Pages

Sunday, March 2, 2014

அழகிற்கு அழகு சேர்க்கும் குளிர் கண்ணாடிகள்

கண்களை பாதுகாக்கவும் முகத்திற்கு அழகையும், கவர்ச்சியையும் கூட்டவும், ஆண், பெண் இரு பாலருக்கும் உதவுவது குளிர் கண்ணாடிகள். குளிர் கண்ணாடிகளை வெயில் காலங்களுக்கு மட்டுமின்றி குளிர் காலங்களிலும் வாகனப் பயணிகளின் போதும் கூட உபயோகப்படுகிறது, நம் தமிழக தட்பவெப்ப நிலைக்கு கிட்டத்தட்ட வருடத்தின் முக்கால் பங்க மாதங்களும் வெயிலின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது என்தால் எப்பொழுதும் குளிர் கண்ணாடிகளின் தேவை இருக்கிறது.

குளிர் கண்ணாடிகளின் உபயோகங்கள் என்று பார்க்கையில் அது கண்களுக்கு குளிர் கண்ணாடிகள்குளிர்ச்சி அளிக்கிறது. சூரிய கதிர்களின் யுவி அலைகளின் தாக்கத்திலிருந்து கண்களின் அடியில் உள்ள பூந்தசைகளைச் காக்கிறது. இக்கண்ணாடிகள் முகத்தின் பாதி இடத்தை மறைப்பதால் முகத்தையும் பாதுகாக்கிறது.

குளிர் கண்ணாடிகள் பல வித நிறங்களில் கிடைக்கிறது. சில நிறங்கள்

சரியான கண்ணாடியை நமக்கு ஏற்றதாக தேர்ந்தெடுக்க சில குறிப்புகளை பின்பற்ற வேண்டும். வட்டமான முகம் உள்ளவர்கள் நீண்ட வடிவமோ, சதுரமோ அல்லது செவ்வக வடிவத்திலோ கண்ணாடியை தேர்ந்தேடுக்கலாம். வட்டமோ, நீள்வட்டமோ கூடாது. இவர்கள் பெரிய அளவு கண்ணாடி அணியும் போது கண்ணங்களின் உருண்டை வடிவம் மறைந்து அழகாக தோற்றமளிப்பர்.

நீள் வட்ட வடிவ முகம் கொண்டவர்கள் எந்நத மாதிரி வடிவமுள்ள கண்ணாடியையும் அணியலாம். நெற்றியிலும், தாடையிலும் குறுகி, காதுப்புறம் அகன்ற டைமன்ட் வடிவமுகம் கொண்டவர்கள் நீள் வட்டம், செவ்வகம் என்று இரு வடிவங்களிலும் சிறிய அளவுள்ள கண்ணாடியை அணியலாம். கண்ணங்களுக்கு மேலே கண்ணாடி முடிவடைந்தால் தான் முகம் நீண்டு தெரியும்.

அகன்ற நெற்றியும், கூம்பிய கீழ் தாடையும் கொண்ட இதய வடிவமுகம் கொண்டவர்கள் எவியேட்டர்,ராப் காக்கின்ஸ் போன்ற ஃப்ரேம் நெற்றிப் பொட்டு வரை நீண்டிருக்கக் கூடியதை அணிவது அழகாய் இருக்கும். சதுர முகம் கொண்டவர்கள் வட்டம், நீள் வட்டம் வடிவ கண்ணாடியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஓரங்கள் மடிந்து சற்றே பெரிய அளவு இவர்களுக்கு அழகாய் இருக்கும். நீண்ட முகம் கொண்டவர்கள் அகலமான ஃப்ரேமும், ஓரங்கள் அலங்கரிக்கப்பட்டதாகவும், கண்ணாடியின் காதுகள் நல்ல அகலமாக இருப்பதாகவும் தேர்ந்தெடுப்பது நல்லது. இதனால் முகம் அகண்டும், சிறியதாகவும் தோன்றும், வடிவத்தை விட அளவே மிகவும் முக்கியம்.

சிறிய வடிவமே இவர்களின் முக நீளத்தை குறைக்க உதவும். இன்றைக்கு பல குளிர் கண்ணாடிகள் யுவி அலைகளை தடுக்கும் வகையில் கிடைக்கிறது. 60 சதவீதத்திற்கு குறையாத யுவி பாதுகாப்பிளிக்கும் கண்ணாடிகளை பார்த்து வாங்குவது நல்லது. 

