிது அறிந்தால் போதும். மரம் வெட்டும் எண்ணமே, துளி கூட இல்லாமல் போகும். மனித இனம் மரங்களை பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறது. பயங்களின் பட்டியலில் சிற்சில மட்டும் இங்கே...
  • மரங்கள் உணவை தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கை கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமாக உணவை தயாரிக்கும் திறனை பெற்றுள்ளன. நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராணவாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று.
  • வேலை நேரம் தவிர, நாம் பெரும்பாலான நேரத்தை வீட்டில் தான் கழிக்கிறோம். வீட்டை சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும். மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர் புறங்களிலும் வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப் படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியை தருகின்றன. மரங்கள் மழையை தருகின்றன. வானில் மழை மேகம் உருவாகும்போது, மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப் படுகிறது. இதனால், அப்பகுதியில் மேகங்கள் மழையை பொழிகின்றன.
  • மரங்கள் மண்ணரிப்பை தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு, ஆறு குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால், ஒருபுறம் வளமான மேல்மண் அரித்து செல்வதும், மறுபுறம் ஆறுகள்,  குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமல் வேர்கள் இறுக பிடித்துக் கொள்கின்றன. இதனால் அடிமண் அடித்து செல்லப் படாமல் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.
  • கோடையில் அனல் காற்று வீசும்போது, நிலம் வண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்து செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனம் ஆகாமல் தடுக்கப்படுகிறது. புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள், வேர்களில் மண்னை சேகரித்து வைப்பதால், அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் தான் 'அலையாத்தி காடுகள்' என்ற பெயரும் வந்தது.
  • பலமான வேர்களை கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது. உயிரோடு இருக்கும் போது மட்டுமின்றி இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக, எரிபொருளாக பயன்படுகிறது. மரமும் பலவகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன.
  • கட்டுமான பொருட்களில் இருந்து வீட்டு தேவைகள், அலங்கார பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களை கொண்டே தயாரிக்கப்படுகின்றன. அதனால், மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும். இன்னும் நிறைய மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும்.

விமான பைலட் ஆக விருப்பமா?



விமான போக்குவரத்து சேவையில் விமானி(பைலட்), விமானப் பணிப்பெண்கள் (ஏர் ஹாஸ்டஸ்) ஆகியோர் முக்கியமானவர்கள், ஒரு விமானத்துக்கு விமானிதான் தலைவராக இருப்பார். அவருக்கு உதவியாக துணை விமானி இருப்பார். விமானம் பறக்கும் பயணத்தை திட்டமிடுவது, வானிலை தகவல்களை அறிக்கைகள் மூலம் அறிவது, ஓட்டுவதற்கேற்ப காற்று நிலைக்கு உகந்து நிலையில் விமானம் இருக்கிறதா என அறிதல், விமானத்தில் உள்ள பொருட்களை கண்காணித்தல், விமானம் ஓட்டுவது தொடர்பான தகவல்களை தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அவ்வப்போது தெரிவித்தல் ஆகியவை விமானியின் பணிகள். விமானியாவதற்கு உரிய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமானால், அதற்கான உரிமங்களை பெற்றாக வேண்டும்.

மாணவர் பைலட் லைசென்ஸ்:

விமானியாவதற்கு முன் மாணவர் பைலட் லைசென்ஸ் பெற வேண்டும். பிளையிங் கிளப் நிறுவனத்தில் சேர்த்து அதற்கான பயிற்சியைப் பெற்றுத் தேர்ச்சியடைய  வேண்டும். லைசென்ஸ் பெற 60 மணி நேரம் விமானத்தில் பறந்திருக்க வேண்டும். இதில் 20 மணி நேரம் பயிற்சியாளருடனும் 20 மணி நேரம் தனியாகவும் பறந்திருக்க வேண்டும். 5 மணி நேரம் நாட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு பறக்க வேண்டும்.

