Pages

Wednesday, July 13, 2016

புரோட்டா சாப்பிடாதிங்க!



தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்பதி கிடைக்கிறதா? அப்படியானால், ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். இன்று தமிழகம் முழுவதும் அதிகமாக காணப்படுவது பரோட்டா கடைகள் தான். அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை, அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு! விருதுநகர் பரோட்டா, தூத்துக்குடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா.

பரோட்டா எப்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையினால் , மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள், தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின. பரோட்டாவும் பிரபலமடைந்தது. மைதா மாவில் உப்பு போட்டு, தண்ணீர் விட்டு உருட்டி ஒவ்வொரு உருண்டையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி , தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலப்பொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பலவகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக்கும் இதில் அடங்கும்.
மைதா எப்படி தயாரிக்கிறார்கள்? நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பனசாயல் பெரோசிடே (benzoyl  peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதவாகும்.  benzoyl  peroxide நாம் முடிக்கும் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம். இந்த ரசாயனம் மாவில் உள்ள protein  உடன் சேர்ந்து, சர்க்கரை நோய் வர காரணியாய் அமைகிறது. இது தவிர alloxan  என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்க, கலக்கப்படுகிறது. artificial  colours, minerals  oils , taste makers preservatives, , sugar, saccarine, ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது. இதில் aloxan  சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோய் வரவழைக்க பயன்படுகிறது. ஆக பரோட்டாவில் உள்ள alloxen  மனிதனுக்கு நீரழிவு வர துணை புரிகிறது.

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல.  மைதாவில் நார் சத்து கிடையாது. நார் சத்து இல்லா  உணவு நம் ஜீரண  சக்தியை குறைத்து விடும். எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்பட வேண்டும்.

இதில் சத்துக்கள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகள் மைதாவினால் செய்த bakery பண்டங்களை உண்ணுவதை தவிர்ப்பது நல்லது. சில அயல் நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன. மைதா உணவுகளை உட்கொள்வதால், சிறுநீரக கல், இருதய கோளாறு, நீரழிவு போன்ற நோய்கள் வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு.

Monday, July 11, 2016

மண்டையை பிளக்கும் மைக்ரேன் தலைவலி

மைக்ரேன் இது ஒரு ஸ்பெஷல் தலைவலி. சில காரணங்களால் சிலருக்கு வரும். ஆனால் வழக்கமான தலைவலி போல, எந்த அறிகுறியோ,அடிக்கடி வருவதோ இருக்காது. ஆனால் வந்தால் உயிரே போகும் அளவுக்கு கடுமையாக இருக்கும்.
இந்த தலைவலி வந்தால், அதை அனுபவிப்பவர்கள், தங்களுக்கு எந்த மாதிரியான வலி இருக்கிறது என்று சொல்லவே முடியாமல் தவிப்பர். அப்படி பயங்கரமாக இருக்கும் தலைவலி, அதிலும், தலையில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தான் வலி இருக்கும். சிலருக்கு மணி கணக்கில், நாட்கணக்கில் நீடிக்கும். கண்களில் கருவளையம் கட்டி, கண் பார்வையும் கூட சிலருக்கு பாதிக்கப்படும். எதைப்பர்த்தலும், ஒரு வித எரிச்சல் ஏற்படும். அதனால் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு இருக்கவே விரும்புவர்.

ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் மைக்ரேன் வரும். பெண்களுக்கு அவர்களுக்கே உரிய மாதவிடாய் பிரச்சனைகளால் வரும். ஆண்களுக்கும் அப்படித்தான். தனித்தனி காரணங்கள் உள்ளன. எப்படியிருந்தாலும், நெற்றிப்போட்டில்தான் பலருக்கு வலி அதிகமாக இருக்கும். குடும்பத்தில் தாய் தந்தை என்று யாருக்காவது மைக்ரேன் (migraine ) இருந்தால், கண்டிப்பாக வாரிசுகளில் யாருக்காவது தொடரும். எல்லாருக்கும் வரும் என்று சொல்ல முடியாது. யாராவது ஒருவருக்கு வரும். அது மகளாக இருக்கலாம்: மானாகவும் இருக்கலாம் மகளாகவும் இருக்கலாம். சாக்லேட், பாலாடைக்கட்டி என்று சில கொழுப்பு சமாச்சாரங்களை அதிகம் சாப்பிடுவோருக்கு இது வரலாம்.

