Healthy Tips, Natural Beauty, Beauty Tips, Beauty care Skin Care, Hair Beauty, Vegetable Recipes, Natural Food, Indian Recipes, New Recipes, Easy Recipes, Healthy Recipe, Cookery, Healthy Food, Breakfast Recipes, Top Secret Recipes --Visit this blog to know more!
Wednesday, July 13, 2016
தண்ணீர் தரும் அழகு
நாம் பருகும் சுத்தமான நீர் நம் உடலை சுத்தப்படுத்துகிறது. புதுப்பிக்கிறது. சருமத்திற்கு பொலிவை உண்டு பண்ணுகிறது. எடை குறைய உதவுகிறது.
சாப்பிடும் முன் தண்ணீர் பருகினால் குறைவாகச் சாப்பிடலாம்.
உடற்பயிற்சிக்கு இடையில் நீர் பருகுவதும் நல்லது.
முகத்தில் குறைந்தது 20 முதல் 25 முறைகளாவது குளிர்ந்த நீரை முகத்தில் அடித்து கழுவுங்கள். முகம் புத்துணர்வு பெறும் .
வீட்டில் பாத்ரூம் கதவு, ஜன்னலை மூடி விட்டு கொதிக்கும் நீரை பைப்பில் திறந்து விட்டாலோ, அல்லது ஆவி பறக்கும் நீரை தரையில் கொட்டி விட்டாலோ புகை எழும்பும். இதில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்த பின் உடல் வியர்வையை ஒரு சுத்தமான டவலால் துடைத்த பின் குளித்தால் பிரஸ்ஸாக இருக்கும்.
வேப்பிலை அல்லது அரைத்த 50 கிராம் இஞ்சி அல்லது இரண்டு கைப்பிடி புதினா இலைகள் அல்லது செம்பருத்தி இலைகள், பூக்கள் இவற்றை குளிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்துக் குளித்தால் உடல் சருமத்திற்கு மிகவும் நல்லது.
தினமும் எழுந்ததும் வெற்று பாதங்களுடன் திறந்த புல்வெளியில் பத்து நிமிடங்கள் நடக்கலாம். இல்லை முட்டி வரை நனையும்படி குளிர்ந்த நீரில் 10 நிமிடம் நனைத்து வைத்திருந்த பின் துடைத்து விட வேண்டும்.
இப்படி செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பண்டைய சீனர்கள், ஜப்பானியர்கள் இப்படி செய்வார்களாம். காலையில் எழுந்ததும் 4 முதல் 6 டம்ளர்கள் சுத்தமான நீர் பருக வேண்டும்.
வின்ஸ்டன் சர்ச்சில் - கொஞ்சம் தெருஞ்சுக்கங்க
பதினான்கு நூல்களை எழுதி தள்ளிய எழுத்தாளன், வீரம் கொண்டு துப்பாக்கி பிடித்து ராணுவ வீரனாவார். ஓவியராக திகழ்ந்தவர். இரண்டு முறை பிரிட்டனின் பிரதமராக விளங்கியவர். வின்ஸ்டன் சர்ச்சில், போரும் வீரமுமே வாழ்வாக, 23 வயதில் துவங்கிய அவரது போராட்ட வாழ்வு, 90 வயது வரை நீண்டது. துணிவுக்கு மருப்பெயரான சர்ச்சிலின் போர் அனுபவங்கள், 20 நூல்களாக வெளி வந்துள்ளன. இரண்டு உலகப் போர்களை முன்னின்று நடத்தியதும், ஹிட்லருக்கு சவால் விட்டதும், இந்த நூலில் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 'சாவ்ரோலா' என்ற நாவலை எழுதிய இவர், அந்த கதாநாயகனின் அதிரடி வெற்றிகளை கற்பனையில் கண்டதை, இவர் வாழ்விலும் அடைந்தது வியப்புக்கு உரியது.
வீரமும், நேர்மையும், கடும் உழைப்பும், பிடிவாத குணமும் கொண்ட சர்ச்சில், பல முறை தோல்விகளில் இருந்து மீண்டு எழுந்த வரலாற்றை, இந்த நூல் அழகாக பதிவு செய்துள்ளது.
வீரமும், நேர்மையும், கடும் உழைப்பும், பிடிவாத குணமும் கொண்ட சர்ச்சில், பல முறை தோல்விகளில் இருந்து மீண்டு எழுந்த வரலாற்றை, இந்த நூல் அழகாக பதிவு செய்துள்ளது.
