Pages

Showing posts with label கறிவேப்பிலை. Show all posts
Showing posts with label கறிவேப்பிலை. Show all posts

Sunday, May 3, 2015

ஆரோக்கியத்தை தூக்கி வீசாதீங்க!


 கறிவேப்பிலை க்கான பட முடிவு
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை, அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து, சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து, இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும்.

பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம். கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து, நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்ததுள்ளது. தாளிக்கும் போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும், புற்றுநோய் உருவாக்கும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே, வாயில் போட்டு மென்று, சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். தினசரி வெறும் வயிற்றில், கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால், நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால், குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Saturday, September 6, 2014

கட்டழகியாக கறிவேப்பிலை


சமையலில் சுவையை கூட்டுவதெ கறிவேப்பிலைதான். கடைகளில் காய் கறி வாங்கும் போதுசிறிது  கறிவேப்பிலையை கொசுறாக கேட்டு வாங்காத பெண்களே கிடையாது. கறிவேப்பிலையின் அருமை, பெருமையும், சத்தும் தெரியாமல் சாப்பாட்டில் கிடந்தால் வெளியே தூக்கி எறிந்துவிடுகிறார்கள்.

  • உணவுச் செரிமானத்திற்கு ஓர் உன்னதமான பொருளாக விளங்குகிறது கறிவேப்பிலை. வைட்டமின் ஏ' சுண்ணாம்புச் சத்து, 'போலிக் ஆசிட்' போன்றவை நிரம்பி உள்ளது. இருப்புச்சத்தை மிகைப்படுத்தி, உடலுக்கு உறுதியைக் கொடுக்கிறது. முதுமை பருவத்தில் ஏற்ப்படும் எலும்பு சம்பந்தமான நோய்கள் வராமலும் தடுக்கும். 


  • கெட்ட கொழுப்பைக் கரைத்து கட்டழகை கொடுக்கிறது.ஒவ்வாமையால்  தோலில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கிறது. இதிலுள்ள 'பி-கரோட்டின்' உடல் இயக்கத்தை சீராக்குகிறது. 

  • தலைமுடி கருப்பாகவும், அடர்த்தியாக வளரவும், கண் பார்வை கூர்மைக்கும் சிறந்த மூலிகையாக கறிவேப்பிலை பயன்படுகிறது. இதன்  இலைகளை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைத்து தலையில் தேய்த்து வந்தால் நல்ல பலனைத் தரும்.

  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த இலையை பச்சையாக மென்று தின்றாலோ, அல்லது பொடி செய்து நீரில் கலந்து பருகினாலோ ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.                                                         இத்தனை மருத்துவக்குணங்கள் நிறைந்த கருவேப்பிலையின் பூர்வீகம் தென்னிந்தியா என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

Sunday, March 9, 2014

கொழுப்புகளை குறைக்கும் உணவுகள்

உணவு
உடல் எடையை அதிகரித்து விட்டு, அதை குறைக்க முடியாமல் ஜிம், தினமும் உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்றவற்றை பின்பற்றி வருபவர்கள் ஏராளம். ஆனால் அவ்வாறு சரியாக உண்ணாமல் இருப்பதால் பல நோய்கள் வருகின்றன.
ஏனெனில் தினமும் உடலில் இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். மேலும் உடலில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க, சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாக வாழலாம்.
மஞ்சள்: மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, அதிக இரத்த அழுத்தம் எற்படாமல், இரத்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும்.
ஏலக்காய்: இது ஒரு சிறந்த உணவுப் பொருள். அதை உண்டால் உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இது ஒரு சிறந்த செரிமானப் பொருள். ஆகவே எந்த உணவு உண்டாலும், அதை நன்றாக செரித்துவிடும். ஆகவே அதனை தினமும் உணவுப் பொருட்களில் சேர்த்தால், உடல் எடை குறையும்.
மிளகாய்: உணவில் சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. மேலும் இதில் உள்ள கேப்சைசின்(capsaicin) உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும். கேப்சைசின் என்பது வெப்ப ஊட்ட பொருள். அது இருக்கும் உணவுப்பொருளை உண்பதால், 20 நிமிடங்களில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும்.
கறிவேப்பிலை: அதை தினமும் உண்பதால் எடையானது எளிதாக குறையும். ஏனெனில் இந்த இலை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் டாக்ஸின் போன்றவற்றை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், அதனை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும்.
பூண்டு: இது ஒரு சிறந்த கொழுப்பை கரைக்கும் பொருள். ஏனெனில் இதில் சல்பர் இருக்கிறது. இது கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும்.
கடுகு எண்ணெய்: இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவு கொழுப்புகள் உள்ளது. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட் (fatty acid), இரூசிக் ஆசிட்(erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட் (linoleic acid) போன்றவை இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் ஆன்டி ஆக்ஸிடன்ட், தேவையான வைட்டமின் மற்றும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றும், அதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
முட்டைக்கோஸ்: அதனை சமைத்தும் உண்ணலாம் அல்லது பச்சையாகவே சாப்பிடலாம். அது உடலில் சேரும் கொழுப்புகளை வேறு விதமாக மாற்றி மற்ற உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். இதனால் உடலானது பருமனடையாமல் இருக்கும்.
தேன்: இது உடலைக் குறைக்க ஒரு சிறந்த வீட்டு மருந்து. இதனை உண்டால் உடலில் சேரும் கொழுப்புகளை சாதாரணமாக உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். ஆகவே தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சூடான தண்ணீரில் கலந்து, விடியற்காலையில் குடிக்க வேண்டும்.
மோர்: பால் பொருளில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் பாலில் 8.9 கிராம் கொழுப்பும், 157 கலோரியும் உள்ளது. ஆனால் அத்தகைய பால் பொருளில் ஆன மோரில் 2.2 கிராம் கொழுப்பும், 99 கலோரியும் மட்டுமே உள்ளது.
ஆகவே அதனை உண்பதால் உடலுக்கு தேவையான அளவு ஊட்டசத்துக்கள் கிடைப்பதோடு, கொழுப்பு மற்றும் கலோரியானது அதிகமாக சேராமல் எடையும் சரியான அளவு இருக்கும். ஆகவே மேற்கூறிய இத்தகைய உணவுகளை உண்டாலே, உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, உடலிலும் எடை கூடாமல் அழகாக இருக்கலாம்.