Pages

Showing posts with label உடற்பயிற்சி இன்மை. Show all posts
Showing posts with label உடற்பயிற்சி இன்மை. Show all posts

Friday, January 29, 2016

கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியமா?


கர்ப்பிணிகள் ‘எந்த வேலையும் செய்யக் கூடாது’ என்றும், அவர்கள் ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.  இது தவறு. குழந்தை 3 கிலோ அளவில்தான் பிறக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் 6 முதல் 10 கிலோ மட்டும் எடை கூடினால் போதுமானது. 



தற்போது, பல கர்ப்பிணிகள் 10 மாத காலத்துக்குள் 20 கிலோவுக்கும் அதிகமாக எடை அதிகரித்துவிடுகின்றனர்.  சிலர் பி.எம்.ஐ அளவு 32 ஐ தாண்டிவிடுகிறார்கள். இதற்கு, உடற்பயிற்சி இன்மை மற்றும் உணவுக்கட்டுப்பாடு இன்மையே காரணம். கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு, அதிக அளவு உடற்பயிற்சி செய்வதோடு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். 


அப்போதுதான், குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். கர்ப்ப காலத்தில்  அதிக அளவில் உடல் எடை கூடவில்லை என்றால், நார்மல் டெலிவரிக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும், அறுவைசிகிச்சை செய்வதாலும், ஹார்மோன்கள் கோளாறு காரணமாகவும் குழந்தை பெற்ற பிறகு, அதிக அளவு உடல் எடை அதிகரித்துவிடுகிறது. 

எனவே, கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியம் தேவை. மேலும் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் யோகா, தியானம் செய்யலாம். எனவே கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகளவில் அதிகரிக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் குழந்தையின் ஆரோக்கியமும், தாயின் ஆரோக்கியமும் இதில் அடங்கியுள்ளது.