இன்றைய காலத்தில் சிறுமிகள் 11-14 வயதில் பருவம் அடைகின்றனர். இது 9-15 வயது வரையிலும் கூட மாறுபடுகின்றது. இதுவே சிறுமி பெண்ணாகும் காலமாக குறிக்கப்படுகின்றது. இக்கால கட்டத்தில் சிறுமியின் உடலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. பருவம் எய்துவது அப்பெண்ணின் மனநிலை, சூழ்நிலை கொண்டு சற்று சீக்கிரமாகவே நிகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதற்கான காரணங்கள்:-
* குழந்தையிலிருந்தே குண்டாயிருத்தல்
* அப்பா அருகில் இல்லாமல் வளரும் குழந்தை பருவம்
* குடும்பத்தில் உறவினர்களிடையே மோதல்
* பிறக்கும் பொழுதே மிகக் குறைந்த எடை
* அதிகம் சிகரெட் புகை சூழலில் வளர்ந்தவர்கள்
* தாய் பால் போதுமான காலம் பெறாத குழந்தை
* ஓடி ஆடி விளையாடாத குழந்தை ஆகியவை ஆகும்.
முறையான காலத்தில் பருவம் எய்துபவர்களுக்கு ஆய்வுகள் கூறும் காரணங்கள்:-
* பெரிய குடும்பம்
* குடும்பத்தினரிடையே சுமூகமான உறவுகள்
* வீட்டில் உள்ள மூத்த சகோதரிகள் ஆகியவை ஆகும்.
நம் நாட்டில் பெண் பருவமடைவதை ‘மஞ்சள் நீராட்டு விழா’ என்று கொண்டாடுவதைப் போல் ஜப்பான் போன்ற வேறு சில நாடுகளிலும் பெண் பருவமடைவதை வீட்டு உறுப்பினர்கள் விழாவாகக் கொண்டாடுகின்றனர்.
Healthy Tips, Natural Beauty, Beauty Tips, Beauty care Skin Care, Hair Beauty, Vegetable Recipes, Natural Food, Indian Recipes, New Recipes, Easy Recipes, Healthy Recipe, Cookery, Healthy Food, Breakfast Recipes, Top Secret Recipes --Visit this blog to know more!
Monday, February 1, 2016
Friday, January 29, 2016
மார்பகக் கட்டியைப் பரிசோதிக்க எளிய வழிகள்
மார்பகப் புற்றுநோயின் தாக்கம் பெண்களுக்கே அதிகம். அதற்காகவே அரசு தற்போது 40 வயது ஆன பெண்கள் கண்டிப்பாக மார்பகப் புற்றுநோய்க் கோளாறுகள் உள்ளதா என்பதைப் பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவு போட்டுள்ளது.
ஒவ்வொரு பெண்ணும் தன் மார்பகத்தில் கட்டியிருக்கிறதா என்பதை தங்களுக்குத் தாங்களே பரிசோதனை செய்து கொள்வது எப்படி?
இதோ சில எளிய வழிமுறைகள்:
உள்ளங்கையால் மார்பை அழுத்தவும். அப்போது அந்தக் கட்டி அசைந்தாலோ, நகர்ந்தாலோ, உருவமாக இருந்தாலோ அவை பெரும்பாலும் சாதாரண கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு இல்லாமல் அக்கட்டியானது உருவமே (வடிவமாக உருண்டையாகவோ) இல்லாமல் இருந்தாலோ, நகராமல் இருந்தாலோ அவை கேன்சர் கட்டியாக வாய்ப்புள்ளது.
மேலும் இந்தச் சோதனையும் செய்து பார்க்கலாம். ஒரு கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு இரண்டு கைகளையும் மேலே தூக்கும்போது மார்புக் காம்புகள் நேர்கோட்டிலே இருக்க வேண்டும். மேலும் கீழுமாக இருந்தால் அவை பரிசோதனை செய்ய வேண்டியவையே.