அத்துடன், ஏர் ரெகுலேஷன், நேவிகேஷன், ஏவியேஷன் மீட்டிரியாலஜி, ஏர்கிராப்ட், என்ஜின் ஆகியவற்றை கையாளும் பயிற்சியையும் பெறவேண்டும். குறைந்தது 17 வயது நிரம்பியவர் இதில் சேரலாம். இயற்பியல், கணிதம் ஆகியவற்றை படித்து, பிளஸ் 2வில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மருத்துவத் தகுதிச் சான்றிதழ், செக்யூரிட்டி கிளியரன்ஸ் ஆகியவை பெற்றிருக்க வேண்டும்.

தனியார் பைலட் லைசென்ஸ்:

மாணவர் விமானி உரிமம் பெற்றவர்கள் பயிற்சியாளருடன் சேர்ந்து பறக்கலாம். இது 'டூயல் பிளை' என்று குறிப்பிடப்படுகிறது. இருவராக பறக்கும்போதே பயிற்சியை பெறலாம். 15 மணி நேரம் பயிற்சி பெறுவர். இந்த உரிமத்தைப் பெற மொத்தம் 60 மணி நேரம் பறக்க வேண்டும். இதற்குக் கல்வி தகுதி பிளஸ் 2. டெல்லியிலுள்ள விமானப்படை மத்திய மருத்துவ நிறுவனம் அல்லது பெங்களுருவிலுள்ள நிறுவனத்தில் தகுதிச் சான்றிதழ்  பெறவேண்டும். அத்துடன் நுழைவுத் தேர்வையும் எழுத வேண்டும். அதில், ஆங்கில அறிவு, பொது அறிவு, கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய திறன்கள் சோதிக்கப்படும்.

வணிக பைலட்:


வணிக பைல்ட் லைசென்ஸ் பெற, 250 மணி நேரப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். பிளஸ்2 முடித்தவர்கள் தனியார் பைல்ட் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் விமானம் ஒட்டிய அனுபவம் தேவை. உடல் தகுதிச் சான்றிதழ் பெறவேண்டும். விமானம் ஒட்டும் தகுதியைப் பெறுவதற்குப் பி.எஸ்.சி., ஏவியேஷன், பி.இ., ஏர்லைன் இன்ஜ்., அண்ட் மேனேஜ்மென்ட், பி.இ., ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜி., பி.டெக்., ஏரோநாட்டிகல் ஆகிய ஏதாவதொரு படிப்பை முடிக்க வேண்டும்.

செல்லப்பிராணி வளர்ப்பது நல்லதா?

உங்களிடம் செல்லப் பிராணி உள்ளதா? வள்ர்ப்பு நாய் உள்ளதா? அப்படியானால் அவை உங்கள்  உடல்நலத்துக்கு பயன் தரலாம். அமெரிக்க உடல்நலக் கழகம் செல்லப்பிராணி வளர்ப்பது நம் உடல்நலத்துக்கு பலன் தருமா என்ற ஆய்வை கலந்த 2008ம் ஆண்டு நடத்தியது.

ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்;

விஞ்ஞானிகள், மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 421 இருதய நோயாளிகளை நோய் ஏற்பட்ட ஓராண்டுக்குப் பின் பரிசோதித்தனர். இவர்களில் மாரடைப்பின் போது தீவிரத்துக்கு பின் செல்ல நாய் வளர்க்காதவர்களை விட, வளர்த்தவர்கள் நலமுடன் இருப்பதாக தெரியவந்தது.

மற்றொரு ஆய்வின் படி, 2,000 நடுத்தர வயதினரை பரிசோதித்ததில் சொந்தமாக செல்ல நாய் வளர்த்தவர்களும், நாயுடன் நடைபயிற்சி மேற்கொள்பவர்களும்  உடல் பருமனின்றி நல்ல ஆரோக்கியதுடனும் சுறுசுறுப்பாக இருப்பது தெரிய வந்தது.