அலர்ஜி: இப்போதுள்ள வாழ்க்கை முறையில், இளம் தலைமுறையினர் அதிக சத்தம், அதிக ஒளியில் தான் காலத்தைக் கழிக்கின்றனர். அதுவும் மைக்ரேனுக்கு காரணம். வாக்மேன் கருவியில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, டி.வி அதிக ஒலியுடன், அதிக கலர் வைத்து பார்ப்பது போன்றவற்றை, இளைய தலைமுறையினர் இப்போதே நிறுத்துவது நல்லது. இதைவிட, சிலருக்கு சில வாசனைகளால் கூட மைக்ரேன் வரும்.சிலரை பார்த்தால், எந்தவித வசனயாவது முகர்ந்தாலோ காற்றில் வந்ததை சுவசித்தாலோ, அவர்களுக்கு லேசாக தலைவலி வரும். ஆரம்பத்திலேயே அவர்கள் தங்களுக்கு அலர்ஜியான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. 

வந்து விட்டால்... மைக்ரோன் (migraine ) என்று வந்து விட்டால், அஜாக்கிரதையாக இருக்க கூடாது. மற்ற தலைவலி போல நினைத்து, கண்ட கண்ட மருந்துகளை கடைகளில் வாங்கி சாப்பிடவோ, மருத்துவ முறைகளை மாற்றவோக் கூடாது. தகுந்த டாக்டரிடம் காட்டி அவரின் ஆலோசனை பேரில், தலைவலி மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். அப்படியிருந்தால், தலைவலி வீரியம் குறையும். சத்தம் இல்லாத, வெளிச்சம் வராத இருட்டறையில் ஒய்வு எடுப்பது தலைவலி கடுமையாக குறைக்கும். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் மைக்ரேன் வந்தால், அவர்கள் தங்கள் உணவில் உப்பை குறைத்துக் கொள்ளவது நல்லது. அதுபோல, ஆண்கள், குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்றால், அதை விட்டு விடுவது நல்லது.

ஸ்டெம்செல் சிகிச்சை எதிர்கால நம்பிக்கை


அண்மை காலமாக மருத்துவத் துறை வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படும் 'ஸ்டெம்செல்' சிகிச்சையின் மூலம், பல்வேறு நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில் மனித உடலில் திசுக்கள் மற்றும் பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் சேதங்கள் நிரந்தரமாகச் சீரமைக்கப்படுகின்றன.
எலும்பு மஜ்ஜை, கருப்பையில் உள்ள கரு, வெண்படலம், ரத்தம், பல், கலீரல் ஆகியவற்றின் திசுக்களில் இருந்து "ஸ்டெம்செல்"கள்உற்பத்தி செய்யப்படுகின்றன. "ஸ்டெம்செல்" சிகிச்சை, மருத்துவத்துறையில் ஒரு புரட்சியாகவும், மனித வாழ்வுக்கு மறுமலர்ச்சியையும் தந்து, வியத்தகு வளர்ச்சியை அடைந்து  வருகிறது. 
ஸ்டெம்செல்" சிகிச்சை இப்போது நீரழிவு நோய், நிணநீர் மண்டலப் புற்றுநோய், மூளைக்கட்டி இதய நோய், முதுகுத்தண்டுவடப் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சனை உள்ளிட்ட 85-க்கும் மேற்ப்பட்ட நோய்களுக்கு நிரந்தரத் தீர்வாகப் பயன்படுத்தப் படுகிறது. அடுத்த பரிணாம வளர்ச்சியாக, இப்போது பெண்களின் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தக் கழிவுகளில் இருந்து "ஸ்டெம்செல்"களைப் பிரித்தெடுத்து அதன் மூலம் சிகிச்சை அளிக்கவும் மருத்துவத் துறை பெரும் முயற்சி எடுத்து வருகிறது.

"ஸ்டெம்செல்"  குறித்த விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையத் தொடங்கியுள்ளது. இதனால் "ஸ்டெம்செல்" களை அதற்குரிய "ஸ்டெம்செல்" வங்கிகளில் சேமித்து வைப்பது அதிகரித்து வருகிறது. இப்போது தொப்புள் கொடியில் இருந்தும், எலும்பு மஜ்ஜையில் இருந்தும் எடுக்கப்படும் "ஸ்டெம்செல்"களைச் சேமித்து வைப்பதே அதிகமாக உள்ளது. இந்த வகை "ஸ்டெம்செல்"களை சேமித்து வைக்க தனியார் "ச்டேம்செல்" வங்கிகள் ரூ . 25 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கின்றன. இக்கட்டணத்தை சில தனியார் "ஸ்டெம்செல்" வங்கிகள், தவணை முறையிலும் வசூலிக்கின்றன. அதேவேளையில் "ஸ்டெம்செல்" மூலம் சிகிச்சை பெறுவதற்குரிய வழி முறைகளையும், வங்கிகளே செய்து கொடுக்கின்றன.

