Pages

Wednesday, May 6, 2015

பப்பாளி செய்யும் மாயம் என்ன?




பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.

பப்பாளி க்கான பட முடிவு
பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சங்கதி உள்ளது.  

மருத்துவக் குணங்கள்:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி, மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும்.

முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி. அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.

வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும். பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.

பெண்களுக்கு வசீகர முகத்தை தரும் பத்மாசனம்


 பெண்களுக்கு வசீகர முகத்தை தரும் பத்மாசனம்

தாமரை மலர் போன்று எப்பொழுதும் மலர்ந்த முகமாய் காட்சியளிக்க இந்த ஆசனம் உதவுகிறது. தண்ணீரின் அழுத்தத்தை தாண்டி தாமரை மலர் கம்பீரமாய் தனது இதழ்களை விரித்து காட்சியளிப்பது போல் முகமானது மிகவும் கம்பீரமாக காட்சியளிக்க பத்மாசனம் ஒரு கருவியாக இருக்கிறது.

தாமரை மலர் தனது தண்டை நிமிர்த்தி தண்ணீரிலிருந்து நிற்பது போல், பத்து விரல்களையும் விரித்து முத்திரை பதித்து மலர்ந்த முகத்துடன் அமரும் முறையே பத்மாசனம். பத்மாசனம் செய்வதற்கு தளர்ந்த, மென்மையான, ஆடைகளை அணிய வேண்டும். பருத்தியால் செய்யப்பட்ட தரைவிரிப்பு நல்லது. இந்த விரிப்பில் கால்களை நீட்டியவாறு அமர்ந்து கொள்ளவும்.  


முதலில் வலது காலை மடித்து, வலது பாதத்தை இடது தொடை மீது வயிற்றை ஒட்டியவாறு வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் இடது காலை மடித்து இடது பாதத்தைத வலது தொடை மீது வயிற்றை ஒட்டியவாறு வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கை மற்றும் நீட்டிய விரல்கள் வெளியில் தெரியுமாறு புறங்கையை வலது முழங்கால் மற்றும் இடது புறங்கையை இடது முழங்காலின் மீது கைகளின் பெருவிரல் நுனி மற்றும் ஆட்காட்டி விரல் நுனியை வட்டமாக தொட்டு, இரண்டு கைகளிலும் சின் முத்திரை பதிக்கவும்.

நெஞ்சு மற்றும் முதுகுத்தண்டை நிமிர்த்தி, கண் இமைகளை மூடி, சீரான சுவாசத்தில் மனதை அலைபாயவிடாமல் வேறு எந்த சிந்தனை குறுக்கீடும் இன்றி இருக்கவும். சின் முத்திரை பிடித்து கைகளை மடிக்காது நேராக வைக்கவும்.

ஒரு நிமிடம் வரை இந்தப் பயிற்சியை செய்து பின் கண் இமைகளை திறந்து மெதுவாக கைவிரல்களை விடுவித்து அதன்பின் இடது காலை முதலிலும், வலது காலை அடுத்தும் பிரித்து கால்களை நீட்டி பத்மாசனத்திலிருந்து விடுபட வேண்டும். இது போல் 15 முதல் 30 நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்யுங்கள். 

பலன்கள் :

பத்மாசனம் அனைத்து ஆசனங்களுக்கும் அடிப்படையான ஒரு ஆசனமாக இருக்கிறது. இந்த பயிற்சியால் பெண்களின் இடுப்பு பகுதி மற்றும் முழங்கால்கள் வலுவடைகிறது. மனம் அமைதி பெறுகிறது. தொடை, இடுப்பு மற்றும் உடலின் தேவையில்லாத கொழுப்பு கரைகிறது. கூன் முதுகு வராமல் தடுக்கிறது. பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் கூட எளிதாக செய்து அதிக பலன்களை பெறக்கூடிய ஆசனம் இது.

கண்களில் சுற்றியுள்ள கருவளையத்தை போக்கும் சமையலறைப் பொருட்கள்


 கண்களில் சுற்றியுள்ள கருவளையத்தை போக்கும் சமையலறைப் பொருட்கள்

சமையலறையில் இருக்கும் ஒருசில பொருட்களைக் கொண்டே கருவளையங்களைப் போக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

• தக்காளியை அரைத்தோ அல்லது வட்டமாக வெட்டியோ கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், கருவளையங்கள் மறைந்துவிடும்.

• உருளைக்கிழங்கை சாறு எடுத்தோ அல்லது வட்டமாக வெட்டியோ கண்களின் மேல் வைத்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் தவறாமல் செய்து வர கருவளையம் காணாமல் போகும்.

• க்ரீன் டீ பேக்கை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்த டீ பேக்கை ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, கண்களின் மேல் வைத்து 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், கருவளையம் மறைவதோடு, கண்களும் புத்துணர்ச்சி பெறும். 

Tuesday, May 5, 2015

தலை அரிப்பை போக்க உதவும் இயற்கை சிகிச்சை


 தலை அரிப்பை போக்க உதவும் இயற்கை சிகிச்சை

பொதுவாகவே தலைக்கு அடிக்கடி கலரிங் பண்ணுகிறவர்களுக்கும் ஹேர் டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி நரைத்தல் என்று பல பிரச்சனைகள் ஏற்படும். இங்கே நான் சொல்லும் வழிகளை சரியாகப் பின்பற்றினாலே உங்கள் கூந்தல் பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும்.  

முதலில், கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் முடி நார்மல் நிலைக்கு வரவேண்டும். அதற்கான சிகிச்சை இது... டீயை வடிகட்டி... அதன் டிகாஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம் இருமுறை தலைக்குக் குளியுங்கள்.

இரண்டாவது தடவை டிகாஷனுடன் 2 கடுக்காய் தோலையும் போட்டு கொதிக்க வைத்து உபயோகியுங்கள். இது போல் ஒரு மாதம் தொடர்ந்து குளித்து வந்தாலே முடியின் வறட்டுத்தன்மை போய்விடும். கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக கருமையா
கும்.

அடுத்தது, அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்! டிகாஷன் சிகிச்சை முடிந்த பிறகு இதைத் தொடங்குங்கள்.

தேங்காய்க்கீற்று - 2
வெள்ளை மிளகு - 1 டீஸ்பூன்...


இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன், பொடுகுத் தொல்லையும் ஓடிப் போகும்.

மூன்றாவது சிகிச்சை, கூந்தல் கருகருவென்று வளருவதற்கு...

இளம் மருதாணி இலை - 50 கிராம்,
நெல்லிக்காய் - கால் கிலோ,
வேப்பங்கொழுந்து - 2 கிராம்...
 

மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக்குங்கள். இந்த விழுதை, அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுங்கள். எண்ணெய் தெளிந்து தைலமாகிவிடும். தினமும் தலை வாரும் முன் இந்தத் தைலத்தைத் தடவி வந்தால் எல்லா பாதிப்பும் மறைந்து, கூந்தல் கருகருவென வளரத் தொடங்கும்.

உங்கள் கூந்தலுக்கான இயற்கை கலரிங் முறை ஒன்றையும் சொல்கிறேன்.

சீயக்காயவுடன் ஒரு பீட்ரூட்டின் சாறை கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள். இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து பாருங்கள். மூன்றே மாதத்துக்குள் உங்கள் தலை மினுமினுப்பதை உணர்வீர்கள். அதன் பிறகு நீங்கள் ஹேர் டையோ, கலரிங்கோ செய்ய வேண்டிய அவசியமே வராது.  


Sunday, May 3, 2015

ஆரோக்கியத்தை தூக்கி வீசாதீங்க!


 கறிவேப்பிலை க்கான பட முடிவு
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை, அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து, சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து, இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும்.

பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம். கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து, நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்ததுள்ளது. தாளிக்கும் போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும், புற்றுநோய் உருவாக்கும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே, வாயில் போட்டு மென்று, சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். தினசரி வெறும் வயிற்றில், கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால், நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால், குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

புதுப்புது அர்த்தங்கள்: காலத்தை புரிந்து கொள்ளுங்கள்


 
நேரத்தை வீணாக்க வேண்டாம்; காலம் பொன் போன்றது' என்ற பழமொழிகள் எல்லாம், நாம் அடிக்கடி கேட்டவை; . 'நேரத்தை வீணாக்காமல், ஏதாவது செய்தால், நல்லது' என்று அந்த பழமொழிகளுக்கு இப்போது அர்த்தம் சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில், எப்போது வேண்டுமானாலும், எந்த வேலையையும் செய்யலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அது தவறு.

உண்மை என்ன? : செய்ய வேண்டியதை, செய்ய வேண்டிய நேரத்தில், செய்ய வேண்டும். மாற்றியோ, நேரம் தவறியோ, காலம் தாழ்த்தியோ செய்வதால், எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. படிப்பதில், பொருள் ஈட்டுவதில், திருமணம் செய்துகொள்வதில், அர்த்தம் மற்றும் நோக்கம் இருக்கின்றன. அவற்றை உரிய காலத்தில் செய்யும் போதுதான், பலனை முழுமையாக அனுபவிக்க முடியும். தண்டனை கூட உரிய நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும். உரிய நேரத்தை தவறவிட்டோர், மகிழ்ச்சியையும் நல்ல அனுபவத்தையும் பெறும் வாய்ப்பு மிகமிக குறைவு தான்.

இன்றைய நிலையில், நேரத்தை வீணாக்காமல் ஏதாவது செய்தால், நேரத்தை பயனுள்ளதாக மாற்றிவிட்டதாக கருதுகின்றனர். இத்தகைய கருத்திற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. நேரத்தை வீணாக்க வேண்டும் என்பதற்கு அர்த்தமே, காலம் தவறி செயல்பட வேண்டாம், என்பதுதான். எனவே, காலத்தை புரிந்து செயல்படுங்கள். பலபேர், மிகுதியான காலத்தை வைத்துக்கொண்டு வீணாகிப் போகின்றனர். காலத்தை பொன்னாக மாற்றுவது நம் கையில் தான் இருக்கிறது.

சரும சுருக்கத்தை போக்கும் வோட்கா பேஷியல்


 vodka facial க்கான பட முடிவு

பேஷியல் என்பது நம் சருமத்தை பொலிவாக மட்டுமின்றி மிருதுவாகவும் வைப்பதற்காகவும் செய்யப்படுவதாகும்.

சருமத்தை அழகாக்குவதில் ஒயின், வோட்கா போன்றவை சிறப்பான இடத்தை பெறுகின்றன.

ஆனால் மற்ற மதுபான பேஷியல்களை ஒப்பிடுக்கையில் வோட்கா பேஷியல் சற்று வித்தியாசமானது.

இரவில் படுக்கும் முன்பாக புதினா, தேனீர், எலுமிச்சை பழ சாறுடன் இரண்டு தேக்கரண்டி வோட்கா சேர்த்து குளிர்சாதன

உள்பெட்டியில் (பிரீஸர்) பத்திரமாக வையுங்கள்.

காலையில் பார்த்தால் வோட்கா கலவை அப்படியே ஐஸ் கட்டியாக உறைந்திருக்கும்.

இதை வெளியே எடுத்து முகத்தில் 10 நிமிடம் தடவி வர வேண்டும்.

இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

இதை அடிக்கடி பூசிக்கொள்வதால் நாளடைவில் உங்கள் முகம் மிருதுவாவதை காணலாம்.

முகத்தில் உள்ள சுருக்கங்கள், பருக்களுக்கு இந்த பேஷியல் ஒரு சிறந்த மருந்து.

வெயிலில் செல்லும் முன்பு இதை போட்டுக் கொண்டு சென்றால் சருமம் மாசுபடாமல் இருக்கும்.

இந்த பேஷியலை முடித்துவிட்டு உங்களை கண்ணாடியில் பாருங்கள். முகம் பளபளப்பதை கண்கூடாக பார்க்க முடியும்.