Pages

Showing posts with label முருங்கைக்கீரை சூப். Show all posts
Showing posts with label முருங்கைக்கீரை சூப். Show all posts

Friday, January 29, 2016

எலும்புகளுக்கு வலிமை தரும் முருங்கைக்காய்

murungaikai க்கான பட முடிவு


பலரும் விரும்பி சாப்பிடும் முருங்கைக்காயில் ஊட்டச்சத்துக்களானது நிரம்பியுள்ளது. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம் சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன.

அதிலும் இதனை பாலுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். முருங்கைக்காய் மற்றும் அதன் இலைகள் இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையைக் கொண்டவை. மேலும் இது சிறந்த ஊட்டச்சத்தாகவும் செயல்படும்.

அதற்கு முருங்கைக்காயை சாப்பிடுவதோடு, அதன் இலையை சாறு எடுத்து, சூப்பாகக் காய்ச்சி குடித்து வந்தால், இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, முகப்பரு மற்றும் இதர சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். முருங்கைக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது.

மேலும் இதனை உட்கொண்டு வந்தால், சிறுநீர்ப்பை நன்கு செயல்பட்டு, இதனால் சர்க்கரை அளவு குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும். உங்களுக்கு தொண்டைப்புண், சளி அல்லது இருமல் போன்றவை இருந்தால், ஒரு கப் முருங்கைக்கீரை சூப் வைத்துக் குடித்து வந்தால் சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலைத் தரும்.

குறிப்பாக முருங்கைக்காய் மற்றும் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, காசநோய் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Wednesday, June 11, 2014

தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப்....!

தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்.

முருங்கைகீரை சூப் செய்யும் முறை:

முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு

முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

முருங்கைக்கீரை
அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள், வடிகட்டியபின் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக் கொள்ளலாம். இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும். பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.