பரிசோதனை காலம் வரையிலும் பசுமாட்டின் கோமியமும் தேனும் கலந்து குடிப்பது மிகவும் நல்லது. கோமியம் என்பது பல பெரிய நோயையும் குணமாக்கும் வல்லமை வாய்ந்தது.
கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியமா?
கர்ப்பிணிகள் ‘எந்த வேலையும் செய்யக் கூடாது’ என்றும், அவர்கள் ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்றும் கருதுகிறார்கள். இது தவறு. குழந்தை 3 கிலோ அளவில்தான் பிறக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் 6 முதல் 10 கிலோ மட்டும் எடை கூடினால் போதுமானது.
தற்போது, பல கர்ப்பிணிகள் 10 மாத காலத்துக்குள் 20 கிலோவுக்கும் அதிகமாக எடை அதிகரித்துவிடுகின்றனர். சிலர் பி.எம்.ஐ அளவு 32 ஐ தாண்டிவிடுகிறார்கள். இதற்கு, உடற்பயிற்சி இன்மை மற்றும் உணவுக்கட்டுப்பாடு இன்மையே காரணம். கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு, அதிக அளவு உடற்பயிற்சி செய்வதோடு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அப்போதுதான், குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். கர்ப்ப காலத்தில் அதிக அளவில் உடல் எடை கூடவில்லை என்றால், நார்மல் டெலிவரிக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும், அறுவைசிகிச்சை செய்வதாலும், ஹார்மோன்கள் கோளாறு காரணமாகவும் குழந்தை பெற்ற பிறகு, அதிக அளவு உடல் எடை அதிகரித்துவிடுகிறது.
எனவே, கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியம் தேவை. மேலும் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் யோகா, தியானம் செய்யலாம். எனவே கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகளவில் அதிகரிக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் குழந்தையின் ஆரோக்கியமும், தாயின் ஆரோக்கியமும் இதில் அடங்கியுள்ளது.
வயிற்று கோளாறை தடுக்க எளிய வழி
காலை எழுந்தவுடன் எளிய உடற்பயிற்சி செய்யுங்கள், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். பிறகு காலை நல்ல சத்துள்ள உணவு அதிகமாக சாப்பிட வேண்டும். காலை உணவில் பழங்கள், மற்றும் பால் ஆகியவற்றை சேர்ப்பது நல்லது. பிறகு மதிய உணவு சமச்சீர் உணவாக சாப்பிட வேண்டும்.
மதிய உணவில் பச்சை காற்கறிகள், பழங்கள், பருப்புகள் மற்றும் கீரைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உங்கள் ஹைட்ரேட் மற்றும் உங்கள் பசி உணர்வை குறைக்கும். ஆகையால் தாகம் எடுத்த பின் நீர் அருந்துவதை விட சிறிது இடைவெளியில் ஒரு முறை நாம் நீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும்.
இரவு நேர சாப்பாட்டுக்கு கோதுமை உணவு வகைகளை எடுத்துக் கொள்வது, இரவு ஜீரணத்திற்கு எளிமையானது. சாப்பிட்டவுடன் தூங்க செல்லாமல் சிறிது நேரம் நடந்து விட்டு அல்லது வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்க செல்லலாம். அவ்வாறு செய்வது நாம் சாப்பிட்ட உணவு கலோரிகள் நம் உடலில் தங்கி விடாமல் இருக்கும். நொறுக்குத் தீனி தவிர்ப்பது நல்லது.
இரவு 8 மணிக்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டால் அஜீரண கோளாறில் இருந்து தப்பிவிடலாம். நாம் எடுத்து கொள்ளும் உணவுகளின் கலோரிகளை எரி சக்தியாக மாற்றி விட்டால் வீணாக நம் உடலில் தங்கி கொழுப்பாக மாறாது. அதாவது நாம் சாப்பிடும் உணவுக்கு ஏற்ற வேலையை உடலுக்கு தந்தால் உடல் பருமன் என்பது பறந்து போய் விடும்.
நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப உணவு கலோரிகளை எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் உங்கள் உடல் பருமன் போய் நலினமான உடல் சொந்தமாகும். அசைவ பிரியர்கள் மீன், கோழி தாராளமாக சாப்பிடலாம். அதிக எண்ணெயில் போட்டு வறுக்க கூடாது லேசாக எண்ணெய் தடவி வறுத்து சாப்பிடலாம்.
எலும்புகளுக்கு வலிமை தரும் முருங்கைக்காய்
பலரும் விரும்பி சாப்பிடும் முருங்கைக்காயில் ஊட்டச்சத்துக்களானது நிரம்பியுள்ளது. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம் சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன.
அதிலும் இதனை பாலுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். முருங்கைக்காய் மற்றும் அதன் இலைகள் இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையைக் கொண்டவை. மேலும் இது சிறந்த ஊட்டச்சத்தாகவும் செயல்படும்.
அதற்கு முருங்கைக்காயை சாப்பிடுவதோடு, அதன் இலையை சாறு எடுத்து, சூப்பாகக் காய்ச்சி குடித்து வந்தால், இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, முகப்பரு மற்றும் இதர சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். முருங்கைக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது.
மேலும் இதனை உட்கொண்டு வந்தால், சிறுநீர்ப்பை நன்கு செயல்பட்டு, இதனால் சர்க்கரை அளவு குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும். உங்களுக்கு தொண்டைப்புண், சளி அல்லது இருமல் போன்றவை இருந்தால், ஒரு கப் முருங்கைக்கீரை சூப் வைத்துக் குடித்து வந்தால் சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலைத் தரும்.
குறிப்பாக முருங்கைக்காய் மற்றும் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, காசநோய் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
சுளுக்கு குறைவதற்கு மருத்துவ குறிப்புகள்
ஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி அதன் மேல் புளிய இலையை ஒட்ட வைத்து இரண்டு மணிநேரம் கழித்து வெந்நீரால் உருவி விட்டால் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு குறையும்.
எலுமிச்சை இலைகளை எடுத்து வெண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் சுளுக்கு, வலி குறையும்.
சம அளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் எடுத்து நன்றாக கலந்து சுளுக்கு இருக்கும் இடத்தில் சிறிது விட்டு நன்கு தடவி விட்டு வந்தால் சுளுக்கு குறையும்.
சம அளவு ஆமணக்கு எண்ணெய் மற்றும் பூண்டு எண்ணெயை எடுத்து ஒன்றாக கலந்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் நன்கு தடவி வந்தால் சுளுக்கு குறையும்.
முட்டைகோஸின் வெளிப்புறத்தில் இருக்கும் கடின பகுதியை உரித்து நீர் விட்டு மென்மையாக மாறும் அளவுக்கு நன்றாக காய்ச்சி பிறகு அந்த முட்டைகோஸை எடுத்து பருத்தி துணியில் வைத்து சுளுக்கு இருக்கும் இடத்தில் 3 மணி நேரம் கட்டி வந்தால் சுளுக்கு குறையும்.
பாதாம் எண்ணெய் எடுத்து அதனுடன் பூண்டை அரைத்து அதன் சாறை சேர்த்து நன்றாக கலந்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து பின் நன்றாக தேய்த்து விட்டால் சுளுக்கு குறையும்.
Wednesday, January 27, 2016
சிம்பிளான அலங்காரம் உங்கள் மதிப்பை கூட்டும்
நீங்கள் அணிந்திருக்கும் உடைக்கு ஏற்றபடி சிம்பிளாக ஆக்ஸசரீஸ் அணிய வேண்டும். சின்ன பிரேஸ்லெட் மற்றும் மெல்லிய மோதிரம்
உங்கள் கம்பீரத்தைக் கூட்டிக் காட்டலாம். பகட்டாகத் தெரிய வேண்டும் என்பதற்காக கைகளில் டஜன் கணக்கில் வளையல்களை
அடுக்குவதும், காது அறுந்துவிடும் அளவுக்கு மெகா சைஸ் கம்மலை அணிவதும் கூடாது.
