அழகு நிலையத்தில் போய் அழகு படுத்திக் கொள்ள பணம் இல்லை, நேரம் இல்லை என நினைப்பவர்களுக்கு சமயலறையிலேயே அழகுக்கான அத்தனை பொருட்களும் குவிந்து கிடப்பது தெரியுமா உங்களுக்கு?
- வெள்ளரிச்சாரு-பன்னீருடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும். தேன் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தடவி வந்தாலும் முகம் பொலிவு பெறும்.
2. மஞ்சள்,எலுமிச்சை சாறு, காய்ச்சாத பால் கலந்து முகத்தில் அழுந்தத் தேய்த்து சற்று பொறுத்து கழுவினால் முகம் முழுக்க பிரகாசிக்கும்.
3. மோரில் ஓட்ஸ் கலந்து முகத்தில் தடவினால் அழுக்கு நீங்கி முகம் பளிச்சென்று ஆகும்.
4. தேங்காய்த் தண்ணீரில் முகத்தைக் கழுவினால் முகம் மென்மையாகும்.
5. அதிக வெயிலால் முகம் கருத்து விட்டதா? பால் பவுடர், எலுமிச்சைசாறு, பாதம் எண்ணெய், தேன் கலந்து முகத்தில் பூசி பூசினால் கருமை நீங்கும்.
எழுமிச்சைசாருடன் சர்க்கரை கலந்து முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் முகம் பொலிவு பெறும்.
சமயலறையிலேயே பொலிவுக்கான சூட்சமம் இருக்குது.அதை பயன்படுத்தினாலே உங்களுக்கு இயற்கை அழகு கிடைக்கும்.