மனித உடலின் அதிசய செய்திகள்
மனித உடலுக்குள் ஆயிரத்துக்கு அதிகமான உறுப்புகள், சத்தமில்லாமல் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த உறுப்புகளில் ஒன்று தன் பணியை செய்ய மறுத்தால் மனிதனுக்கு சிக்கல் தான். முதலில் நம் உடலில் உள்ள நமக்கு தெரியாத உறுப்புகள் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
நமது மூக்கு 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலை விட இரவில் மூளை சுறுசுறுப்புடன் இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம் பட்டால் வலி தெரியாது.
சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் நான்கு கனவுகள். நாம் ஒரு அடி எடுத்து வைக்கும் போது நமது உடலில் 200 தசைகள் செயல்படுகின்றன. நம் கண் விழியின் சராசரி எடை 28 கிராம். தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. மூக்கு துவாரங்களை மூடிக்கொண்டு முனங்க முடியாது. நம்மால் வாசனை பிடிக்க முடியாத நிலை அனாச்மிய எனப்படுகிறது. அதிகமாக வாசனை பிடிக்கும் சக்தியை ஹைபரோஸ்மியர் என்கிறார்கள்.
நமது உடலில் உவுலா என்ற உறுப்பு எங்கிருக்கிறது தெரியுமா?
அடிநாக்கு பகுதியில் நாக்கின் மேற்புறம் காணப்படும் சிறு தசையே உவுலா எனப்படுகிறது. நாம் இதனை உள்நாக்கு என்கிறோம். மனித உடலில் உள்ள உறுதியான தசை நமது நாக்குதான். பிறக்கும் போது நமது உடலில், 300 எலும்புகள் உள்ளன. ஆனால் வளர்ச்சி அடைந்த மனித உடலில் 206 எலும்புகள் இருக்கும். பல எலும்புகள் ஒன்றிணைந்து விடுவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
எலும்பின் வெளிப்புறமே கடினமானது. உட்புறம் எலும்புகள் மென்மையானதாக இருக்கும். ஏனெனில் எலும்புகள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனித எடையில் எலும்புகளின் பங்கு 14 சதவீதம். நமது ரத்தம் தண்ணீரைவிட 6 மடங்கு அடர்த்தியானது. ஆண்களின் உடலில் 5.6 லிட்டர் ரத்தமும் பெண்களின் உடலில் 4.5 லிட்டர் ரத்தமும் காணப்படுகிறது. நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் 60 ஆயிரம் மைல்கள் இருக்கும்.
சிறுநீரகம் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தினமும் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது. ஒவ்வொரு மனிதனின் கைரேகையை போலவே கால் ரேகை மற்றும் நாக்குரேகைகள் தனித் தன்மை வாய்ந்தவை.
வாய் விட்டு சிரிங்க சர்க்கரை குறையும்!
பொதுவாக நன்றாக சிரிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் வர வாய்ப்பு குறைவு. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், நல்ல மூடும் உருவாகும். என்றெல்லாம் முன்பே சொல்லப்பட்டன.
இப்போது, டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் நன்றாக வாய் விட்டு சிரித்தால், சாப்பாட்டிற்குப் பிறகு ஏறும் குளுக்கோஸின் அளவு குறையும் என்கிறார்கள். இந்நோய் உள்ளவர்களை இரண்டு தனித் தனி நாட்களில் பரிசோதித்துப் பார்த்து, இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார்கள்.
ஒரு நாள் சீரியசான விரிவுரையை கேட்க வைத்திருக்கிறார்கள். இனொரு நாள் நன்றாக வாய்விட்டுச் சிரிக்கும் காமெடி நிகழ்ச்சியில் பங்குகொள்ள வைத்திருக்கிறார்கள். சீரியசான விரிவுரையை கேட்ட நாளை விட, காமெடி நிகழ்ச்சியில் கலந்து வாய் விட்டு சிரித்த நாளில், அவர்களின் குளுகோஸ் அளவு குறிப்பிட்ட அளவு குறைந்திருந்ததாம்.
புரோட்டா சாப்பிடாதிங்க!
தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்பதி கிடைக்கிறதா? அப்படியானால், ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். இன்று தமிழகம் முழுவதும் அதிகமாக காணப்படுவது பரோட்டா கடைகள் தான். அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை, அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு! விருதுநகர் பரோட்டா, தூத்துக்குடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா.
பரோட்டா எப்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையினால் , மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள், தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின. பரோட்டாவும் பிரபலமடைந்தது. மைதா மாவில் உப்பு போட்டு, தண்ணீர் விட்டு உருட்டி ஒவ்வொரு உருண்டையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி , தோசைக்கல்லில் போடுவார்கள்.
இப்போது பரோட்டாவின் மூலப்பொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பலவகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக்கும் இதில் அடங்கும்.
