Pages

Showing posts with label கூந்தல் கருகருவென்று வளருவதற்கு. Show all posts
Showing posts with label கூந்தல் கருகருவென்று வளருவதற்கு. Show all posts

Tuesday, May 5, 2015

தலை அரிப்பை போக்க உதவும் இயற்கை சிகிச்சை


 தலை அரிப்பை போக்க உதவும் இயற்கை சிகிச்சை

பொதுவாகவே தலைக்கு அடிக்கடி கலரிங் பண்ணுகிறவர்களுக்கும் ஹேர் டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி நரைத்தல் என்று பல பிரச்சனைகள் ஏற்படும். இங்கே நான் சொல்லும் வழிகளை சரியாகப் பின்பற்றினாலே உங்கள் கூந்தல் பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும்.  

முதலில், கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் முடி நார்மல் நிலைக்கு வரவேண்டும். அதற்கான சிகிச்சை இது... டீயை வடிகட்டி... அதன் டிகாஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம் இருமுறை தலைக்குக் குளியுங்கள்.

இரண்டாவது தடவை டிகாஷனுடன் 2 கடுக்காய் தோலையும் போட்டு கொதிக்க வைத்து உபயோகியுங்கள். இது போல் ஒரு மாதம் தொடர்ந்து குளித்து வந்தாலே முடியின் வறட்டுத்தன்மை போய்விடும். கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக கருமையா
கும்.

அடுத்தது, அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்! டிகாஷன் சிகிச்சை முடிந்த பிறகு இதைத் தொடங்குங்கள்.

தேங்காய்க்கீற்று - 2
வெள்ளை மிளகு - 1 டீஸ்பூன்...


இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன், பொடுகுத் தொல்லையும் ஓடிப் போகும்.

மூன்றாவது சிகிச்சை, கூந்தல் கருகருவென்று வளருவதற்கு...

இளம் மருதாணி இலை - 50 கிராம்,
நெல்லிக்காய் - கால் கிலோ,
வேப்பங்கொழுந்து - 2 கிராம்...
 

மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக்குங்கள். இந்த விழுதை, அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுங்கள். எண்ணெய் தெளிந்து தைலமாகிவிடும். தினமும் தலை வாரும் முன் இந்தத் தைலத்தைத் தடவி வந்தால் எல்லா பாதிப்பும் மறைந்து, கூந்தல் கருகருவென வளரத் தொடங்கும்.

உங்கள் கூந்தலுக்கான இயற்கை கலரிங் முறை ஒன்றையும் சொல்கிறேன்.

சீயக்காயவுடன் ஒரு பீட்ரூட்டின் சாறை கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள். இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து பாருங்கள். மூன்றே மாதத்துக்குள் உங்கள் தலை மினுமினுப்பதை உணர்வீர்கள். அதன் பிறகு நீங்கள் ஹேர் டையோ, கலரிங்கோ செய்ய வேண்டிய அவசியமே வராது.