இதன் காரணமாக நடுத்தர மக்களும் "ஸ்டெம்செல்" களை தனியார் "ஸ்டெம்செல்" வங்கிகளிடம் சேமித்து வைக்கும் பழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

"ஸ்டெம்செல்" மூலம் வருங்காலத்தில் மேலும் பல நோய்களுக்குத் தீர்வு காணும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலை ஏற்ப்படும் போது, "ஸ்டெம்செல்" மூலம் இப்போது அடையும் பயனைவிட மக்கள் அடைய முடியும்.

ஆனால் இப்போதுள்ள் சூழ்நிலையில், "ஸ்டெம்செல்" சேமித்து வைக்கத் தனியார் நிறுவங்கள் மட்டுமே "ஸ்டெம்செல்" வங்கிகளை உருவாக்கி வருகின்றன. "ஸ்டெம்செல்" சிகிச்சையளிக்கும் வசதி தமிழகத்தில் 4 மருத்துவமனைகளில் உள்ளது. இதில் 3 மருத்துவமனைகள் சென்னையில் உள்ளது. ஒரு மருத்துவமனை மட்டும் வேலூரில் உள்ளது. 

காதுவலி குணமாக...


இரண்டு கிராம் பெருங்காயத்தை, 
20 மில்லி நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து, 
ஓரிரு துளிகள் காதில் விட்டால், காது வலி குணமாகும்.

இடுப்புவலி நீங்க வழிகள்


  • சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணையைவிட்டு, மீண்டும் கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளம்சூட்டுடன் இடுப்பில் நன்றாக தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
  •  வெண்டைக்காய் விதையை சிறிது பார்லி கஞ்சியில்போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். 
  • உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையை சாப்பிட்டு வந்தால், ரத்தக்குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
  • வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. காரத்தைக் குறைத்துக் சாப்பிடுங்கள். தேங்காய் துண்டுகளை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவரா? நீங்கள்



  • பொடி செய்த ஓமத்தை, பாலில் கலந்து வடிகட்டி படுக்கப் போவதற்கு முன் குழந்தைகளுக்கு கொடுத்தால், சளியை தூர விரட்டும். 
  • திராட்சையை பன்னீரில் ஊற வைத்து சாப்பிட்டால் இதயம் பலம் பெரும், தொடர்ந்து திராட்சை சாப்பிடுபவர்களுக்கு நிச்சயம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • மாதுளம் பழச்சாறு தினமும் குடித்து வந்தால், ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என, பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
  • குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால், தினமும் உணவுக்குப் பின், வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள். 
  • சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்குங்கள்,வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில், இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வர, நரம்பு தளர்ச்சி, குணமாகும், உடலும் குளிர்ச்சியடையும்.

எது அசல் தேன்?


அசல் தேன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்டுப் போகாமல் நல்ல நிலையில் அப்படியே இருக்கும். ஆனால் சிலர் சர்க்கரைப் பாகு அல்லது வெள்ளப் பாகுவை தேன் என்று விற்று விடுகின்றனர். நாமும் அதை அசல் தேன் என்று நம்பி விடுகின்றோம்.

அசல் தேன், கலப்பட தேன் எது? என்பதை எளிமையான முறையில் மூன்று வழிகளில் கண்டறியலாம்.

1) ஒரு வெள்ளைத் தாளில் ஒரு துளி தேனை விடுங்கள்.அந்த தேனை தேன் ஊற்றப்பட்ட காகிதம் உறிஞ்சாமலும், மேலும் அந்த வெள்ளைத் தாளில் பரவாமலும் இருந்தால், அது அசல் தேன் என்பதை கண்டறியலாம்.

அல்லது அந்த வெள்ளைத் தாள் ஒரு துளி தேனை உறிஞ்சிவிட்டாலோ, பரவ விட்டாலோ அந்த தேன் கலப்பட தேன் என்பதை கண்டறியலாம்.

2) ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள், அதில் ஒரு துளி தேனை விடுங்கள். அந்த ஒரு துளி தேன் தண்ணீரில் கரையாமல், நேராக கீழே சென்று விழுந்தால் அது அசல் தேன்.

ஒரு வேலை அந்த ஒரு துளி தேன் தண்ணீரோடு கலந்து விட்டால் அது கலப்பட தேன் என்பதை கண்டறியலாம்.

ஒரு தீக்குச்சியின் மருந்துப் பகுதியில், ஒரு துளி தேனை விட்டு, தீப்பெட்டியின் பக்க வாட்டில் உள்ள மருந்துப் பட்டையில் உரசுங்கள், உடனே தீப்பற்றி எறிந்தால், அது அசல் தேன் என்பதை கண்டறியலாம்.

ஒரு வேலை அந்த தீக்குச்சி எரியாமல் போனால் அது கலப்பட தேன் என்பதை கண்டறியலாம்.