காய்கறி வகை உணவுகளில் சகல நலங்களையும், தரும் உணவு எதுவென்றால் அவை
கீரைகள்தான். கீரைகளில் உயிர்சத்துக்கள், தாது உப்புகள், கால்சியம்,
இரும்புச் சத்துக்கள் அதிகம் அடங்கியுள்ளன. மாமிச உணவில் கிடைக்கும் சக்தி
கீரையிலும் கிடைக்கிறது. கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை
தருகிறது. இதோ ஆரோக்கியம் தரும் ஆறுவகை கீரைகள்.
சிறுகீரை: சிறுகீரையை
பற்றி தெரியாதவர் யாருமில்லை. சிறுகீரை செம்புச்சத்தும், உஷ்ணவீர்யமும்
உடையது. குடல், இருதயம், மூளை, ரத்தம் இவைகளுக்கு நல்ல வலிமையை தரும்.
சிறுகீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால், இருதய வியாதிகள்
போகும். விஷ மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுகீரையை வெறும் மிளகுடன்
சேர்த்து, கஷாயம் செய்து சாப்பிட்டால், விஷத்தின் வீரியம் தணிந்து வந்த
வியாதியும் குணமடையும்.
மிளகு தக்காளி கீரை: உடலில் வீக்கம்
இருந்தால் அதை வாடச்செய்யும். வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை ஆற்றும், சொறி,
சிரங்குகளை குணப்படுத்தும். பாண்டுரோகம் குணமாகும். வெள்ளை வெட்டை
குணமாகும். தேகத்தில் உள்ள புண்களை ஆற்றும். அடிக்கடி உணவில்
சேர்த்துக்கொண்டால், குடல் தொடர்புடைய எந்த வியாதிகளும் வராது.
முளைக்கீரை;
முளைக்கீரையை உண்ணுவதால் சொறி, சிரங்கு, நரம்பு தளர்ச்சி குணமடையும்.
எலும்பு வளர்ச்சியும், மாலைக்கண் பார்வை குறைவும் நீங்கும். வாரத்திற்கு
இருமுறையாவது, முளைக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல்,
நீரடைப்பு, மூக்கு, தொண்டை, வாய், பல் தொடர்புடைய நோய்கள் குணமாகும்.
சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும், தினசரி முளைக்கீரை கொடுத்தால், உடல்
வலிமையுடன் வளர்வார்கள்.
இலட்கெட்டை கீரை: இக்கீரையை சாப்பிட்டு வர, வாதம் தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும், வாயு தொடர்புடைய நோய்கள் தீரும். இவை சாம்பிள்தான்.
காய்கறி
கடைகளில் கிடைக்கும் அனைத்து வகை கீரைகளும், சத்து நிறைந்தவைதான். எந்த
சீசனில் என்ன கீரை கிடைக்கிறதோ, அவற்றை வாங்கி உட்கொண்டால் ஆரோக்யமாக
வாழலாம்.
பாற்சொறிக்கீரை: பாற்சொறிக்கீரையுடன் துவரம்
பருப்பு, பாசிப்பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிடுவார்கள். சீதபேதியுடன்
கஷ்டப்படுபவர்கள், இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, சீதபேதி
குணமாகும். குடலில் ஏற்பட்டுள்ள புண்ணை ஆற்றும். உடலில் தேஜஸ் உண்டாகும்.
அரைக்கீரை; பித்தம்
தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும். அதிக அளவில் சிறுநீர்
இறங்குவதை, கட்டுப்படுத்தி, இயற்கை அளவுடன் இறங்கச் செய்யும். ரத்த
பிரமேகம் என்னும் வியாதியைக் குணப்படுத்தும்.