Pages

Sunday, November 3, 2013

இதயம் காக்கும் கீரைகள்

சிறு கீரை
சைவ உணவுகளில் சகல சத்துக்களைக் கொண்டதும், உடலின் சங்கடம் தீர்த்து, சத்து சேர்ப்பதில் தலையாய பங்கு வகிக்கிறது கீரை.

சிறு கீரை:

சிறுகீரை செம்பு சாது நிறைந்தது. குடல், இதயம், மூளை, ரத மண்டலம் இவைகளுக்கு நல்ல வலிமை தரும். விஷ மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிறு கீரையை, வெறும் மிளகுடன் சேர்த்து சாப்பிட்டால், பாஷானத்தின் வீரியம் தணிந்து, அதனால் வந்த வியாதி குணமடையும்.

முளைக்கீரை:

முளைக்கீரை
முளைக்கீரைகீரையை உண்பதால், சொறி, சிரங்கு, நரம்பு தளர்ச்சி குணமடையும். எலும்பு வளர்ச்சி அடையும். மாலைக்கண் பார்வை குறைபாடு நீங்கும். அஜீரணக் கோளாறு, வயிற்றுப் புண் சரியாகும். வாரம் இரு முறையாவது கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால், மலச்சிக்கல், நீரடைப்பு குணமடையும்.

Friday, October 4, 2013

பார்லி - சாபுதானா சுண்டல்

தேவையானவை: 

பார்லி, ஜவ்வரிசி, வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரிப் பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, இஞ்சி விழுது - 1 டீஸ்பூன், மிளகுத் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பார்லி, ஜவ்வரிசியை நன்கு ஊற வைத்து, தண்ணீர் வடிக்கவும். வாணலியில் 
எண்ணெய் விட்டு, ஜவ்வரிசி, உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். இதனுடன் வறுத்த வேர்க்கடலை, முந்திரி, பிஸ்தா, பொட்டுக் கடலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Thursday, October 3, 2013

தேவையற்ற கொழுப்பைக் குறைக்க..

நமது சமையல் அறையில் இருக்கும் அஞ்சறைப் பெட்டி ஒரு மருத்துவரின் மருந்துப் பெட்டி போன்றது. அதில் இருக்கும் மசாலாப் பொருட்கள் சில உணவு வகைகளுக்கு ருசி, மணம் தருவதோடு மருந்தாகவும், உடலை இளைக்கச் செய்யவும் பயன்படுகிறது.


இஞ்சி: இது மிளகாய் போல உடல் சூட்டை அதிகமாக்கி உடலில் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

பூண்டு: இது இருதய நோய் தடுப்பிற்கு ஏற்றது. சிறுநீரை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கும், உடலை இளைக்கச் செய்வதற்கும் இது வழி செய்கிறது.

பெருஞ்சீரகம்: இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. பலர் இதைத் தேயிலையோடு சேர்த்தோ, தனியாகவோ டீ செய்து பருகி, பசியைக் குறைத்து உடல் இளைக்க உபயோகிக்கிறார்கள்.

மிளகாய்ப் பொடி: மிளகு, மிளகாய் வகைகளில் உள்ள காப்சேசின் எனும் மிளகாய்ப் பொடியிலும் இருப்பதால் உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தி, வியர்வை அதிகமாக வரக் காரணமாகி நமது உடல் சீக்கிரம் கலோரிகளை எரிக்க உதவுகிறது. உடல் எடையும் குறையும்.

சீலரி விதை: இது கடுகு போல இருக்கும். சிறுநீரை அதிகமாக வெளியேற்றி உடல் எடையைச் சீராக ஆக்குகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சீராக வைப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் அசட்டுப் பசி வராமல் தடுக்கிறது.

பார்ஸ்லி: இது கொத்தமல்லியைப் போல் தோற்றம் உள்ள ஒரு கீரை வகை. ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலுக்கு சக்தியை கொடுக்கிறது. உடலில்
அதிகப்படி நீர் தாங்காமல் வெளியேற்றி எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

காராமணி இனிப்பு சுண்டல்


காராமணி இனிப்பு சுண்டல்:

தேவையான பொருட்கள்:

சிவப்பு காராமணி - 1 கப்
பாகு வெல்லம் (பொடித்தது) - 1 கப்
வறுத்துப் பொடித்த எள் - 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

செய்முறை:

சிவப்புக் காராமணியை வருது, இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, இரண்டு விசில் விட்டு இறக்கவும். வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து சிறிது கொதிக்கவிட்டு,  வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு  காய்ச்சவும். இதை வெந்த காராமணியுடன் சேர்த்து, எள்ளுப் பொடி, தேங்காய் துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலந்தால் காராமணி இனிப்பு சுண்டல் தயார்.

Saturday, September 28, 2013

புற்று நோய் தடுக்கும் பலா



முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன.

கார்ப்பரேட், பொட்டாசியம், கால்சியம், புரத சத்து நிறைந்த பலாப் பழம், புற்று நோய் வராமல் தடுக்கும். இரும்பு சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுக்கும்.

உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, வயது முதிர்தலையும் தள்ளிப் போடும் பலாப் பழம்.
நார்ச்சத்து அதிகம் உள்ள பலாப் பழம் செரிமானத்திற்கு நல்லது. வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இந்த பலம், முதுமையை தடுக்க வல்லது.

Friday, September 27, 2013

காலை உணவைத் தவிர்க்கலாமா?

முடிந்தவரை உணவைக் குறைத்தால் உடல் எடை குறையும் என்று பலரும் நம்புகிறார்கள். இதனால், தெரிந்தோ தெரியாமலோ காலை உணவைத் தவிர்த்தல் என்பது பலரும் செய்வதுதான்.

ஆனால், காலை உணவைத் தவிர்ப்பது என்பது பெரும் ஆபத்தில் கொண்டு விடும் என சமீபத்திய ஆய்வுகள் தெருவிக்கின்றன. கல்லை உணவைத் தவிர்ப்பதாலும், அதனால் நம் உடலில் ஏற்படும் பாதிப்புகளாலும் உடல் பருமன், இதயக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் தோன்ற வழிவகுக்குமாம்.

காலை உணவைத் தவிர்ப்பதால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் விரைவில் பலவீனம் அடைந்து, கலப்பாக உணர்வார்கள். இதனால், அவரவர் பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் போகும். மதியம் உணவு வேலை எப்போது வரும் என்று காத்திருந்து மதியச் சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கத் தோன்றும். அல்லது இடைவேளை நேரத்தில் பப்ஸ், போண்டா, வடை என்று சாப்பிட வைக்கும். இதனால் உடலில் உடனடியாக சர்க்கரை அளவு கூடும். இது பல்வேறு உடல் நலக் கோளாறுகளுக்கு வழி வகுக்கும்.

காலை உணவைத் தவிர்ப்பவர்கள் பெரும்பாலும் இரவு உணவைத் தவிர்ப்பவர்கள் பெரும்பாலும் இரவு உணவைத் தாமதமாக உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருப்பவர்களாய் இருப்பார்கள். இது இன்னும் சிக்கலை உண்டாக்கும். 

இரவு நேரத்தில் தாமதமாக உண்ணுபவர்களுக்கு இதயக் கோளாறு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். காலை உணவைத் தவிர்த்தல், இரவு உணவைத் தாமதமாக எடுத்துக் கொள்ளுதல் போன்ற காரணங்களால் நம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகிறதாம்.

இதனால், இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்படுத்துகிறதாம். உடலில் அதிகம் கொழுப்பு சேர்தல், உயர் ரத அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பளிகிறதாம். எனவே காலை உணவைத் தவிர்ப்பவர்கள் இனிமேலாவது ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

வேர்க்கடலை இதயத்துக்கு நல்லதுங்க

வேர்க்கடலையில் இருப்பது நல்ல கொழுப்புதான் என்றாலும்  இதனால் இதயத்துக்கு நன்மைதான்  கிடைக்குமே தவிர கெடுதல் இல்லை என்கிறது, சமீபத்தில் ஒரு ஆராய்ச்சின் முடிவு. வேர்க்கடலையில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புச் சத்தும்,  புரதச் சத்தும் இருக்கிறபடியால்  உடலுக்கு தீங்கு கிடையாது. முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு  சரியான ஆரோக்கியமான  உணவு வேர்க்கடலை என்கின்றனர்  ஊட்டச்சத்து நிபுணர்கள்.

வேர்க்கடலையில் உள்ள சர்க்கரையின் அளவு ரத்தத்தில் மிக குறைந்த அளவே சேர்வதால் பயம்மில்லாமல் சாப்பிடலாம். இதில் காணப்படும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருள், இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆகவே, சர்க்கரை நோயாளிகள் இனி தைரியமாக வேர்க்கடலையை உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்.

வேர்க்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் சோடியத்தின் அளவு மிகக் குறைவாகக் காணப்படுவதால், வேர்க்கடலை சாபிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. அதற்க்கு பதிலாக, ரத்த கொதிப்பு குறையும். வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப் பொருள் உள்ளது.

வேர்க்கடலையை சாப்பிடுவதன் மூலம் உடலில் உற்பத்தியாகும் நைட்ரேட், ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால், இரத்த ஓட்டம் சீராகிறது. இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பொருட்கள், இருதய நோய்கள் உருவாகாமல் தடுக்கிறது. வேர்க்கடலை,  நார்ச்சத்து முகுந்த உணவு என்பதால், மலச்சிக்கல் ஏற்படாது. ஆகவே, கர்ப்பிணிகள் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது.

வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். இதில்தான் நிறைய சத்துக்கள் அடங்கி உள்ளன. வேர்க்கடலையை பச்சையாக சாப்பிடுவதே நல்லது. அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு வயிற்றுகோளாறு ஏற்படலாம். வேர்க்கடலையில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை, ஆரோக்கியமான எலும்பு, பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அது மட்டுமில்லாமல், வயதான பின் ஏற்படும் ஆச்டியோபோரசிஸ் மற்ற எலும்பு தொடர்பான நோயையும் தடுக்கிறது.