தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து
தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன்
கிடைக்கும்.
முருங்கைகீரை சூப் செய்யும் முறை:
முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு
முதலில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு
7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்ணீரில்
இறங்கி விட்டிருக்கும்.
அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும்
கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே
உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள், வடிகட்டியபின் கார்ன் ஃப்ளோரை சிறிது
தண்ணீரில் கரைத்து சேர்த்துக் கொள்ளலாம். இதை சேர்த்து
இரண்டு கொதி விட்டு இறக்கவும். பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து
பருக வேண்டும்.