சற்று வயது முதிர்ந்தவர்களை பரிசோதனை செய்ததில் தசை, மூட்டு வலியின்றி ஆரோக்கியமாக இருப்பது தெரிய வந்தது. நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் வீட்டுக்கு வெளி இடங்களில் நண்பர்கள், உறவினர்களிடம் மனம் விட்டு பேசவும், நட்புறவை நீடிக்கவும், உதவுகிறது.

இது மனதுக்கும், உடலுக்கும் தெம்பளிக்கும் விதமாக இருப்பதால் வயதாவது குறித்து கவலையின்றி நீண்ட நாட்கள் வாழ பிடிப்பை தருகிறது. செல்ல நாய் வளர்ப்பதால் மன அலர்ஜி நீங்குகிறது.

Friday, December 6, 2013

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?


இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டா கடை. அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா தூத்துகுடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே.

பரோட்டாவின் கதை
ன்தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?


மைதா மாவுல உப்பு போட்டு தண்ணி விட்டு பிசஞ்சு அப்புறம்
எண்ணெய் விட்டு உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி அடித்து, பெரிய கைகுட்டை போல் பறக்கவிட்டு அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலப்பொருளான மைதாவில் தான் பிர
ச்சினை தொடங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கபடுகிறது. நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உள்பட.

மைதா எப்படி தயாரிக்கிறார்கள்?

நன்றாக மாவாக அரைக்க பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை Benzoyl peroxide என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள் அதுவே மைதா.

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம். இந்த
ரசாயனம் மாவில் உள்ள Protein உடன் சேர்ந்து நீரழிவுக்கு காரணியாய் அமைகிறது. இது தவிர Alloxan என்னும் ராசயினம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. மேலும் Artificial Colors, mineral oils, taste makers, Preservatives, sugar Saccarine, Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது.

இதில்
Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது. ஆக பரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணை புரிகிறது. மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்தது அல்ல, மைதாவில் நார் சத்து கிடையது. நார் சத்து உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும். இதில் சத்துகள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகளை மைதாவினால் செய்த பேக்கரி பண்டங்களை உன்ன தவிர்ப்பது நல்லது.

Europe Union, UK, China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன.

மைதா நாம் உட்கொள்ளும் போது
சிறுநீரக கல், இருதய கோளாறு, நீரழிவு போன்றவை  வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு.

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர். மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்
ப்பித்துள்ளனர்.

இப்போது ஆவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.


நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம்.

சம்பங்கி பூவில் இத்தனை மகத்துவமா!

சம்பங்கி பூ


பூஜைக்கு உகந்த சம்பங்கிப்பூ, மருத்துவ குணம் நிறைந்த மலர்களில் சற்று வித்தியாசமானது. மயக்கும் நறுமணம் கொண்டது. சம்பங்கி பூவின் இதழ்களுக்கு, தண்டும் அழகு சேர்க்கும் வகையில் தோற்றமுடையது. சம்பங்கி பூஜைக்கு ஏற்ற பூவாக மட்டும் இல்லாமல்,பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டது.




சம்பங்கி தைலம்

அரை கிலோ தேங்காய் எண்ணையில், 50 கிராம் பூவை போட்டு நான்கு காய்ச்சி இறக்க வேண்டும். காய்ச்சிய எண்ணைய்தான் 'சம்பங்கி தைலம்' என அழைக்கப் படுகிறது. இதனை உச்சி முதல் பதம் வரை நன்றாக தேய்த்தால் உடல் வலி தீரும். சம்பங்கி பூவில் பவுடரும் தயாரிக்கலாம். 100 கிராம் சம்பங்கி, 20 கிராம் வெள்ளரி விதை, 20 கிராம் பயத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து முழுமுழுவென அரைத்து கொண்டால் பவுடர் ரெடி. இந்த தைலம் தேய்த்து குளிக்கும்போது, பவுடரையும் கலந்து குளித்தால் மேனி பளபளக்கும்.

