Pages

Showing posts with label முருங்கைக்காய். Show all posts
Showing posts with label முருங்கைக்காய். Show all posts

Friday, January 29, 2016

எலும்புகளுக்கு வலிமை தரும் முருங்கைக்காய்

murungaikai க்கான பட முடிவு


பலரும் விரும்பி சாப்பிடும் முருங்கைக்காயில் ஊட்டச்சத்துக்களானது நிரம்பியுள்ளது. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம் சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன.

அதிலும் இதனை பாலுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். முருங்கைக்காய் மற்றும் அதன் இலைகள் இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையைக் கொண்டவை. மேலும் இது சிறந்த ஊட்டச்சத்தாகவும் செயல்படும்.

அதற்கு முருங்கைக்காயை சாப்பிடுவதோடு, அதன் இலையை சாறு எடுத்து, சூப்பாகக் காய்ச்சி குடித்து வந்தால், இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, முகப்பரு மற்றும் இதர சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். முருங்கைக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது.

மேலும் இதனை உட்கொண்டு வந்தால், சிறுநீர்ப்பை நன்கு செயல்பட்டு, இதனால் சர்க்கரை அளவு குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும். உங்களுக்கு தொண்டைப்புண், சளி அல்லது இருமல் போன்றவை இருந்தால், ஒரு கப் முருங்கைக்கீரை சூப் வைத்துக் குடித்து வந்தால் சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலைத் தரும்.

குறிப்பாக முருங்கைக்காய் மற்றும் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, காசநோய் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Friday, April 17, 2015

கத்தரிக்காய், முருங்கைக்காய், குடைமிளகாய் மசாலா


 kathirikai murungakkai masala க்கான பட முடிவு
தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் 
முருங்கைக்காய்
குடைமிளகாய்
மிளகு தூள்
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
தனியா தூள்
தேங்காய் பேஸ்ட் - 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய்
புளி கரைசல்
வெங்காயம் - 1 கைப்பிடி
தக்காளி இஞ்சி பூண்டு விழுது
கடுகு காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி

செய்முறை :

* காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.

* அடுத்து இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

* தக்காளியை சேர்த்து நன்கு கிளரவும்.

* தக்காளி நன்கு வதங்கியதும் கத்தரிக்காய், முருங்கைக்காய், குடை மிளகாய், போட்டு கிளரி மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் உப்பு கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.     

* சிறிது  தண்ணீர் சேர்த்து கிளறவும்.

* புளி கரைசல் சேர்க்கவும்.

* காய்கறிகள் நன்கு வெந்தவுடன் தேங்காய விழுதை சேர்க்கவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். 

Sunday, April 27, 2014

உடம்பை குறைக்கணுமா?

உடல் எடை
அதிக உடல் எடை தான் இன்று பலரையும் படுத்தி எடுக்கும் விஷயமாக இருக்கிறது. 'எப்படித்தான் உடல் எடையைக் குறைப்பது?' என்று திணறித் தவித்துப் போகிறார்கள். அவர்களுக்கு உதவும், எளிய முறையில் உடல் பருமனைக் குறைக்கும் வழிகள் இவை...

* அன்றாடம் எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

* தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* உடல் பருமனை அதிரடியாகக் குறைக்கிறேன் பேர்வழி என்று கொலைப்பட்டினி கிடைக்கக்கூடாது.

* நொறுக்குத் தீனிகளைத் தள்ளி வைக்க வேண்டும். 'இன்று மட்டும் சாப்பிடுகிறேன்' என்று நினைத்தால், என்றுமே அவற்றுக்கு விடைகொடுக்க முடியாது.

* உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

* இனிப்புகள், சர்க்கரை வகைகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

* எண்ணையில் வறுத்த, பொரித்த உணவுகளைத் தவிர்த்து, வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

* முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து, வெள்ளைப்பகுதியை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

* செயற்கைக் குளிர்பானங்களுக்கு நமக்கு நாமே தடை விதித்துக்கொள்ள வேண்டும்.

* தினமும் பழங்கள் சாப்பிடலாம்.

* அவரை, பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், காலி பிளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் இரவு உணவுடன் 200 கிராம் அளவுக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப்பயறு, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

* கைக்குத்தல் அவல், முழுக்கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.

* கொழுப்புச் சத்துள்ள உணவுப்பொருட்களைத் தவிர்த்தல் மிகவும் நல்லது. பாலில் கூட குறைந்த கொழுப்புச்சத்து உள்ள 'டோன்டு மில்க்' வகைகளையே பயன்படுத்தலாம்.

* வேலைக்காரர்கள், எந்திரங்களை அதிகம் சார்ந்திருக்காமல், வீட்டு வேலைகளை நாமே செய்யலாம். உடல் ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம். வீட்டு வேலைகளை நாமே பார்த்த திருப்திக்குத் திருப்தி!

* அசைவ விரும்பிகள், அவற்றின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். பொரிப்பது, வறுப்பது தவிர்த்து, தந்தூரி வகைக்கு மாறலாம்.