Pages

Sunday, February 15, 2015

வாரத்துக்கு 3 மணிநேரம் நடந்தால் மாரடைப்பை தடுக்கலாம்

Image result for walking

உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிற ஒரே தீர்வு, உடற்பயிற்சி. உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் நன்றாக விரிவடையும். உடலில் சோர்வு நீங்கும், மனதில் உற்சாகம் பிறக்கும். நிம்மதியான தூக்கம் வரும். எந்த பக்கவிளைவும் இல்லாதது.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்குப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள்கூட குறையும் என்கிறது ஆராய்ச்சி. எனவே, உடற்பயிற்சியின் மூலம் உற்சாக வாழ்வை வாழலாம்.'' வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் 40 சதவிகிதமும்,  ஐந்து மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது, 50 சதவிகிதமும் ஏற்படுகிறது என்கிறது ஓர் ஆராய்ச்சி.

மாரடைப்பு மட்டுமல்ல, பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாகக் குறையும். ரத்த ஓட்டம் சீராகும். உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.  மற்றவர்களுடன் உரையாடியபடியே நடக்கும்போது, மனதிலும், உடலிலும் உற்சாகம் பிறக்கும். உடல் ரீதியான பிரச்சனைகள், நோய்கள், சுற்றுச்சூழலை மனதில் கொண்டு பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

நல்ல ஆரோக்கியம் உள்ளவர்கள், நடப்பது, ஓடுவது, சைக்கிளிங், நீச்சல், டென்னிஸ் விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளை 30 முதல் 45 நிமிடங்கள் வரை செய்யலாம். வசதிப் படைத்தவர்கள், டிரெட் மில்-ல் 15 நிமிடங்கள் பயிற்சி எடுக்கலாம். டிரெட்மில் இல்லாதவர்கள், மேடு பள்ளம் இல்லாத சமமான பாதையில் வீட்டைச் சுற்றியே தினமும் ஐந்து கிலோ மீட்டர் வரை நடக்கலாம்.

நடக்க முடியாதவர்கள், கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக், வாக்கர் எடுத்துக்கொண்டு நடக்கலாம். இதனால், உடல் பருமன் குறையும். மாரடைப்பு வராமல் தடுக்கும். எலும்பு வலுபெறும். நல்லத் தூக்கம் வரும். ரத்த அழுத்தம் குறையும். தசைகள் உறுதிபடும். 

முதுமைக் காலத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலமே பல்வேறு நோய்களை அருகே நெருங்கவிடாமல் செய்யலாம்.

Friday, February 13, 2015

ஒரு வாரத்தில் சருமம் பொலிவடைய வேண்டுமா?

 Image result for face glow
வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒரு வாரத்தில் அழகாக மாறலாம். முகத்தில் தூசிகள் படிந்திருப்பதால் முகம் பொலிவின்றி காணப்படும். எனவே அவ்வப்போது முகத்தை சுத்தமான நீரினால் கழுவினால், முகம் நன்கு சுத்தமாக பருக்களின்றி இருக்கும்.

முகத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு நிறைய ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. அத்தகைய மாஸ்க்குகள், ஸ்கரப்கள் போன்றவற்றை மேற்கொண்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, சருமத்தின் நிறம் இயற்கையாகவே அதிகரிக்கும். எலுமிச்சை ஒரு சூப்பரான ப்ளீச்சிங் பொருள்.  

இத்தகைய எலுமிச்சையின் துண்டுகள் அல்லது சாற்றைக் கொண்டு, தினமும் முகத்தை சிறிது நேரம் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பொலிவோடு மின்னும். ஆனால் முகப்பரு உள்ளவர்கள் இதனை பயன்படுத்த கூடாது., பழங்களில் வாழைப்பழம், பப்பாளி, அவகோடா போன்றவை சருமத்திற்கு பொலிவைத் தரக்கூடியவை.

எனவே இத்தகைய பழங்களை சாப்பிடுவதோடு சருமத்திற்கு தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களால் சருமத்திற்கு கடுமையான பாதிப்பானது ஏற்படுவதோடு, சருமத்தின் நிறமும் மாறும். எனவே சருமம் வெள்ளையாகவும், நிறம் மாறாமலும் இருப்பதற்கு வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும். 