அதிக சத்தம் வராத கொலுசு அணியலாம். கொலுசு மற்றும் வளையல்களில் இருந்து எழும் சத்தம் பிறரை டிஸ்டர்ப் செய்யாத வகையில் இருக்க வேண்டும். கழுத்தையொட்டி மெல்லிய செயினும் விரும்பினால் அதில் சிறிய டாலரும் கோர்த்து அணியலாம். நகைகள் அணிந்து செல்ல வேண்டியது முக்கியம் என்றால் முத்துக்கள் பதித்த மாலையை அணியலாம்.
இது எந்தவித ஆடைக்கும் பொருந்திப் போவதுடன் உங்கள் தோற்றத்தையும் ரிச்சாக காட்டும். ஸ்டிராப் வைத்த ஷூக்களைத் தவிர்த்து கால் முழுக்க கவர் செய்கிற ஷூக்களை அணியலாம். பாயிண்ட் ஹீல் வகையறாக்கள் முதுகுவலியை ஏற்படுத்தும் என்பதால் மைல்டான ஹீல் வைத்த செருப்புகளை அணிவது நல்லது.
மெகா சைஸ் ஹேண்ட் பேகை விட உங்கள் பொருட்களை வைக்கப் போதுமான அளவில் இருக்கும் சின்ன ஹேண்ட் பேக் நல்லது. அதேபோல மணிகள் கோர்க்கப்பட்ட ஃபேன்ஸி ஹேண்ட் பேக்குகளைத் தவிர்க்க வேண்டும். சோர்வான அப்ரோச் தரும் டல் கலர் ஆக்ஸசரீஸைத் தவிர்ப்பது நல்லது.
அதற்காக கண்ணை குருடாக்கும் பளீர் நிறங்களுக்கும் ஆதரவு தரக்கூடாது. உங்களை பெப்பியாக காட்டும் பிங்க் மற்றும் மஞ்சள் நிறங்களையும் தவிர்க்க வேண்டும். கறுப்பு, வெள்ளை, கிரே, நேவி போன்ற நிறங்கள் நல்லது. நீங்கள் அணிந்திருக்கும் ஆடைக்கு ஏற்ற அல்லது பொருந்திப் போகிற நிறத்தில் உங்கள் ஷூ அல்லது ஹேண்ட் பேக் இருந்தால் அந்த மிக்ஸ் அண்ட் மேட்ச் காம்பினேஷன் நிச்சயம் பர்ஃபெக்ட் லுக்ட் தரும்.
சிம்பிளான சிகையலங்காரம் உங்கள் மதிப்பைக் கூட்டும். நீளமான கூந்தல் இருந்தால் சாதாரண பின்னலே போதுமானது. இல்லையெனில் வெறுமனே ரப்பர் பேண்ட் மட்டும் அணியலாம். இன்ச் கணக்கில் மேக் அப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். ஹேர் ஸ்பிரே மற்றும் பெர்ஃபியூம் வகையறாக்களையும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
மெல்லிய நறுமணம் தரும் பெர்ஃபியூம் போடுவதும் தனி ஸ்டைல்! ஆடையும் அலங்காரமும் எப்படி உங்கள் இமேஜை முன்னிருத்துகிறதோ அதேபோல உங்கள் சுத்தமும் உங்களின் மதிப்பீட்டை மாற்றும். சுத்தமான நக பராமரிப்பு, அலைபாயாத கூந்தல், மூக்கை உறுத்தாத பாடி ஸ்பிரே போன்றவையும் உங்கள் மீதான பிறர் பார்வையை மாற்றும்.
உங்கள் வயதும் அதற்கேற்ப நீங்கள் அணிகிற உடையும் ஒன்றுக்கொன்று பொருந்திப் போக வேண்டும். உங்களது தோற்றம்தான் உங்கள் கேரக்டரை முன்னிறுத்தும். சூழலுக்குத் தகுந்தபடி ஆடை அணிந்து சென்றால் உங்களை கண்ணியமாக பார்ப்பதுடன் உங்கள் டிரெஸ்ஸிங் சென்ஸ் குறித்துப் புகழவும் செய்வார்கள்.

Subscribe to:
Posts (Atom)