நேரத்தை வீணாக்க வேண்டாம்; காலம் பொன் போன்றது' என்ற பழமொழிகள் எல்லாம்,
நாம் அடிக்கடி கேட்டவை; . 'நேரத்தை வீணாக்காமல், ஏதாவது செய்தால்,
நல்லது' என்று அந்த பழமொழிகளுக்கு இப்போது அர்த்தம் சொல்லப்படுகிறது. அதன்
அடிப்படையில், எப்போது வேண்டுமானாலும், எந்த வேலையையும் செய்யலாம் என்ற ஒரு
கருத்து நிலவுகிறது. அது தவறு.
உண்மை என்ன? : செய்ய வேண்டியதை, செய்ய வேண்டிய நேரத்தில், செய்ய வேண்டும். மாற்றியோ, நேரம் தவறியோ, காலம் தாழ்த்தியோ செய்வதால், எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. படிப்பதில், பொருள் ஈட்டுவதில், திருமணம் செய்துகொள்வதில், அர்த்தம் மற்றும் நோக்கம் இருக்கின்றன. அவற்றை உரிய காலத்தில் செய்யும் போதுதான், பலனை முழுமையாக அனுபவிக்க முடியும். தண்டனை கூட உரிய நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும். உரிய நேரத்தை தவறவிட்டோர், மகிழ்ச்சியையும் நல்ல அனுபவத்தையும் பெறும் வாய்ப்பு மிகமிக குறைவு தான்.
இன்றைய நிலையில், நேரத்தை வீணாக்காமல் ஏதாவது செய்தால், நேரத்தை பயனுள்ளதாக மாற்றிவிட்டதாக கருதுகின்றனர். இத்தகைய கருத்திற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. நேரத்தை வீணாக்க வேண்டும் என்பதற்கு அர்த்தமே, காலம் தவறி செயல்பட வேண்டாம், என்பதுதான். எனவே, காலத்தை புரிந்து செயல்படுங்கள். பலபேர், மிகுதியான காலத்தை வைத்துக்கொண்டு வீணாகிப் போகின்றனர். காலத்தை பொன்னாக மாற்றுவது நம் கையில் தான் இருக்கிறது.