பலன்கள்

நான்கு சம்பங்கி பூவுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணைய் கலந்து அரைத்து, சூடு பறக்க நெற்றிப்பகுதியில் தடவி வந்தால் தலைவலி குறையும். ஒரு டம்ளர் நீரில் ஐந்து சம்பங்கி பூவை போட்டு, பாதியாக சுண்டும் வரை காய்ச்சி, அந்த தண்ணீரை காலை, மாலை குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும். நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும்.

சம்பங்கி பூவை சிறிது தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். அதை கண்களை சுற்றி பூசி 10 நிமிடத்திற்கு பிறகு கழுவ வேண்டும். கண்நோய் சம்பந்தப்பட்ட வலி, எரிச்சல், நீர் வடிதல், வறட்சி போன்ற பிரச்னைகள்  தீரும். கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். கண்கள் பளிச்சிடும் வகையில் இருக்கும். காய்ச்சிய பாலில் இரண்டு சம்பங்கி பூவை போட்டு ஆற வைக்க வேண்டும். இதில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் விதம் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் உடல் தெம்பும், பலமும் பெரும்.

200 கிராம் நல்லெண்ணையுடன் 50 கிராம் சம்பங்கி பூவை போட்டு காய்ச்ச வேண்டும். இதில், சிறிது விளக்கெண்ணைய் கலந்து கணுக்கால் மற்றும் பாதத்தில் தடவி வந்தால் சொரசொரப்பு, வெடிப்பு மறையும். இதில் விளக்கெண்ணைய் சேர்க்காமல் நன்றாக ஆற வைத்து எலுமிச்சை சாறை கலந்து, ரசத்தை ஒரு பத்திரத்தில் ஊற்றி, குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். இதை தினமும் காலை மாலை நேரத்தில் பாதத்தில் தடவி வந்தால் பாதம் மேன்மையாகும். சம்பங்கி இலையை மையாக அரைத்து பாதத்தில் தடவி வந்தால் பாதவலி நீங்கும்.

ஒரு கைப்பிடி சம்பங்கி பூவை, கொதிக்கும் நீரில் போட்டு வாரமிருமுறை ஆவி பிடித்து வந்தால் முகத்தில் ஏற்பட்ட பருக்கள், தழும்புகள் மறையும். சம்பங்கி பூ இரண்டு, தேங்காய் பால் இரண்டு தேக்கரண்டி அளவு கலந்து நன்கு அரைத்து முகத்தில் பூசினால் முகம் புத்துணர்ச்சி பெரும். இதுபோன்று பல்வேறு மருத்துவ பயன்கள் உள்ளன.

ஈட்டி மரத்துக்கு இவ்வளவு மவுசா!

'ஈட்டி மரத்தை இரும்புக்கு இணையானது' என்று கூறுவர். தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்த மரத்தின் தமிழ் பெயர் தோதகத்தி. ஆங்கிலத்தில் ரோஸ்‌வுட் என்று அழைக்கப்படுகிறது. அதிகம் மழைப் பொலிவு உள்ள ஈரப்பாங்கான பகுதி மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் இம்மரம் அதிகம் வளர்கிறது.

குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தக்காண பீடபூமி பகுதிகளில் அதிகம் உள்ளன. தமிழகத்தில் கோவை, ஆனைமலை, வெள்ளியங்கிரி மலை மற்றும் நீலகிரி மாவட்டங்‌களில் ஈட்டி மரங்கள் அதிகம் உள்ளன.

தமிழகத்தில் பரவலாக மலை மற்றும் வனப்பகுதியில் மட்டும் வளர்கிறது. இம்மரம் மிக உயரமாக வளரக்கூடியது. சுமார் 35 மீட்டருக்கு மேல் வளரும். நன்றாக வளர்ந்த மரத்தின் சுற்றளவு 6 மீட்டர் வரை இருக்கும்.

25 மீட்டர் உயரம் வளர 80 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகள் பழமையான மரமாக தோதகத்தி  விளங்குகிறது. உதாரணமாக, கிறிஸ்து பிறப்பதற்கு 3,500 ஆண்டுகள் முன்பாகவே இம்மரம்
இருந்துள்ளது என,  புதைபொருள் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. சிந்து சமவெளி மற்றும் ஹராப்பா அகழ்வாராய்ச்சியின் போது வீடுகளுக்கு உத்திரமாக பயன்படுத்தப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. பழங்‌காலத்தில்
கடல் வாணிப் பொருளாக இம்மரம் இடம் பெற்றுள்ளது.

ஆங்‌கிலேயர்களின் ஆட்சி காலத்தில் ஆனைமலை டிரஸ்ட் என்ற வணிக குழுவினர். 4.8 மீட்டர் நீளம் 2.4 மீட்டர் அகலம் கொண்ட ஈட்டி மரப் பலகையில் அழகிய வேலைப்பாடு உள்ள மேசை ஒன்று தயாரித்து, வெல்லிங்டன் சீமாட்டிக்கு பரிசளித்துள்ளனர். அந்த மேசை தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது. இம்மரத்தின் சிவந்த நிறமும், உறுதித்தன்மையும் அனைவரையும் கவர்ந்தது. அதனால் ஆடம்பரமான வீட்டு  உபயோக பொருட்கள் தயாரிக்க இம்மரங்கள் அதிகம் வெட்டி அழிக்கப்பட்டன. 

அதனால், அதன் எண்ணிக்கை குறைந்து விட்டது. 1963ல் வனச்சட்டத்தின் படி, ஈட்டி தேசிய மரமாக அறிவிக்கப்பட்டது. ஈட்டி, தேக்கு மரத்தை விட அதிகம் உறுதியானது என்பதால் இதன் விலை மதிப்பும் அதிகம். அதனால், விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமே தயாரிக்கப் படுகிறது. மிகவும் நுட்பமான வேலைப்பாடு கொண்ட மேசை, நாற்காலிகள், கட்டில், பிரோ மற்றும் ரயில் பெட்டிகள் தயாரிக்க இம்மரம் பயன்படுகிறது. இன்றைக்கு இதன் விலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து விட்டது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து 30 கோடிக்கு மேல் வெளிநாடுகளுக்கு எற்றுமதி செய்வதில்லை. 

ஆனால் மரப்பொருட்கள் மற்றும் பிளைவுட்டுகளாக தயாரிக்கப்பட்டு எற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், போதுமான அளவு எற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தோதகத்தி மரத்தை 500 மீட்டர் உயரத்தில் உள்ள இடத்தில் மட்டுமே பயிரிட முடியும். குறைந்து பட்சம் 1000 மில்லி மீட்டர் மழை உள்ள இடங்களில் மட்டுமே இம்மரம் வளரும். வற்றாத ஆற்றங்கரை ஓரங்களில் நடலாம். தேக்கு மரக்காடுகள் ஊடே நடலாம். ஆரம்பத்தில் தோதகத்தி, தேக்கு மரத்தைவிட குறைவாக வளரும். நன்றாக வளர்ந்த பிறகு தேக்கை விட வேகமாக வளரும். ஈட்டி மரத்தை பிற மரங்களோடு சேர்த்து   இரண்டு, மூன்று மரங்களை வளர்க்கலாம்.

தேனின் மருத்துவ குணங்கள்


  • மாதுளம்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால், புதுரத்தம் விருத்தியாகும்.
  • எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், இருமல் குணமாகும்.
  • நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், இன்சுலின் சுரக்கும்.
  • ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால், நல்ல தூக்கம் வரும்.
  • பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.
  • ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால், உடல் சுடு தணியும்.
  • தேங்காய் பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.
  • பாலில் தேன் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும். இதயம் பலம் பெரும்.
  • இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
  • கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால், ரத்த சோகை நீங்கும்.
  • தேனில் சுண்ணாம்பு கலந்து உடலில் ஏற்படும் கட்டிகள் மீது தடவினால், உடையும்.