Pages

Friday, September 27, 2013

வேர்க்கடலை இதயத்துக்கு நல்லதுங்க

வேர்க்கடலையில் இருப்பது நல்ல கொழுப்புதான் என்றாலும்  இதனால் இதயத்துக்கு நன்மைதான்  கிடைக்குமே தவிர கெடுதல் இல்லை என்கிறது, சமீபத்தில் ஒரு ஆராய்ச்சின் முடிவு. வேர்க்கடலையில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புச் சத்தும்,  புரதச் சத்தும் இருக்கிறபடியால்  உடலுக்கு தீங்கு கிடையாது. முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு  சரியான ஆரோக்கியமான  உணவு வேர்க்கடலை என்கின்றனர்  ஊட்டச்சத்து நிபுணர்கள்.

வேர்க்கடலையில் உள்ள சர்க்கரையின் அளவு ரத்தத்தில் மிக குறைந்த அளவே சேர்வதால் பயம்மில்லாமல் சாப்பிடலாம். இதில் காணப்படும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருள், இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆகவே, சர்க்கரை நோயாளிகள் இனி தைரியமாக வேர்க்கடலையை உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்.

வேர்க்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் சோடியத்தின் அளவு மிகக் குறைவாகக் காணப்படுவதால், வேர்க்கடலை சாபிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. அதற்க்கு பதிலாக, ரத்த கொதிப்பு குறையும். வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப் பொருள் உள்ளது.

வேர்க்கடலையை சாப்பிடுவதன் மூலம் உடலில் உற்பத்தியாகும் நைட்ரேட், ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால், இரத்த ஓட்டம் சீராகிறது. இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பொருட்கள், இருதய நோய்கள் உருவாகாமல் தடுக்கிறது. வேர்க்கடலை,  நார்ச்சத்து முகுந்த உணவு என்பதால், மலச்சிக்கல் ஏற்படாது. ஆகவே, கர்ப்பிணிகள் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது.

வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். இதில்தான் நிறைய சத்துக்கள் அடங்கி உள்ளன. வேர்க்கடலையை பச்சையாக சாப்பிடுவதே நல்லது. அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு வயிற்றுகோளாறு ஏற்படலாம். வேர்க்கடலையில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை, ஆரோக்கியமான எலும்பு, பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அது மட்டுமில்லாமல், வயதான பின் ஏற்படும் ஆச்டியோபோரசிஸ் மற்ற எலும்பு தொடர்பான நோயையும் தடுக்கிறது.

No comments: