Pages

Saturday, April 12, 2014

ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள நன்மைகள்

ஸ்ட்ராபெரி
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது எனக் கூறுவது உண்டு. ஏனெனில் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.ஆனால் இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்ட்ராபெரி பழத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன. இது சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது.

இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும்.

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

இதில் ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை உள்ளது. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.

இதை சாப்பிட்டால் கேன்சர் வருவதைத் தடுக்கலாம். மேலும் இது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. ஸ்ட்ராபெர்ரி பழச்சாற்றை குடித்தால் பற்களில் கறை ஏற்படுவதை தவிர்க்கலாம். இதில் உள்ள அமிலங்கள் பல் கறையையும் நீக்குகின்றன.

தூக்கத்தை கெடுக்கும் பணிகள்

தூக்கம்
பணி நேரத்தில், மேஜை மீது தூங்குகிறீர்களா? அல்லது கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே தூங்குகிறீர்களா? இப்படி நீங்கள் மட்டும் தான் தூங்குவதாக நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை, பலர் பேர் இப்படித் தான் இருக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு இரவில், 68 மணிநேரம் வரை தூக்கம் மிகவும் அவசியம்.

ஆனால் நம்மில் பலருக்கு இரவில் நல்ல தூக்கம் என்பது 45 மணிநேரம் மட்டும் தான் இருக்கிறது. தூங்குவதற்குக் கூட நேரமில்லாத அளவுக்கு, அப்படிப்பட்ட பிஸியான வேலையில் அவர்கள் இருப்பதாகக் கருதிக் கொள்ளலாம். சிலர் காலை 10 மணிக்கு அலுவலகம் போய் பணிபுரிந்து, மாலை 6 மணிக்கு சரியாக புறப்பட்டு வீட்டுக்கு வருகின்றனர்.

இவர்களுக்கு ஷிப்ட் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் சிலரது பணியோ காலை, மாலை, இரவு என்று மாறி மாறி இருக்கும். இந்த நிலையில் வீட்டு வேலைகளைக் கூட முறையாகச் செய்ய முடியாது. ஏன் சொந்தப் பணிகளைக் கூட கவனிக்க முடியாது.

ஷிப்ட்களில் இல்லையென்றாலும் கூட, பணிச் சுமையால் இரவு, பகல் என்று பார்க்காமல் பணிபுரியும் மக்களும் உள்ளனர். இரவு முழுதும் கண்விழித்து பணிபுரியும் நிர்ப்பந்தத்தினால், அவர்கள் பகலில் பணிபுரிய முடியாமல் தம்மை அறியாமல் தூக்கத்தில் ஆழ்ந்துவிட நேரும்.

இப்போது தூக்கத்தைக் கெடுக்கும் மற்றும் தூங்குவதற்குக் கூட நேரம் தராத சில மோசமான வேலைகளைப் பற்றி தெரிந்துகொள்வோமா!!! விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அலுவலர் பயணிகளின் உயிர் ஆபத்திலிருக்கும் இந்நிலையில் கூட சில அலுவலர்களால் இரவில், தூங்காமல் விழிப்புடன் இருக்க முடிவதில்லை. ஏனென்றால், ஷிப்ட்டுகளில் பணிபுரிவதால் உடலில் உள்ள உயிரியல் கடிகாரத்தின் சுழற்சி பாதிக்கப்படும். இதனால் வேலையில் கவனமாக செயல்பட முடியாது.

நெட்வொர்க் நிர்வாகி:

இணையவழிச் சேவைகள் 24 மணி நேரமும் பயனாளர்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். எனவே மக்கள் இணையத்தில் தொடர்புக் கொள்வது, புத்தகங்களை ஆன்லைனில் வாங்குவது, பாடல்களை டவுன்லோடுகள் செய்வது என அனைத்துவித சேவைகளும் 24 மணிநேரமும் தடையின்றிக் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இது தொடர்பான சர்வர்களில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரங்களில் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.

தொழிற்சாலை பணியாளர்:

அதிகமான உற்பத்தித்திறனுக்கும், உற்பத்தி தடைபடாமல் இருக்கவும், ஷிப்ட் முறையில் பணிபுரிவதையே தொழிற்சாலைகள் நம்பியுள்ளன. ஷிப்ட்முறையில் பணிபுரியாத பணியாளர்களை விட, ஷிப்ட் முறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆறு மணிநேரத்தை விடக் குறைவான நேரமே தூங்க முடிகிறது.

தூக்கமின்றி, அரைத் தூக்கம் அல்லது அரை மயக்க நிலையில் பணிபுரியும் பணியாளர்களால், பணியிடங்களில் விபத்துகள் நிகழவும், காயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். மேலும் தூக்கமின்மையால், அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் மனத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

முதுநிலை மேலாளர்:

முதுநிலை மேலாளர்கள் தமக்கென்று ஒதுக்கப்பட்ட குழுவினரை மேற்பார்வை செய்ய வேண்டிய சூழலில் இருப்பார்கள். அதற்கென கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியதிருக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதல் நேரம் பணிபுரிகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு குறைவாகத் தூங்க வேண்டியிருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் மற்றொரு ஆய்வு என்ன தெரிவிக்கிறது என்றால், தூக்கமின்மைக்கும் பணியில் திருப்தியின்மைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்றும் சொல்கிறது.

செய்தி நிருபர்:

24 மணி நேர செய்திச் சேனல்கள் தொடங்கப்பட்ட பின்னர், ஷிப்ட்டுகளில் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. நிருபர்களும், தயாரிப்பாளர்களும், ஒளிப்பதிவாளர்களும், இரவு முழுவதும் செய்திகளை நேரடியாக ஒளிபரப்ப நடவடிக்கை மேற்கொள்கின்றனர். நிறைய சேனல்கள் 24 மணிநேரச் சேவையை அதிகரித்துள்ளதால், ஷிப்ட்டுகளில் பணிபுரிபவர்களின் தேவையும் எண்ணிக்கையும் பெருகியுள்ளது.

மருத்துவர்களும் செவிலியர்களும்:

பெருகி வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையினைப் பொறுத்து, மருத்துவர்களும் செவிலியர்களும் ஒரு நாளுக்கு 12 மணி நேரம் என்னும் சுழற்சிமுறை ஷிப்ட்டில் பணிபுரிகின்றனர். எனவே இத்தகையவர்களுக்கும் தூக்கமானது குறைவாகவே இருக்கும்.

நிதியியல் ஆலோசகர்:.

ஷிப்ட்டுகளில் பணிபுரிபவர்கள் மட்டும் தான் தூக்கத்தைத் தொலைக்கிறார்கள் என்று பொருளல்ல. ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகள் போன்ற வெளிநாட்டு சந்தைகளில் வல்லுநராக உள்ள சில நிதியியல் ஆலோசகர்களும் தூக்கத்தைத் தொலைக்கின்றனர்.

சந்தையின் விலை ஏற்ற இறக்கங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளதால், நேரங்கெட்ட நேரங்களில் சந்தையைக் கவனிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் சந்தை நேரம் மாறுபடுவதால், பணிபுரிய வேண்டிய நேரமும் மாறுபடுகிறது.

காவல் துறை அலுவலர்கள்:

மக்களைக் காக்கவும், மக்களுக்குச் சேவை புரியவும் காவல்துறையும் தமது பணிநேரத்தினை ஷிப்ட் முறையில் மாற்றி அமைத்துள்ளது. இதன்மூலம் மக்களுக்கு 24 மணிநேரமும் காவல் துறையின் சேவை கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

ஆனால் பாதிப்பு காவல் அலுவலர்களுக்கு தான். ஏனெனில், இதன் மூலம் அலுவலர்கள் விடுப்பு மற்றும் விடுமுறைகளை அனுபவிப்பது கடினமாகிறது. அவர்களால் நிரந்தரமான ஒரு பணித்திட்டத்தினைக் கடைப்பிடிக்க முடியாமல் போகிறது.

விமானிகள்:

வர்த்தக் விமானங்களை இயக்கும் விமானிகள், இரவுத் தூக்கத்தினை அவ்வப்போது இழக்க வேண்டியுள்ளது. அவர்கள் வெவ்வேறு மண்டலங்களுக்கிடையே பறந்து பணிபுரிய வேண்டியுள்ளதால், சீரற்ற ஷிப்ட்டுக்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

விமானிகள் தளர்ச்சி அடைந்துவிடுவதைத் தடுக்கும் பொருட்டு சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையங்களின் இயக்கம், பறக்கும் நேரம் மற்றும் ஓய்வு நேரங்களை வகுத்துள்ளது. ஒவ்வொரு 24 மணிநேர வேலைகளுக்கு இடையே விமானிகளுக்கு முழுமையான, இடையூறில்லாத 8 மணிநேர ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று விதி உள்ளது.

பெற்றோர்கள்:

ஆண்டாண்டு காலமாகவே, தூக்கத்தைப் பாதிக்கும் புதிய பணி இது. பிறந்த குழந்தை இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை விழித்துக் கொள்ளும் பொழுது, பெற்றோரால், தொடர்ந்து தூங்குவது இயலாதது ஆகிறது.

மேலும் ஆய்வு ஒன்று என்ன தெரிவிக்கிறது என்றால், புதிய தாய்மார்கள் இரவில் 7 மணிநேரம் தான் தூங்குகிறார்களாம். அதுவும் விட்டுவிட்டு தான் தூங்க முடிகிறதாம். அத்தூக்கமும் அவர்களுக்கு புத்துணர்வைக் கொடுப்பதில்லை. அதிர்ஷ்டவசமாக குழந்தை 16 மாதங்கள் கடந்தபின், இந்த நிலை மேம்படுகிறதாம்.

சரக்கு வாகன ஓட்டுநர்:

சரக்கு வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் கூடுதலாகப் பணிபுரிகிறார்கள். ஏனெனில், பகல் நேர போக்குவரத்து நெரிசலிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வண்டி ஓட்டலாம். மற்றொன்று, குறித்த நேரத்தில் சரக்குகளை டெலிவரி செய்ய வேண்டியுள்ளது.

இந்த வேலையில் தான் ஓட்டுநர்கள் இரவில் மிகக் குறைந்த அளவு நேரம் தூங்குகிறார்கள் என்று ஆதாரங்களுடன் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில், சம்பவிக்கும் மரணங்களில் முதலிடத்தைப் பிடிப்பது, சாலை விபத்துக்களில் ஏற்படும் மரணம் தான். இதற்குக் காரணம் சரியான தூக்கமின்றி, தூக்கக் கலக்கத்தில் வண்டி ஓட்டுதல் தான்.

மதுபான பார்களில் உதவியாளர்கள்:

பல மதுபான பார்கள் அதிகாலை 2 மணிவரை திறந்திருக்கின்றன. சில நகரங்களில், பார்கள் இரவு முழுதும் திறந்திருக்கின்றன. இந்த பார்களில் பணிபுரியும் உதவியாளர்கள், இரவு முழுவதும் விழித்திருந்து பணிபுரிகின்றனர்.

சிலருக்கு இரவுகளில் தூக்கமே வராது. ராக்கோழிகள் எனப்படும் இவர்கள், இது மாதிரியான பணிகளை விரும்பித் தேர்ந்தெடுக்கின்றனர். இத்தகையவர்கள் பகல் முழுவதும் தூங்கி, இரவில் தெளிவாக விழித்திருந்து, தமது பணியைச் செவ்வனே செய்வார்கள்.

இரவில் பணிபுரிய சில குறிப்புகள்:.

ஷிப்ட் முறையில் பணிபுரிய வேண்டுமென்றால், வார இறுதி விடுமுறை நாட்களிலும், இதே ஷிப்ட் முறையில் நடந்து கொள்ள வேண்டும். அதாவது பகலில் தூங்கி, இரவில் விழித்திருக்க வேண்டும். இது மாதிரிக் கடைப்பிடிக்காமல், விடுமுறை நாட்களில் பகலில் விழித்திருந்தால், இரவுப் பணிநேரத்தில் தூக்கக் கலக்கமாகவே உணரக்கூடும்.

