Pages

Showing posts with label தூக்கம். Show all posts
Showing posts with label தூக்கம். Show all posts

Saturday, April 12, 2014

தூக்கத்தை கெடுக்கும் பணிகள்

தூக்கம்
பணி நேரத்தில், மேஜை மீது தூங்குகிறீர்களா? அல்லது கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே தூங்குகிறீர்களா? இப்படி நீங்கள் மட்டும் தான் தூங்குவதாக நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை, பலர் பேர் இப்படித் தான் இருக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு இரவில், 68 மணிநேரம் வரை தூக்கம் மிகவும் அவசியம்.

ஆனால் நம்மில் பலருக்கு இரவில் நல்ல தூக்கம் என்பது 45 மணிநேரம் மட்டும் தான் இருக்கிறது. தூங்குவதற்குக் கூட நேரமில்லாத அளவுக்கு, அப்படிப்பட்ட பிஸியான வேலையில் அவர்கள் இருப்பதாகக் கருதிக் கொள்ளலாம். சிலர் காலை 10 மணிக்கு அலுவலகம் போய் பணிபுரிந்து, மாலை 6 மணிக்கு சரியாக புறப்பட்டு வீட்டுக்கு வருகின்றனர்.

இவர்களுக்கு ஷிப்ட் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் சிலரது பணியோ காலை, மாலை, இரவு என்று மாறி மாறி இருக்கும். இந்த நிலையில் வீட்டு வேலைகளைக் கூட முறையாகச் செய்ய முடியாது. ஏன் சொந்தப் பணிகளைக் கூட கவனிக்க முடியாது.

ஷிப்ட்களில் இல்லையென்றாலும் கூட, பணிச் சுமையால் இரவு, பகல் என்று பார்க்காமல் பணிபுரியும் மக்களும் உள்ளனர். இரவு முழுதும் கண்விழித்து பணிபுரியும் நிர்ப்பந்தத்தினால், அவர்கள் பகலில் பணிபுரிய முடியாமல் தம்மை அறியாமல் தூக்கத்தில் ஆழ்ந்துவிட நேரும்.

இப்போது தூக்கத்தைக் கெடுக்கும் மற்றும் தூங்குவதற்குக் கூட நேரம் தராத சில மோசமான வேலைகளைப் பற்றி தெரிந்துகொள்வோமா!!! விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அலுவலர் பயணிகளின் உயிர் ஆபத்திலிருக்கும் இந்நிலையில் கூட சில அலுவலர்களால் இரவில், தூங்காமல் விழிப்புடன் இருக்க முடிவதில்லை. ஏனென்றால், ஷிப்ட்டுகளில் பணிபுரிவதால் உடலில் உள்ள உயிரியல் கடிகாரத்தின் சுழற்சி பாதிக்கப்படும். இதனால் வேலையில் கவனமாக செயல்பட முடியாது.

நெட்வொர்க் நிர்வாகி:

இணையவழிச் சேவைகள் 24 மணி நேரமும் பயனாளர்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். எனவே மக்கள் இணையத்தில் தொடர்புக் கொள்வது, புத்தகங்களை ஆன்லைனில் வாங்குவது, பாடல்களை டவுன்லோடுகள் செய்வது என அனைத்துவித சேவைகளும் 24 மணிநேரமும் தடையின்றிக் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இது தொடர்பான சர்வர்களில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரங்களில் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.

தொழிற்சாலை பணியாளர்:

அதிகமான உற்பத்தித்திறனுக்கும், உற்பத்தி தடைபடாமல் இருக்கவும், ஷிப்ட் முறையில் பணிபுரிவதையே தொழிற்சாலைகள் நம்பியுள்ளன. ஷிப்ட்முறையில் பணிபுரியாத பணியாளர்களை விட, ஷிப்ட் முறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆறு மணிநேரத்தை விடக் குறைவான நேரமே தூங்க முடிகிறது.

தூக்கமின்றி, அரைத் தூக்கம் அல்லது அரை மயக்க நிலையில் பணிபுரியும் பணியாளர்களால், பணியிடங்களில் விபத்துகள் நிகழவும், காயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். மேலும் தூக்கமின்மையால், அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் மனத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

முதுநிலை மேலாளர்:

முதுநிலை மேலாளர்கள் தமக்கென்று ஒதுக்கப்பட்ட குழுவினரை மேற்பார்வை செய்ய வேண்டிய சூழலில் இருப்பார்கள். அதற்கென கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியதிருக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதல் நேரம் பணிபுரிகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு குறைவாகத் தூங்க வேண்டியிருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் மற்றொரு ஆய்வு என்ன தெரிவிக்கிறது என்றால், தூக்கமின்மைக்கும் பணியில் திருப்தியின்மைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்றும் சொல்கிறது.

செய்தி நிருபர்:

24 மணி நேர செய்திச் சேனல்கள் தொடங்கப்பட்ட பின்னர், ஷிப்ட்டுகளில் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. நிருபர்களும், தயாரிப்பாளர்களும், ஒளிப்பதிவாளர்களும், இரவு முழுவதும் செய்திகளை நேரடியாக ஒளிபரப்ப நடவடிக்கை மேற்கொள்கின்றனர். நிறைய சேனல்கள் 24 மணிநேரச் சேவையை அதிகரித்துள்ளதால், ஷிப்ட்டுகளில் பணிபுரிபவர்களின் தேவையும் எண்ணிக்கையும் பெருகியுள்ளது.

மருத்துவர்களும் செவிலியர்களும்:

பெருகி வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையினைப் பொறுத்து, மருத்துவர்களும் செவிலியர்களும் ஒரு நாளுக்கு 12 மணி நேரம் என்னும் சுழற்சிமுறை ஷிப்ட்டில் பணிபுரிகின்றனர். எனவே இத்தகையவர்களுக்கும் தூக்கமானது குறைவாகவே இருக்கும்.

நிதியியல் ஆலோசகர்:.

ஷிப்ட்டுகளில் பணிபுரிபவர்கள் மட்டும் தான் தூக்கத்தைத் தொலைக்கிறார்கள் என்று பொருளல்ல. ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகள் போன்ற வெளிநாட்டு சந்தைகளில் வல்லுநராக உள்ள சில நிதியியல் ஆலோசகர்களும் தூக்கத்தைத் தொலைக்கின்றனர்.

சந்தையின் விலை ஏற்ற இறக்கங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளதால், நேரங்கெட்ட நேரங்களில் சந்தையைக் கவனிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் சந்தை நேரம் மாறுபடுவதால், பணிபுரிய வேண்டிய நேரமும் மாறுபடுகிறது.

காவல் துறை அலுவலர்கள்:

மக்களைக் காக்கவும், மக்களுக்குச் சேவை புரியவும் காவல்துறையும் தமது பணிநேரத்தினை ஷிப்ட் முறையில் மாற்றி அமைத்துள்ளது. இதன்மூலம் மக்களுக்கு 24 மணிநேரமும் காவல் துறையின் சேவை கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

ஆனால் பாதிப்பு காவல் அலுவலர்களுக்கு தான். ஏனெனில், இதன் மூலம் அலுவலர்கள் விடுப்பு மற்றும் விடுமுறைகளை அனுபவிப்பது கடினமாகிறது. அவர்களால் நிரந்தரமான ஒரு பணித்திட்டத்தினைக் கடைப்பிடிக்க முடியாமல் போகிறது.

விமானிகள்:

வர்த்தக் விமானங்களை இயக்கும் விமானிகள், இரவுத் தூக்கத்தினை அவ்வப்போது இழக்க வேண்டியுள்ளது. அவர்கள் வெவ்வேறு மண்டலங்களுக்கிடையே பறந்து பணிபுரிய வேண்டியுள்ளதால், சீரற்ற ஷிப்ட்டுக்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

விமானிகள் தளர்ச்சி அடைந்துவிடுவதைத் தடுக்கும் பொருட்டு சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையங்களின் இயக்கம், பறக்கும் நேரம் மற்றும் ஓய்வு நேரங்களை வகுத்துள்ளது. ஒவ்வொரு 24 மணிநேர வேலைகளுக்கு இடையே விமானிகளுக்கு முழுமையான, இடையூறில்லாத 8 மணிநேர ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று விதி உள்ளது.

பெற்றோர்கள்:

ஆண்டாண்டு காலமாகவே, தூக்கத்தைப் பாதிக்கும் புதிய பணி இது. பிறந்த குழந்தை இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை விழித்துக் கொள்ளும் பொழுது, பெற்றோரால், தொடர்ந்து தூங்குவது இயலாதது ஆகிறது.

மேலும் ஆய்வு ஒன்று என்ன தெரிவிக்கிறது என்றால், புதிய தாய்மார்கள் இரவில் 7 மணிநேரம் தான் தூங்குகிறார்களாம். அதுவும் விட்டுவிட்டு தான் தூங்க முடிகிறதாம். அத்தூக்கமும் அவர்களுக்கு புத்துணர்வைக் கொடுப்பதில்லை. அதிர்ஷ்டவசமாக குழந்தை 16 மாதங்கள் கடந்தபின், இந்த நிலை மேம்படுகிறதாம்.

சரக்கு வாகன ஓட்டுநர்:

சரக்கு வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் கூடுதலாகப் பணிபுரிகிறார்கள். ஏனெனில், பகல் நேர போக்குவரத்து நெரிசலிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வண்டி ஓட்டலாம். மற்றொன்று, குறித்த நேரத்தில் சரக்குகளை டெலிவரி செய்ய வேண்டியுள்ளது.

இந்த வேலையில் தான் ஓட்டுநர்கள் இரவில் மிகக் குறைந்த அளவு நேரம் தூங்குகிறார்கள் என்று ஆதாரங்களுடன் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில், சம்பவிக்கும் மரணங்களில் முதலிடத்தைப் பிடிப்பது, சாலை விபத்துக்களில் ஏற்படும் மரணம் தான். இதற்குக் காரணம் சரியான தூக்கமின்றி, தூக்கக் கலக்கத்தில் வண்டி ஓட்டுதல் தான்.

மதுபான பார்களில் உதவியாளர்கள்:

பல மதுபான பார்கள் அதிகாலை 2 மணிவரை திறந்திருக்கின்றன. சில நகரங்களில், பார்கள் இரவு முழுதும் திறந்திருக்கின்றன. இந்த பார்களில் பணிபுரியும் உதவியாளர்கள், இரவு முழுவதும் விழித்திருந்து பணிபுரிகின்றனர்.

சிலருக்கு இரவுகளில் தூக்கமே வராது. ராக்கோழிகள் எனப்படும் இவர்கள், இது மாதிரியான பணிகளை விரும்பித் தேர்ந்தெடுக்கின்றனர். இத்தகையவர்கள் பகல் முழுவதும் தூங்கி, இரவில் தெளிவாக விழித்திருந்து, தமது பணியைச் செவ்வனே செய்வார்கள்.

இரவில் பணிபுரிய சில குறிப்புகள்:.

ஷிப்ட் முறையில் பணிபுரிய வேண்டுமென்றால், வார இறுதி விடுமுறை நாட்களிலும், இதே ஷிப்ட் முறையில் நடந்து கொள்ள வேண்டும். அதாவது பகலில் தூங்கி, இரவில் விழித்திருக்க வேண்டும். இது மாதிரிக் கடைப்பிடிக்காமல், விடுமுறை நாட்களில் பகலில் விழித்திருந்தால், இரவுப் பணிநேரத்தில் தூக்கக் கலக்கமாகவே உணரக்கூடும்.

ஆனால் தூங்காமல் இருக்க நிறைய உத்திகள் உள்ளன. அது தனியாகப் பணிபுரியாமல் பிறருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். ஷிப்ட் தொடங்கும் போது, காஃபின் கலந்த பானங்களைப் பருகலாம். மேலும் சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். சிறிது நேரம் தூங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டால், தூங்கிக் கொள்ளலாம்.

பகலில் தூங்க சிலகுறிப்புகள்:

பெரும்பாலானவர்களுக்கு பகலில் தூங்குவது சற்று சிரமமான காரியம் தான். ஆனாலும் பகலில் தூங்க சில உத்திகள் உள்ளன. பணியிலிருந்து வீட்டுக்கு திரும்பும் போது, கருப்புக் கண்ணாடிகளை அணிந்து கொண்டு, நேரடியாக சூரிய வெளிச்சம் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

படுக்கை அறையை முடிந்தவரை இருட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது கண் மூடிகளைப் பயன்படுத்தலாம். பகல் நேர சத்தங்கள் காதுகளில் விழாமல் இருக்க, இயர் பிளக்குகளைப் பயன்படுத்தலாம்.