அப்படியே வெயிலில் சுற்றினால் சருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும். குறிப்பாக வீட்டிற்கு வந்ததும் சருமத்தை சுத்தமான நீரினால் கழுவிட வேண்டும். தயிர் முகத்தை வெள்ளையாக்க உதவும் அழகுப் பொருட்களில் ஒன்று. எனவே அதனைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து கழுவினால், ஒரு வாரதத்தில் ஒரு நல்ல முகப்பொலிவு கிடைக்கும்.

கற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும். குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் மின்ன ஆரம்பிக்கும். 

Thursday, February 12, 2015

பிளாக் ஹென்னா பேக


 Image result for hair black henna

பிளாக் ஹென்னா பேக
தேவையானவை:

ஹென்னா ஒரு கப்,
சூடான பிளாக் காபி பேஸ்ட்டாக மாற்றுவதற்குத் தேவையான அளவு,
எலுமிச்சைச் சாறு ஒரு பழம்,
ஆப்பிள் சிடர் வினிகர் 2 ஸ்பூன்,
முட்டை மஞ்சள் கரு 1 (விரும்பினால்)
 ப்ளைன் யோகர்ட் 2 அல்லது 4 ஸ்பூன்
இண்டிகோ (அவுரிப் பொடி அல்லது அவுரி இலை) சிறிதளவு

செய்முறை:

ஹென்னா பொடியுடன், சூடான பிளாக் காபி கலந்து பேஸ்ட்டாக்கிக்கொள்ளுங்கள். பிறகு எலுமிச்சைச் சாறு, ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து, 6 மணி நேரம் ஊறவையுங்கள்.

எப்போது பயன்படுத்துகிறீர்களோ, அதற்கு முன் முட்டையின் மஞ்சள் கரு, ஹேர்டையும் ஹென்னாவில் கலந்து கூந்தலில் பூசுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து, கூந்தலை அலசி நன்கு உலர்த்துங்கள்.

இண்டிகோவை வெந்நீரில் காய்ச்சி அதைத் திக்கான பேஸ்ட்டாக மாற்றி, அதைக் கூந்தலில் பூசுங்கள். மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்து, கூந்தலை அலசுங்கள். கருகரு கூந்தல், மென்மையாகவும், அழகாகவும் இருக்கும்.

Wednesday, February 11, 2015

நடைப்பயிற்சிக்கு முன்பும் – பின்பும் செய்யக்கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சி


 நடைப்பயிற்சிக்கு முன்பும் – பின்பும் செய்யக்கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சி
சீராக உடல் இயங்க, உடற்பயிற்சி அவசியம். ஆனால், சமயங்களில் உடற்பயிற்சியே சில சிரமங்களைத் தரும் அபாயமும் இருக்கிறது. அதனால், உடற்பயிற்சியில் ஈடுபடும் முன்னரும், பின்னரும் என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியம். 

‘உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வார்ம் அப் (Warm Up), ஸ்ட்ரெச்சிங் (Stretching) பயிற்சிகளையும்… உடற்பயிற்சி செய்த பின்பு கூல் டவுன் (Cool Down) , ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். இல்லை என்றால், கை – கால் தசைகளில், மூட்டுகளில்… இறுக்கம், வலி, சோர்வு போன்ற தொந்தரவுகள் உண்டாகும்.

ஜிம்முக்குச் சென்றால்தான் இதுபோன்ற பயிற்சிகளைச் செய்ய வேண்டும், சாதாரணமான நடைப்பயிற்சிக்கு தேவை இல்லை எனச் சிலர்  நினைப்பது தவறு. நடைப்பயிற்சியும் ஒருவிதமான உடற்பயிற்சிதான். எனவே, எல்லோருக்கும் இந்தப் பயிற்சிகள் அவசியம்! ”வார்ம் அப் என்பது நடைப் பயிற்சிக்காக உடலை ஆயத்தப்படுத்தும் ஒரு செயல்.

முதல் ஐந்து நிமிடங்கள் மெதுவாக நடக்க வேண்டும். பின்னர் 10 நிமிடங்களுக்கு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அதற்குப் பின்னர் சுறுசுறுப்பான நடைப் பயிற்சியைத் தொடங்கலாம். ஆங்கிலத்தில் இதை ‘பிரிஸ்க் வாக்கிங்’ (Brisk Walking)   என்பார்கள். 30 முதல் 40 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடந்த பின்னர், படிப்படியாக வேகத்தைக் குறைத்து 5 நிமிடங்களுக்கு மெதுவாக நடக்க வேண்டும்.