ஆனால் தூங்காமல் இருக்க நிறைய உத்திகள் உள்ளன. அது தனியாகப் பணிபுரியாமல் பிறருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். ஷிப்ட் தொடங்கும் போது, காஃபின் கலந்த பானங்களைப் பருகலாம். மேலும் சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். சிறிது நேரம் தூங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டால், தூங்கிக் கொள்ளலாம்.

பகலில் தூங்க சிலகுறிப்புகள்:

பெரும்பாலானவர்களுக்கு பகலில் தூங்குவது சற்று சிரமமான காரியம் தான். ஆனாலும் பகலில் தூங்க சில உத்திகள் உள்ளன. பணியிலிருந்து வீட்டுக்கு திரும்பும் போது, கருப்புக் கண்ணாடிகளை அணிந்து கொண்டு, நேரடியாக சூரிய வெளிச்சம் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

படுக்கை அறையை முடிந்தவரை இருட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது கண் மூடிகளைப் பயன்படுத்தலாம். பகல் நேர சத்தங்கள் காதுகளில் விழாமல் இருக்க, இயர் பிளக்குகளைப் பயன்படுத்தலாம்.

தொப்பையை குறைக்க எளிய வழிகள்

தொப்பை
வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.

மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில தொப்பையையும் மேற்கொள்ள வேண்டும்.

அத்தகைய டயட்டை கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும். சரி, அதைப் பார்ப்போமா!!!

1. தண்ணீர்: தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

2. உப்பை:தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

5. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

6. சிட்ரஸ்: பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

9. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.

10. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

11. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.

12. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.

13. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

14. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது.

Friday, April 11, 2014

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா என்பதை அறிய வழிகள்

அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டு சொல்வார்கள்.

இது நிரூபிக்கப்படாவிட்டாலும், பலருக்கு சரியாக நடந்துள்ளதால், இதனை அனைவருமே கண்மூடித்தனமாக நம்பிவருகின்றோம். இங்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆண் தான் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.

• வயிற்றில் வளரும் குழந்தை ஆண் என்பதை கர்ப்பிணிகளின் வயிற்றின் நிலையைக் கொண்டே அறியலாம். எப்படியெனில், வயிற்றில் ஆண் குழந்தை என்றால், மேல் வயிறு பெரிதாகவும், கீழ் வயிறு சற்று சிறியதாகவும் இருக்குமாம்.

• நிறைய கர்ப்பிணிகள் சிறுநீர் கழிக்கும் போது, அதன் நிறத்தைப் பார்ப்பார்கள். ஏனெனில் சிறுநீரின் நிறமானது அடர் நிறமாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம். இதைக் கொண்டும் அக்காலத்தில் உள்ள மக்கள் வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று அறிந்து கொண்டு வந்தார்கள்.

• கர்ப்பத்தின் போது, மார்பகத்தின் அளவானது பெரிதாக ஆரம்பிக்கும். அதிலும் உண்மையாக இடது மார்பகம் வலது மார்பகத்தை விட பெரிதாக ஆரம்பிக்கும். ஆனால் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால், இடது மார்பகத்தை விட வலது மார்பகத்தின் அளவு பெரிதாக இருக்குமாம்.
ஆண் குழந்தை


• கர்ப்ப காலத்தில் எப்போதும் பாதம் குளிர்ச்சியாக இருந்தால், அதுவும் ஆண் குழந்தை பிறக்கும் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

• ஒவ்வொரு முறை மருத்துவரை சந்திக்கும் போதும், குழந்தையின் இதயத்தின் துடிப்பை கண்காணித்து வாருங்கள். ஏனெனில் குழந்தையின் இதயத்தின் துடிப்பானது 140-க்கு கீழே இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.

• வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளில் ஒன்று தான் கூந்தலின் வளர்ச்சி. கர்ப்ப காலத்தில் கூந்தலின் வளர்ச்சியானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

• கர்ப்பமாக இருக்கும் போது உணவுப் பொருட்களின் மீது ஆசை எழுவது சாதாரணம் தான். ஆனால் புளிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகமாக இருந்தால், அது வயிற்றில் ஆண் குழந்தை உள்ளது என்று அர்த்தம்.

• கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அதிகப்படியான சோர்வு இருக்கும். இருப்பினும்., அப்படி சோர்வுடன் இருக்கும் போது, இடது பக்கத்தில் தூங்கும் பழக்கம் இருந்தால், அதுவும் ஆண் குழந்தைக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். எவ்வளவு தான் க்ரீம்களை கைகளுக்கு தடவினாலும், கைகள் வறட்சியுடனும், வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்தாலும், அதுவும் ஆண் குழந்தை தான் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

பிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்

குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிக மிக முக்கியம். தாய் பாலை மட்டுமே உணவாக அருந்தும் குழந்தைக்கு அந்த பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும். பல நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக தாய்ப்பால் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மருத்துவத் தன்மைக் கொண்ட தாய்ப்பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும்.

இந்த பாலின் தன்மை வெளி உணவுகளால் கெடாமல் பார்த்து கொள்வது தாயின் கடமையாகும். அலர்ஜி ஏற்படுத்தும் சில உணவுகளை தாய் உட்கொள்வதால், அது குழந்தையின் பாலில் கலந்து குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது மறுக்க முடியாத ஒன்று. ஆகவே அந்த உணவுகள் எது என்று ஆராய்ந்து அதை தவிர்க்க வேண்டும்.

இந்த கடமையை செய்தாலே ஆரோக்கியமான உடலையும், வலிமையையும் குழந்தைக்கு கொடுக்க முடியும். பெற்றோர்களுக்கு இருக்கும் அலர்ஜி குழந்தைகளுக்கும் வர வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குழந்தைக்கு உணவில் அலர்ஜி அதாவது ஒவ்வாமை இருக்குமெனில் அலர்ஜி தரும் உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

இதில் பால் உணவு, சோயா, முட்டையின் வெள்ளை கரு, வேர்க்கடலை, கோதுமை போன்றவை அடங்கும். உணவில் பூண்டு சேர்த்து கொள்வதால் குழந்தையின் பாலில் அதன் வாசம் வரக்கூடும். அதுவும் உணவு எடுத்த அடுத்த இரண்டு மணிநேரத்தில் இந்த வாசனையை பாலில் காண முடியும்.

சில குழந்தைகளுக்கு இந்த வாசனை ஒற்றுக் கொள்ளாமல் போகும் என்பதால் தவிர்த்து விடுங்கள். எச்சில் வழிதல், டயப்பரால் வரும் எரிச்சல் போன்றவை சிட்ரஸ் பழங்களை எடுத்து கொள்வதால் வருகின்றது. சிட்ரஸ் பழங்களில் உள்ள முழுமையடையாத G1 இவ்வகை அலர்ஜியை ஏற்படுத்தும்.

ஆகவே ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை தவிர்த்து, பப்பாளி மற்றும் மாங்காய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பாலாடைக் கட்டி, தயிர், ஐஸ் க்ரீம் போன்றவையை உட்கொண்டால் சில நேரங்களில் அவை பாலுடன் கலந்து குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
பிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்


குறிப்பாக வாந்தி, தூக்கமின்மை, வரட்டு இருமல் போன்றவை வரலாம். காபி அருந்துவதால் குழந்தைக்கு சில நேரங்களில் சோர்வும், தூக்கமின்மையும் வர நேரிடும். ஆகவே காபி அருந்தி குழந்தைக்கு கஷ்டம் ஏற்படுத்த வேண்டாம். முக்கியமாக ஆரம்பக் காலத்தில் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

மது அருந்துவதால் குழந்தைக்கு அதிக தூக்கம், மயக்கம், தளர்வு, அதிக உடல் எடை போன்றவை நேரலாம். மேலும் மது தாய் பால் சுரப்பதிலும் பாதிப்பு ஏற்படுத்தலாம். ஆகவே குழந்தையை நல் முறையில் வளர்க்க மது அருந்துவது வேண்டாம்.

உணவில் அதிக அளவில் மசாலா மற்றும் காரத்தைக் குறைத்து கொள்ள வேண்டும். அதிக மசாலா மற்றும் காரம் குழந்தைக்கு அலர்ஜி, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே காரம் அதிகம் உள்ள மிளகு, இஞ்சி, எலுமிச்சை சாறு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

தாய்மையின் சிக்கல்கள்

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இது ஏன் நிகழ்கிறது என ஆராய்ந்தால் அதற்கும் காரணியாக சமூக ஏற்றத்தாழ்வும், பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வியும், தரப்படாத சமூக சமத்துவமுமே முன்னால் நிற்கிறது.

வளர்ந்த உலக நாடுகளை விட வளரும் நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலுமே இத்தகைய அவலங்கள் அதிக அளவு நிகழ்கின்றன என்பது ஒன்றே போதும் இந்தக் கருத்தை வலுவூட்ட. ஆப்பிரிக்கா போன்ற பின் தங்கிய நாடுகளில் இன்னும் பாலியல் கல்வியோ, கருத்தடையின் தேவைகள் குறித்த விழிப்புணர்வோ பரவவில்லை.

வறுமையின் உச்சத்தில் இருந்தாலும் அங்கே தான் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆப்பிரிக்கப் பகுதி உட்பட 35 பின் தங்கிய நாடுகளில் குடும்பம் ஒன்றுக்கு ஐந்து குழந்தைகள் என்னும் விகிதம் இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிவிக்கிறது.
தாய்மை


உலகெங்கும் சுமார் ஐந்து கோடி பெண்கள் சரியான கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காததால் கருத்தரிக்கின்றனர் எனவும், கூடவே இரண்டரை கோடி  பெண்கள் கருத்தடை சாதனங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர் எனவும் திகைப்பூட்டும் தகவல்களை அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

கருக்கலைப்பு என்பது ஒரு குழந்தையைக் கொலை செய்வது என்பதுடன் தாயின் உடல் நலத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. பிற்காலத்தில் தாய்மையடையும் வாய்ப்பைக் கூட இது கணிசமாகக் குறைத்து விடுகிறது.

வலுவான அடித்தளமும், சமூகக் கல்வி, விழிப்புணர்வு, முழுமையான அரசு ஈடுபாடு இவை இல்லாவிட்டால் இத்தகைய அவலங்கள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பது மட்டும் வலியூட்டும் உண்மையாகும்.

அதிகரிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம்

உலகெங்கும் புற்றுநோய் அபாயம் அதிகரித்து வருவதாகவும், சரியான பழக்கவழக்கங்கள் மூலம் மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் 1.40 கோடி மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், ஆனால் இந்த எண்ணிக்கை 2035-ம் ஆண்டுவாக்கில் 2.40 கோடியாக உயரும் என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது. மனிதகுலத்தைப் பாதிக்கும் புற்றுநோயிலிருந்து கிட்டத்தட்ட பாதி அளவை வருமுன் தடுக்கமுடியும் என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், உடல் பருமன், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் ஆகியவற்றை சமாளிக்க புதிய முயற்சிகள் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்


புகை பிடித்தல், கிருமித்தொற்று, மது அருந்துதல், உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சி செய்யாதிருத்தல், சூரிய ஒளி மற்றும் மருத்துவ ஸ்கேன்களால் ஏற்படும் கதிரியக்கப் பாதிப்பு, காற்று மாசு, மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள், தாய்மைப் பேறு தாமதமாவது, தாய்ப்பால் தராமலிருப்பது ஆகியவை தடுக்கப்படக் கூடிய புற்றுநோய்க் காரணிகள் என்று 2014-ம் ஆண்டுக்கான புற்றுநோய் அறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக பெண்கள் மார்பகப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறும் அந்நிறுவனம், ஆனால் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில்,

பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகம் காணப்படுவதாகத் தெரிவிக்கிறது. அரசாங்கங்களும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் புற்று நோய்க்கு பெருமளவில் தடை போட்டு விட முடியும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.