Pages

Showing posts with label உடல் எடை. Show all posts
Showing posts with label உடல் எடை. Show all posts

Friday, June 27, 2014

உங்கள் உடல் கட்டுக்கோப்பாக இருக்கிறதா?

உங்கள் உடல் எந்த அளவுக்குக் கட்டுக்கோப்பாக இருக்கிறது என்பதை அறிய ஆவலாக இருக்கிறீர்களா? கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நீங்களாகவே பதிலளித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

அ,ஆ,இ, இந்த மூன்று பதில்களில் நீங்கள் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்து  “அ” என்ற பதிலுக்கு 2 புள்ளிகளும், ஆ-விற்கு 5 மதிப்பெண்களும், சி-க்கு 10 மதிப்பெண்களும் தாருங்கள். என்னவாகிறது என்பதை பிறகு பார்ப்போம்:

1. மாடிக் கட்டிடத்தை படிகளில் ஏறுவீர்களா?

அ) ஒரு சொட்டு வேர்வை கூட வராமல் ஏறுவேன்.
ஆ) ஏறுவேன் ஆனால் மூச்சுத் திணறியபடியே ஏறுவேன்.
இ)ஏறுவேன் ஆனால் இடையிடையே சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொள்வேன்.

2. உடற்பயிற்சி செய்யும் போது அதாவது ஜிம்மில் சென்று செய்யும்போது அல்லது வெயிட் லிப்டிங் செய்து முடிக்கும்போது உடலில் கடும் வலி ஏற்படுகிறதா?

அ) ஒரிரண்டு நாட்களுக்கு வலி இருக்கும்.
ஆ)சில நாட்களுக்கு வலி, உடல் வலி இருந்து கொண்டேயிருக்கும்.
இ)வெளியே சென்று பயிற்சி செய்வது, கடும் பயிற்சி செய்வது என்னுடைய தசைகளை ஒருவாரத்திற்கு செயலிழக்கச்செய்யும்.

3. இரண்டு அல்லது 3 கிமீ தூரம் இடைவெளியின்றி நிறுத்தாமல் ஜாகிங் (மெது ஓட்டம்) செய்வீர்களா?
அ) எந்த வித கடினமும் இல்லாமல்.
ஆ) வேண்டுமானால் முயன்று பார்க்கலாம், ஆனால் உறுதியாக கூறமுடியாது.
இ) நிச்சயமாக முடியவே முடியாது.

4. உங்கள் முழங்காலை மடக்காமல் உங்கள் கால் கட்டை விரலைத் தொட முடியுமா?
அ) சுலபமாக.
ஆ)முயற்சி செய்து பார்க்கிறேன்.
இ) முன்பு தொடமுடிந்தது, இப்போது முடியவில்லை.

5. மருத்துவரை எவ்வளவு முறை பார்க்கிறீர்கள்?
அ) அவ்வப்போது பரிசோதனைக்காக ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பேன்.
ஆ) உடம்பு சரியில்லாத போது மட்டும் பார்ப்பேன்.
இ) சிலவாரங்களுக்கு ஒரு முறையாவது பார்க்க நேரிடும்.

6. 100மீ தூரத்தை 15 வினாடிகளுக்குள் ஓடி முடிப்பீர்களா?
அ) ஆமாம்
ஆ) ஓட முடியலாம்.
இ) ஐயோ..என்னால் முடியாதுப்பா..

7. மராத்தான் போட்டி நடைபெறுகிறது என்றால் நீங்கள் எப்படி அதற்கு தயாராவீர்கள்?
அ) முறையான  பயிற்சிகள் எடுத்துக் கொண்டு தயாராகச் செல்வேன்.
ஆ) சில வாரங்கள் கொடுத்தால் உடல்தகுதி பெற்று வேகத்திற்கு ஈடு கொடுப்பேன்.
இ) என்ன…விளையாடுறீங்களா?

8. ஓடும்போதோ, பயிற்சி செய்யும்போதோ அப்பாடா போதும்டா சாமி என்று உட்காராத அளவுக்கு உங்கள் இருதயம் எவ்வளவு நிமிடம் தாங்கும்?
அ) 20 நிமிடங்களுக்கு மேல் தாங்கும்.
ஆ) 5 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை தாங்கும்.
இ) 5 நிமிடத்திற்கும் குறைவே.

9. தற்போது எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை பயிற்சி செய்கிறீர்கள்?
அ) வாரத்தில் 3 தடவைகளுக்கு மேல்.
ஆ) வாரத்திற்க் ஒரு முறை அல்லது இருமுறை.
இ) நேரமே இருக்கறதில்லை பாஸ்!

இந்த 9 கேள்விகளுக்கும் பதில் கொடுத்து அதன்ற்கான மதிப்பெண்களை நீங்களே கொடுத்துக் கூட்டிப்பார்த்து எவ்வளவு வருகிறது என்று பாருங்கள்.
38 மதிப்பெண்கள் முதல் 55 மதிப்பெண்கள் வரை எடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் உண்மையில் முழு உடல் தகுதியுடன் இருக்கிறீர்கள். நீங்கள் செய்வது, உங்கள் உணவுப்பழக்கம் எல்லாம் சரியே நீங்கள் இதுவரை செய்து வந்ததை அப்படியே தொடரலாம்.

56 மதிப்பெண்கள் முதல் 100 மதிப்பெண்கள் வரை எடுக்கிறீர்கள் என்றால், நீங்கள் தினமும் சவரம் செய்வது போல் பயிற்சி செய்யவேண்டிய தேவையில்லை என்றாலும், வாரத்திற்கு 3 முறை பயிற்சி செய்வது தேவை ஆனாலும் இது கட்டாயம் இல்லை. இருந்தாலும் இதில் நீங்கள் அலட்சியம் காட்டினால் உடல் எடை, சதை போடுதல் வெகு விரைவில் நிகழும் வாய்ப்புள்ளது.

101 முதல் 140 மதிப்பெண்கள் எடுத்துள்ளீர்களா, உங்களுக்காகத்தான் உடல் எடைக்குறைப்பு ஜிம்களும் இருக்கிறது. ‘குண்டாக இருக்கிறீர்களா எங்களிடம் வாருங்கள் அப்படியே 20 கிலோ குறைக்கிறோம் ரக விளம்பரங்கள் உங்களைப்போன்றவர்களுக்காகவே உருவாகியுள்ளது என்று வைத்துக் கொள்ளலாம். அதாவது உங்கள் ஆரோக்கியம் குறித்து நீங்கள் அலட்சியம் காட்டி வருகிறீர்கள் என்று பொருள். ஆனாலும் கவலைப்படத் தேவையில்லை. பயிற்சியை ஒரு தினசரி நடைமுறையாக்கினால் நீங்கள் ஆரோக்கிய வாழ்வின் பாதைக்கு மீண்டு விடலாம்.

Saturday, April 12, 2014

தொப்பையை குறைக்க எளிய வழிகள்

தொப்பை
வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.

மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில தொப்பையையும் மேற்கொள்ள வேண்டும்.

அத்தகைய டயட்டை கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும். சரி, அதைப் பார்ப்போமா!!!

1. தண்ணீர்: தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

2. உப்பை:தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

5. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

6. சிட்ரஸ்: பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

9. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.

10. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

11. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.

12. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.

13. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

14. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது.