சமையலில் சுவையை கூட்டுவதெ கறிவேப்பிலைதான். கடைகளில் காய் கறி வாங்கும் போதுசிறிது கறிவேப்பிலையை கொசுறாக கேட்டு வாங்காத பெண்களே கிடையாது. கறிவேப்பிலையின் அருமை, பெருமையும், சத்தும் தெரியாமல் சாப்பாட்டில் கிடந்தால் வெளியே தூக்கி எறிந்துவிடுகிறார்கள்.
- உணவுச் செரிமானத்திற்கு ஓர் உன்னதமான பொருளாக விளங்குகிறது கறிவேப்பிலை. வைட்டமின் ஏ' சுண்ணாம்புச் சத்து, 'போலிக் ஆசிட்' போன்றவை நிரம்பி உள்ளது. இருப்புச்சத்தை மிகைப்படுத்தி, உடலுக்கு உறுதியைக் கொடுக்கிறது. முதுமை பருவத்தில் ஏற்ப்படும் எலும்பு சம்பந்தமான நோய்கள் வராமலும் தடுக்கும்.
- கெட்ட கொழுப்பைக் கரைத்து கட்டழகை கொடுக்கிறது.ஒவ்வாமையால் தோலில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கிறது. இதிலுள்ள 'பி-கரோட்டின்' உடல் இயக்கத்தை சீராக்குகிறது.
- தலைமுடி கருப்பாகவும், அடர்த்தியாக வளரவும், கண் பார்வை கூர்மைக்கும் சிறந்த மூலிகையாக கறிவேப்பிலை பயன்படுகிறது. இதன் இலைகளை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைத்து தலையில் தேய்த்து வந்தால் நல்ல பலனைத் தரும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த இலையை பச்சையாக மென்று தின்றாலோ, அல்லது பொடி செய்து நீரில் கலந்து பருகினாலோ ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். இத்தனை மருத்துவக்குணங்கள் நிறைந்த கருவேப்பிலையின் பூர்வீகம் தென்னிந்தியா என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
No comments:
Post a Comment