மைதா எப்படி தயாரிக்கிறார்கள்? நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதவாகும். benzoyl peroxide நாம் முடிக்கும் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம். இந்த ரசாயனம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து, சர்க்கரை நோய் வர காரணியாய் அமைகிறது. இது தவிர alloxan என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்க, கலக்கப்படுகிறது. artificial colours, minerals oils , taste makers preservatives, , sugar, saccarine, ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது. இதில் aloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோய் வரவழைக்க பயன்படுகிறது. ஆக பரோட்டாவில் உள்ள alloxen மனிதனுக்கு நீரழிவு வர துணை புரிகிறது.
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல. மைதாவில் நார் சத்து கிடையாது. நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும். எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்பட வேண்டும்.
இதில் சத்துக்கள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகள் மைதாவினால் செய்த bakery பண்டங்களை உண்ணுவதை தவிர்ப்பது நல்லது. சில அயல் நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன. மைதா உணவுகளை உட்கொள்வதால், சிறுநீரக கல், இருதய கோளாறு, நீரழிவு போன்ற நோய்கள் வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு.

Monday, July 11, 2016
மண்டையை பிளக்கும் மைக்ரேன் தலைவலி
மைக்ரேன் இது ஒரு ஸ்பெஷல் தலைவலி. சில காரணங்களால் சிலருக்கு வரும். ஆனால் வழக்கமான தலைவலி போல, எந்த அறிகுறியோ,அடிக்கடி வருவதோ இருக்காது. ஆனால் வந்தால் உயிரே போகும் அளவுக்கு கடுமையாக இருக்கும்.
இந்த தலைவலி வந்தால், அதை அனுபவிப்பவர்கள், தங்களுக்கு எந்த மாதிரியான வலி இருக்கிறது என்று சொல்லவே முடியாமல் தவிப்பர். அப்படி பயங்கரமாக இருக்கும் தலைவலி, அதிலும், தலையில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தான் வலி இருக்கும். சிலருக்கு மணி கணக்கில், நாட்கணக்கில் நீடிக்கும். கண்களில் கருவளையம் கட்டி, கண் பார்வையும் கூட சிலருக்கு பாதிக்கப்படும். எதைப்பர்த்தலும், ஒரு வித எரிச்சல் ஏற்படும். அதனால் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு இருக்கவே விரும்புவர்.
ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் மைக்ரேன் வரும். பெண்களுக்கு அவர்களுக்கே உரிய மாதவிடாய் பிரச்சனைகளால் வரும். ஆண்களுக்கும் அப்படித்தான். தனித்தனி காரணங்கள் உள்ளன. எப்படியிருந்தாலும், நெற்றிப்போட்டில்தான் பலருக்கு வலி அதிகமாக இருக்கும். குடும்பத்தில் தாய் தந்தை என்று யாருக்காவது மைக்ரேன் (migraine ) இருந்தால், கண்டிப்பாக வாரிசுகளில் யாருக்காவது தொடரும். எல்லாருக்கும் வரும் என்று சொல்ல முடியாது. யாராவது ஒருவருக்கு வரும். அது மகளாக இருக்கலாம்: மானாகவும் இருக்கலாம் மகளாகவும் இருக்கலாம். சாக்லேட், பாலாடைக்கட்டி என்று சில கொழுப்பு சமாச்சாரங்களை அதிகம் சாப்பிடுவோருக்கு இது வரலாம்.
அலர்ஜி: இப்போதுள்ள வாழ்க்கை முறையில், இளம் தலைமுறையினர் அதிக சத்தம், அதிக ஒளியில் தான் காலத்தைக் கழிக்கின்றனர். அதுவும் மைக்ரேனுக்கு காரணம். வாக்மேன் கருவியில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, டி.வி அதிக ஒலியுடன், அதிக கலர் வைத்து பார்ப்பது போன்றவற்றை, இளைய தலைமுறையினர் இப்போதே நிறுத்துவது நல்லது. இதைவிட, சிலருக்கு சில வாசனைகளால் கூட மைக்ரேன் வரும்.சிலரை பார்த்தால், எந்தவித வசனயாவது முகர்ந்தாலோ காற்றில் வந்ததை சுவசித்தாலோ, அவர்களுக்கு லேசாக தலைவலி வரும். ஆரம்பத்திலேயே அவர்கள் தங்களுக்கு அலர்ஜியான விஷயங்களை தவிர்ப்பது நல்லது.
