தேவையானவை
- கேப்பை மாவு (ராகி / குரக்கன் / கேழ்வரகு) - ஒரு கப்
- உப்பு - தேவையான அளவு
- அரிசி நொய் - கால் (அ) அரை கப்
- தயிர்
- சின்ன வெங்காயம் (அ) மாங்காய்
செய்முறை:
கேப்பை மாவை தோசை மாவு பதத்திற்கு கரைத்து ஒரு இரவு, ஒரு பகல் புளிக்கவிடவும்.
அரிசி நொய்யை வேக வைத்து (பொங்கி) வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதி வந்ததும், புளித்த கேப்பை மாவை ஊற்றி கிளறி கொண்டே இருக்கவும்.
பாதியளவு வெந்ததும், பொங்கிய அரிசி நொய்யைச் சேர்த்துக் கிளறி வேக வைக்கவும். அரிசி நொய்யைப் போட்டதும் நிறம் மாறும், வெந்துவிட்டது என நினைக்க வேண்டாம்.
கையில் தண்ணீர் தொட்டு, கூழை தொட்டு பார்க்கவும். கையில் ஒட்டாத பதத்திற்கு வெந்ததும் இறக்கிவிடவும்.
கூழை ஆற வைத்து பானை (அ) பிரிட்ஜில் வைத்து மறு நாள், இதில் தயிர், உப்பு, சேர்த்து கரைத்து பரிமாறவும். ருசியான கேப்பை கூழ் தயார்.