இதை ‘கூல் டவுன்’ என்பர். பின்னர் மீண்டும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டும். வார்ம் அப் என்பது எப்படி இதயத் துடிப்பை, ரத்த ஓட்டத்தை, உடலின் வெப்பநிலையை அதிகப்படுத்துகிறதோ, அதேபோல கூல் டவுன் என்பது அவற்றைக் குறைத்து நார்மல் நிலைக்குக் கொண்டு வரும்.

அதிகாலை நேரத்தில்தான் பலரும் நடைப்பயிற்சி செய்கின்றனர். அந்த நேரத்தில் சுற்றுச் சூழலும் நம் உடலும்  குளிர்ச்சியாக இருக்கும். அப்போது நடைப்பயிற்சி செய்யும்போது காயங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்து தசைகளின் வெப்பநிலையை அதிகரித்துக்கொண்டால், தசைகளுக்கு ஒருவித நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.

இதனால் தசைகள் நன்றாகச் சுருங்கி விரியும். மூட்டுகளை எளிதாக நீட்டி மடக்க முடியும். சாதாரணமாக உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்யும்போது நம்முடைய தசைகளில் லாக்டிக் அமிலம் சுரக்கும். இந்த அமிலம் தசைகளில் படிவதால், முழங்காலில் வலி, வீக்கம், கால் வலி, சோர்வு ஏற்படும்.

ஆனால், வார்ம் அப் செய்த பிறகு நடைப்பயிற்சி செய்தால் அமிலத்தின் சுரப்பு மிகக் குறைவாகவே இருக்கும். அப்படிக் குறைவாகச் சுரப்பதும்கூட நடைப்பயிற்சிக்குப் பின்னர் செய்யப்படும் கூல் டவுன் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளால் சுத்தமாகத் தடைபட்டுவிடும். எனவே, வலி வருவதற்கு வாய்ப்பே இல்லை.

நடைப்பயிற்சி செய்வதற்கு முன்பும் – பின்பும் செய்யக் கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சி முறைகள் ஒரேவிதமானவைதான். ஆனால், நடைப் பயிற்சிக்கு முன் ஒவ்வொரு பயிற்சியையும் குறைந்தது 10 நொடிகள் செய்ய வேண்டும். நடைப் பயிற்சிக்குப் பின்னர் ஒவ்வொரு பயிற்சியையும் குறைந்தது 30 நொடிகள் செய்ய வேண்டும், அவ்வளவுதான்.

ஒவ்வொரு பயிற்சியையும் மூன்று முறை செய்வது அவசியம். பயிற்சியின்போது முதுகு வளையாமல் இருக்க வேண்டும்.

Sunday, February 1, 2015

ஏன் ஏற்படுகிறது கணுக்கால் வலி?


 தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால், மூட்டு வலி ஏற்படுகிறது. 35 வயது முதல் தொடங்கி, உடற்கூறுகளின் தன்மையை பொறுத்து, பாதிப்பின் கால அளவு நீடிக்கும். மனித உடலில் வாதம், பித்தம், கபம், உள்ளிட்ட 3 தோஷங்களின் அடிப்படையில் கணுக்கால் வலி ஏற்படுகிறது. காலையில் எழுந்தவுடன் வலி அதிகமாக இருக்கும். மாடிப்படிகளில் ஏறி இறங்க முடியாது. மீண்டும் மாலை நேரத்தில் வலி துவங்கும். கால் பாதத்தில் எப்போதும் ஒரு விதமான எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.

காலை அழுத்தி நடக்க முடியாததால், நரம்புகளில் சுளுக்கு ஏற்பட்டு, தொடை இடுக்கில் நெறிகட்டிக் கொள்ளும். இதை சரியாக கவனிக்காமல் விட்டால், நடக்க இயலாமல் போக வாய்ப்புள்ளது. வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றில் பித்தநீருடன் சேரும் போது, தலையில் நீராக கோர்த்து, தலைவலியை ஏற்படுத்திவிடுகிறது. இப்படி தலையில் கோர்க்கும் நீர், கழுத்து வழியாக இறங்கி, கால்களின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கி விடுகிறது.