ஆடைகளின் நிறத்திற்கு பொருந்தும் படியாக அணியும் போது ஆண், பெண் இருபாலருக்கும் நல்ல கம்பீரத்தையும் மிடுக்கையும் அளிக்கிறது. சில நேரங்களில் ஆடை அணிகலன்களின் குறைகளையும் இக்கண்ணாடிகள் ஈடுகட்டக் கூடியவை. கண்ணாடி வாங்கும் போது ஏதோ கடைக்கு போனோம். பிடித்ததை வாங்கினோம் என்று இருக்கக்கூடாது.

Friday, February 28, 2014

முருங்கையின் மருத்துவ பயன்கள்

மூலிகைத் தாவரங்களில் ஒன்று முருங்கை 'டிரம்ஸ் டிக்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் முருங்கைக்காயின் அறிவியல் பெயர் மொரிங்கா ஆலிபெரா. முருங்கையின் கீரையும், காயும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. பூக்களும் ஆரோக்கியம் தரும். இதிலுள்ள சத்துக்களை இந்த வாரம் அறிந்து கொள்ளலாம்...

முருங்கை

* உலர்த்தப்பட்டு, பவுடராக தயாரிக்கப்பட்ட கீரையில் நிறைய அளவில் அமினோ அமிலங்கள் உள்ளன.

* முருங்கைக் காய் மற்றும் விதைகள் ஆலிக் அமிலம் நிறைந்தது. ஒற்றைப் பூரிதமாகாத கொழுப்புச்சத்து இதிலுள்ளது.

* முருங்கை விதைகள் எண்ணைச்சத்து மிக்கது. உயிரμ உற்பத்தியிலும் பங்கு வகிக்கிறது.

* பசுமையான முருங்கை கீரையில் 'வைட்டமின் ஏ', நிறைய அளவில் உள்ளது. 100 கிராம் கீரையில் டி.ஆர்.எல். முருங்கை 52 சதவீதம் உள்ளது. அதாவது உடலுக்கு அன்றாடம் கிடைக்க வேண்டிய வைட்டமின் தேவையைவிட 2 1/2 மடங்கு அதிகமாகவே கிடைக்கச் செய்கிறது கீரை.

* மேலும் 'வைட்டமின் ஏ', ஆனது கொழுப்பை கரைக்கும் ஆற்றல் உடையது. சிறந்த நோய் எதிர்ப் பொருளாகவும் செயல்படும். பார்வைத்திறன், சருமப்பொலிவு ஆகிய வற்றிற்கும் உதவுகிறது.

* முருங்கைக் காய்களில் அதிக அளவில் 'வைட்டமின் சி' உள்ளது. 100 கிராம் பூவில் 235 சதவீதம் டி.ஆர்.எல். அளவில் 'வைட்ட மின் சி' உள்ளது. இது உடலுக்கு நோய் தொற்றை எதிர்க்கும் ஆற்றலை வழங்குகிறது. பிரீ-ரேடிக்கல் உடலில் சேராமலும் தடுக்கிறது.

* பி- காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான வைட்டமின் பி-6, தயமின், ரிபோ பிளேவின், பான்டோதெனிக் அமிலம், நியாசின் போன்றவை உள்ளன. இவை கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு இவற்றின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு துணைக் காரணியாக உதவுகிறது.

* கால்சியம், இரும்பு, தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், செலினியம், மக்னீ சியம் போன்ற தாதுஉப்புக்கள் உள்ளன. இரும்புச்சத்து ரத்த சோகையை தடுக்கும், கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், துத்தநாகம் ரோம வளர்ச்சிக்கும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவும்.

* முருங்கை இலை (கீரை) அதிக அளவில் புரதம் நிறைந்தது. மற்ற கீரைகள் மற்றும் மூலிகைத்தாவரங்களில் இருப்பதைவிட மிகுதியாகவே புரதச் சத்து நிறைந்திருப்பது இதன் சிறப்பு. 100 கிராம் கீரையில் 9.8 கிராம் புரதம் உள்ளது. இது அன்றாடம் உடலில் சேர்க்கப்பட வேண்டிய புரத அளவில் 17.5 சதவீதம் ஆகும்.