வந்து விட்டால்... மைக்ரோன் (migraine ) என்று வந்து விட்டால், அஜாக்கிரதையாக இருக்க கூடாது. மற்ற தலைவலி போல நினைத்து, கண்ட கண்ட மருந்துகளை கடைகளில் வாங்கி சாப்பிடவோ, மருத்துவ முறைகளை மாற்றவோக் கூடாது. தகுந்த டாக்டரிடம் காட்டி அவரின் ஆலோசனை பேரில், தலைவலி மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். அப்படியிருந்தால், தலைவலி வீரியம் குறையும். சத்தம் இல்லாத, வெளிச்சம் வராத இருட்டறையில் ஒய்வு எடுப்பது தலைவலி கடுமையாக குறைக்கும். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் மைக்ரேன் வந்தால், அவர்கள் தங்கள் உணவில் உப்பை குறைத்துக் கொள்ளவது நல்லது. அதுபோல, ஆண்கள், குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்றால், அதை விட்டு விடுவது நல்லது.
ஸ்டெம்செல் சிகிச்சை எதிர்கால நம்பிக்கை
அண்மை காலமாக மருத்துவத் துறை வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படும் 'ஸ்டெம்செல்' சிகிச்சையின் மூலம், பல்வேறு நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில் மனித உடலில் திசுக்கள் மற்றும் பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் சேதங்கள் நிரந்தரமாகச் சீரமைக்கப்படுகின்றன.
எலும்பு மஜ்ஜை, கருப்பையில் உள்ள கரு, வெண்படலம், ரத்தம், பல், கலீரல் ஆகியவற்றின் திசுக்களில் இருந்து "ஸ்டெம்செல்"கள்உற்பத்தி செய்யப்படுகின்றன. "ஸ்டெம்செல்" சிகிச்சை, மருத்துவத்துறையில் ஒரு புரட்சியாகவும், மனித வாழ்வுக்கு மறுமலர்ச்சியையும் தந்து, வியத்தகு வளர்ச்சியை அடைந்து வருகிறது.
ஸ்டெம்செல்" சிகிச்சை இப்போது நீரழிவு நோய், நிணநீர் மண்டலப் புற்றுநோய், மூளைக்கட்டி இதய நோய், முதுகுத்தண்டுவடப் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சனை உள்ளிட்ட 85-க்கும் மேற்ப்பட்ட நோய்களுக்கு நிரந்தரத் தீர்வாகப் பயன்படுத்தப் படுகிறது. அடுத்த பரிணாம வளர்ச்சியாக, இப்போது பெண்களின் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தக் கழிவுகளில் இருந்து "ஸ்டெம்செல்"களைப் பிரித்தெடுத்து அதன் மூலம் சிகிச்சை அளிக்கவும் மருத்துவத் துறை பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
"ஸ்டெம்செல்" குறித்த விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையத் தொடங்கியுள்ளது. இதனால் "ஸ்டெம்செல்" களை அதற்குரிய "ஸ்டெம்செல்" வங்கிகளில் சேமித்து வைப்பது அதிகரித்து வருகிறது. இப்போது தொப்புள் கொடியில் இருந்தும், எலும்பு மஜ்ஜையில் இருந்தும் எடுக்கப்படும் "ஸ்டெம்செல்"களைச் சேமித்து வைப்பதே அதிகமாக உள்ளது. இந்த வகை "ஸ்டெம்செல்"களை சேமித்து வைக்க தனியார் "ச்டேம்செல்" வங்கிகள் ரூ . 25 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கின்றன. இக்கட்டணத்தை சில தனியார் "ஸ்டெம்செல்" வங்கிகள், தவணை முறையிலும் வசூலிக்கின்றன. அதேவேளையில் "ஸ்டெம்செல்" மூலம் சிகிச்சை பெறுவதற்குரிய வழி முறைகளையும், வங்கிகளே செய்து கொடுக்கின்றன.
இதன் காரணமாக நடுத்தர மக்களும் "ஸ்டெம்செல்" களை தனியார் "ஸ்டெம்செல்" வங்கிகளிடம் சேமித்து வைக்கும் பழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.
"ஸ்டெம்செல்" மூலம் வருங்காலத்தில் மேலும் பல நோய்களுக்குத் தீர்வு காணும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலை ஏற்ப்படும் போது, "ஸ்டெம்செல்" மூலம் இப்போது அடையும் பயனைவிட மக்கள் அடைய முடியும்.
ஆனால் இப்போதுள்ள் சூழ்நிலையில், "ஸ்டெம்செல்" சேமித்து வைக்கத் தனியார் நிறுவங்கள் மட்டுமே "ஸ்டெம்செல்" வங்கிகளை உருவாக்கி வருகின்றன. "ஸ்டெம்செல்" சிகிச்சையளிக்கும் வசதி தமிழகத்தில் 4 மருத்துவமனைகளில் உள்ளது. இதில் 3 மருத்துவமனைகள் சென்னையில் உள்ளது. ஒரு மருத்துவமனை மட்டும் வேலூரில் உள்ளது.

Subscribe to:
Posts (Atom)