கப தோஷம், பித்தநீருடன் கபம் சேர்ந்து , நீராக மாறி, உடலின் த்ன்மைகேற்ற வகையில் பாதம், கணுக்கால் பகுதியில் நீர் கோர்த்து கட்டி போல் உருவாக்கி வலி ஏற்படுத்துகிறது. உணவில் காரத்தை சேர்த்துக் கொள்வதாலும் , குடல் அலர்ஜியால் பித்த நீர் கோர்த்து தலைவலி ஏற்பட்டு, பின் கணுக்காலுக்கு வலி ஏற்படுகிறது.

உறவில் திருமணம்! எகிறுது டயாபடீஸ்!




அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை விட, இந்தியாவில் அதிக சர்க்கரை நோயாளிகள் இருப்பதற்கு, இங்கு பெருகும் திருமணங்களே காரணம் என்கின்றனர் டாக்டர்கள்.

மின்சாரத்தால் இயங்கும் வீட்டு உபயோகப்போருட்களின் பயன்பாடு காரணமாக, பெண்களின் மரபுசார் உடல் உழைப்பும் குறைந்து விட்டிருக்கிறது. இப்படி வாழ்க்கை தேவை, போக்குவரத்து ஆகிய இரண்டு அடிப்படை விஷயங்களில் இந்தியர்கள் உடல் உழைப்பின் அளவு குறைந்துவிட்ட அதே சமயம், அவர்களின் அன்றாட உணவு முறையில் ஏற்பட்டிருக்கும் ஆரோக்கியமற்ற மாற்றம், நீரழிவு நோயை அதிகப்படுத்தும் காரணியாக உருவாகியிருப்பதாக பார்க்கப்படுகிறது.

இன்றைய தலைமுறையினர் மத்தியில், சிறுவயது முதலே அதிகரித்து வரும் மன அழுத்தமும், நீரழிவு நோயை தூண்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதர்களுக்கு நீரழிவு நோய் வருவதற்கான காரணிகள் பெறுமளவு வாழ்க்கைமுறை சார்ந்தவையாக இருந்தாலும், மரபணு காரணிகளும் இதில் முக்கிய பங்காற்றுகின்றன.

"இந்திய உபகண்ட சமூகங்கள் மத்தியில் பல காலமாக நீடித்து வரும் திருமண உறவு முறைகள் அதாவது குறிப்பிட்ட இன, மத, ஜாதிக் குழுக்களுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொள்வது, அதிலும் குறிப்பாக மாமன் மகள், அத்தை மகன் போன்ற நெருங்கிய உறவு திருமணங்கள், நீரழிவு நோயை ஊக்குவிக்கும் மரபணுக்களை தலைமுறை தலைமுறையாக தொடரச் செய்வதோடு, அதன் வீரியத்தையும் அதிகப்படுத்தகூடிய வாய்ப்பு இருக்கிறது" என்கிறார் நீரழிவு நோய் நிபுணர் மருத்துவர் மோகன்.

போக்கவரத்து வசதிகள், இந்தியர்களின் நடையின் அளவை குறைத்துவிட்டதும் காரணம்.  



Saturday, January 3, 2015

இப்படித்தான் குழந்தை வளர்க்க வேண்டும்.


இப்படித்தான் குழந்தை வளர்க்க வேண்டும்.
இன்றைய குழந்தைகள் தான் நாளைய தலைவர்கள். அவர்கள் தலைவர்கள் ஆவதும் தயங்கி, தளர்ந்து  நிற்பதும் பெற்றோரின் வளர்ப்பில் தான் உள்ளது. கீழே காணும் ஆலோசநிகளை பின்பற்றினால், உங்கள் குழந்தையும் நாளைய தலைவன்தான்.

குழந்தைகள் வளர்ப்பில் சில முக்கிய குறிப்புகள்:

* கணவன் மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்கு தெரியக்கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

* தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை  நினைவில்  வைத்துக் கொள்ளுங்கள். சிறு குழந்தைகளை மிரட்டும் பொது கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன் போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

* சில தாய்மார்கள் சில விஷயங்களை கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், அப்பாகிட்டே சொல்லிடாதே என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே அப்பாக்கிட்டே சொல்லிடுவேன் என்று மிரட்டும்.