தூக்கமின்மையில் இந்தியர்கள்

தூக்கமின்மைஇந்தியாவில் 93 சதவீதம் பேருக்கு தூக்கமின்மை குறைபாடு இருப்பதாக நீல்சன் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் போன்ற நாடுகளில் மருத்துவத்துறையில் இதயம் நுரையீரல் போல் இதற்கும் தனியாக சிறப்புத்துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் இப்போதுதான் இந்த தூக்கமின்மை பிரச்சினை குறித்து தூக்க மருந்தியல் என்ற துறை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.



தூங்கிய நிறைவே இல்லை என்று வருபவர்கள் இன்னொரு வரை தூக்கத்தின் நடுவே நிறைய முறை எழுந்து கொள்வபர்கள் 3-வது வகை. இதற்கு அடுத்த வகையினர் அசாதாரணமானவர்கள். தூக்கத்தில் நடப்பது , சாப்பிடுவது, போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள். ஷிப்ட் முறையில் மாறி மாறி வேலை செய்பவர்கள் குறித்த நேரத்தில் தூங்க முடியாமல் சிரமப்படுவார்கள்.

தூக்கமின்மைக்கு முக்கியமான ஒரு காரணம் ஸ்லீப் ஆப்னியா எனப்படும் சுவாசப்பகுதியிலுள்ள தசைகள் கூடுதலாக விரிவதால் வரும் குறட்டை பிரச்சனை அதிகப்படியான குறட்டை மட்டுமல்லாது சீராக சுவாசிக்க முடியாமலும் சிலர் அவதிப்படுவார்கள். தூங்கும் போது குறட்டை வருபவர்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் டூளைக்கு போகாது.

இதனால் நுத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயக் கோளாறு பக்கவாதம் வரலாம். ஒபீசிட்டி எனப்படும் அதிக உடல் எடை வேலையில் ஏற்படும் மனஅழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவவை தூக்கமின்மை வேறு சில காரணங்கள். வளர் இளம் பருவத்திலிருந்து தான் இந்த பிரச்சனை ஆரம்பிக்கிறது.

எல்லா வகையானது தூக்கமின்மையும் மருந்தினால் சரி செய்ய இயலாது என்பதோடு பல ஆண்டுகள் பிரச்சனைகளோடு இருந்து விட்டு தாமதமாக சிகிச்சைக்கு வருபவர்களை குணப்படுத்த நீண்ட நாட்கள் ஆகலாம். குறிப்பாக ஆப்னீயாவை சீஎப்மிசின் என்ற கருவி உள்ளது. இரவில் இதை பயன்படுத்தும் போது குறட்டையினால் ஏற்படும் சுவாசப்பிரச்சனை இருக்காது.

பில்ப்ஸ் ஹெலத்கேர் நீல்சன் நடத்திய ஆய்வு முடிவுகள்..........

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவில் முக்கிமான 25 நகரங்களை சேர்ந்த 35 முதல் 60 வயது வரை உள்ள 5 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. தூக்கமின்மையால் அவதிப்படும் 93 சதவீதம் பேர் 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறார்கள்.

58 சதவீதம் பேருக்கு தூக்கமின்மையால் வேலை பாதிக்கப்படுகிறது. 11 சதவீதம் பேர் அடிக்கடி அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்கின்றனர். 11 சதவீதம் பேர் வேலையின் போதே தூங்கி விடுகின்றனர். ஆய்வில் கலந்து கொண்ட 62 சதவீதம் பேருக்கு சுவாசம் தொடர்பான  பிரச்சனைகள் வரும் சாத்தியம் அதிகம் இருந்தது.

ஆனால் இது ஒரு பிரச்சனை என்பதை உணர்ந்து டாக்டரிடம் ஆலோசனை பெறுவபர்கள் வெறும் 2 சதவீதம் மட்டுமே தூக்கமின்மையும் ஒரு நோய் தான். அதை புரிந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும். இல்லையேல் சுவாச நோய்கள் மட்டுமல்ல, மனநோயையும் தவிர்க்க முடியாது.

ஆரோக்கியமாக இருக்கம் ஒருவர் 6 முதல் 8 மணி நேரம் தினமும்  தூங்க வேண்டும்.  8 மணி நேரம் தூங்க முடியவில்லை என்று வருபவர்கள் முதல் வகை. நன்றாக தூங்குகிறோம். ஆனால் காலையில் எழுந்தால் மீண்டும் தூங்கலாம் என்று தான் தோன்றுகிறது.

