Pages

Showing posts with label 30 வகை சுண்டல். Show all posts
Showing posts with label 30 வகை சுண்டல். Show all posts

Friday, October 4, 2013

பார்லி - சாபுதானா சுண்டல்

தேவையானவை: 

பார்லி, ஜவ்வரிசி, வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரிப் பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, இஞ்சி விழுது - 1 டீஸ்பூன், மிளகுத் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பார்லி, ஜவ்வரிசியை நன்கு ஊற வைத்து, தண்ணீர் வடிக்கவும். வாணலியில் 
எண்ணெய் விட்டு, ஜவ்வரிசி, உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். இதனுடன் வறுத்த வேர்க்கடலை, முந்திரி, பிஸ்தா, பொட்டுக் கடலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Thursday, October 3, 2013

காராமணி இனிப்பு சுண்டல்


காராமணி இனிப்பு சுண்டல்:

தேவையான பொருட்கள்:

சிவப்பு காராமணி - 1 கப்
பாகு வெல்லம் (பொடித்தது) - 1 கப்
வறுத்துப் பொடித்த எள் - 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

செய்முறை:

சிவப்புக் காராமணியை வருது, இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, இரண்டு விசில் விட்டு இறக்கவும். வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து சிறிது கொதிக்கவிட்டு,  வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு  காய்ச்சவும். இதை வெந்த காராமணியுடன் சேர்த்து, எள்ளுப் பொடி, தேங்காய் துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலந்தால் காராமணி இனிப்பு சுண்டல் தயார்.