Pages

Showing posts with label சமச்சீர் உணவு. Show all posts
Showing posts with label சமச்சீர் உணவு. Show all posts

Friday, January 29, 2016

வயிற்று கோளாறை தடுக்க எளிய வழி


வயிற்று கோளாறை தடுக்க எளிய வழி


காலை எழுந்தவுடன் எளிய உடற்பயிற்சி செய்யுங்கள், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.  பிறகு காலை நல்ல சத்துள்ள உணவு அதிகமாக சாப்பிட வேண்டும். காலை உணவில் பழங்கள், மற்றும் பால் ஆகியவற்றை சேர்ப்பது நல்லது. பிறகு மதிய உணவு சமச்சீர் உணவாக சாப்பிட வேண்டும்.

மதிய உணவில் பச்சை காற்கறிகள், பழங்கள், பருப்புகள் மற்றும் கீரைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உங்கள் ஹைட்ரேட் மற்றும் உங்கள் பசி உணர்வை குறைக்கும். ஆகையால் தாகம் எடுத்த பின் நீர் அருந்துவதை விட சிறிது இடைவெளியில் ஒரு முறை நாம் நீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இரவு நேர சாப்பாட்டுக்கு கோதுமை உணவு வகைகளை எடுத்துக் கொள்வது, இரவு ஜீரணத்திற்கு எளிமையானது. சாப்பிட்டவுடன் தூங்க செல்லாமல் சிறிது நேரம் நடந்து விட்டு அல்லது வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்க செல்லலாம். அவ்வாறு செய்வது நாம் சாப்பிட்ட உணவு கலோரிகள் நம் உடலில் தங்கி விடாமல் இருக்கும். நொறுக்குத் தீனி தவிர்ப்பது நல்லது.

இரவு 8 மணிக்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டால் அஜீரண கோளாறில் இருந்து தப்பிவிடலாம். நாம் எடுத்து கொள்ளும் உணவுகளின் கலோரிகளை எரி சக்தியாக மாற்றி விட்டால் வீணாக நம் உடலில் தங்கி கொழுப்பாக மாறாது. அதாவது நாம் சாப்பிடும் உணவுக்கு ஏற்ற வேலையை உடலுக்கு தந்தால் உடல் பருமன் என்பது பறந்து போய் விடும்.

நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப உணவு கலோரிகளை எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் உங்கள் உடல் பருமன் போய் நலினமான உடல் சொந்தமாகும். அசைவ பிரியர்கள் மீன், கோழி தாராளமாக சாப்பிடலாம். அதிக எண்ணெயில் போட்டு வறுக்க கூடாது லேசாக எண்ணெய் தடவி வறுத்து சாப்பிடலாம்.