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்

சிவப்பு, வெள்ளை என இரண்டு வகையான முள்ளங்கி இருக்குது. இதில் வெள்ளை முள்ளங்கி மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது. சுவைக்காக சேர்க்கப்படுவது சிவப்பு முள்ளங்கி, முள்ளங்கியைப் பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதை மூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை.

சமைக்கும்போதும், சாப்பிடும்போதும் முள்ளங்கியில இருந்து வெளியாகும் வாசனை சிலருக்குப் பிடிக்காது. சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும். கந்தகமும், பாஸ்பரசும் இதில் அதிகமாக இருப்பது தான் அதற்கு காரணம். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி.

முள்ளங்கிபச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும். இட்லி வேகவைப்பது மாதிரி முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். குழந்தைகள் குடிக்க மறுத்தால், கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.

இப்படிச் செய்தால் மலச்சிக்கல், சளி போன்ற பிரச்சினைகள் இருக்காது. சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம். உடல் உஷ்ணத்தை தணிக்க வல்லது. இது வயிறு சம்பந்தபட்ட கோளாறுகளி நீக்க வல்லது. குடலில் புண் இருந்தாலும் ஆற்றி விடும்.

மலச்சிக்கல் ஏற்படாதவாறு பாதுகாக்கும். பசியை அதிகரிக்க செய்யும். உஷ்ண மிகுதியால் மூல நோய் ஏற்பட்டு அவதிபடுபவர்க்கு இது சிறந்த மூலிகையாகும். நீரிழிவு, நரம்பு தளர்ச்சிகு நல்லது. முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். இருந்தாலும், இதை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். ஆகவே அளவாக சாப்பிடுவது நல்லது.

குளிர்கால நோய்களை தடுக்கும் வழிமுறைகள்



குளிர்கால நோய்
குளிர்காலம் ஆரம்பித்து விட்டது. எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கி விடலாம். ஆனால் மழையையும், குளிரையும் தாங்க முடியாது. குளிர்காலத்தில் தான் உடல் பலவீனமானவர்களுக்கு பாதிப்புகள் வரும் என்கிறார் அமிர்தாஞ்சன் கேர் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் டாக்டர் பிரேம் ஆனந்த்.  

தும்மல், அலர்ஜி, ஆஸ்துமா, தோல் பாதிப்பு, ரத்த அழுத்தம், காலில் வெடிப்பு, காய்ச்சல், கை-கால் மூட்டு வலி, முழங்கால் வலி என அனைத்து விதமான உடல் கோளாறுகளும் எட்டிப் பார்க்கும். குறிப்பாக ஆஸ்துமாவுக்கு குளிர்காலம் தான் ரொம்பவும் பிடித்தமானது. சுவாசக் குழாய் சுருங்கி மூச்சு விட முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும்.  

அவர்கள் கோடை காலத்தைப் போல் நினைத்து வெளியில் சென்று வர முடியாது. டாக்டரின் ஆலோசனையின் பேரில் முன் எச்சரிக்கையாக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போல் இதய பாதிப்பு உள்ளவர்களையும் குளிர்காலம் சிரமப்படுத்தும். காரணம் குளிர் காலத்தில் ரத்த நாளங்கள் சுருங்கி விடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.  

குளிர்காலத்தில், பகல் நேரத்தைவிட, இரவு நேரம் அதிகம். அதனால், வெப்பம் குறைவது இயல்பானது. வெப்பம் குறைந்தால், உடலில் சுரப்பிகள் வேலை செய்வது மாறுபடும். ரத்தத்தில் முக்கியமாக உள்ள கார்டிசால் சுரப்பது குறையும். வெப்பம் குறைவாக இருக்கும் என்பதால், குளிர்காலத்தில், இதய நோயாளியின் ரத்தக்குழாய் சுருங்கியும், இறுக்கமாகவும் இருக்கும்.  

இதனால், இதயத்துக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதிகாலை ரத்த அழுத்தம் ஆபத்தானது. குளிர் காலத்தில், அதிகாலையில் வாக்கிங் போவது, வெளியே போவது போன்றவற்றால் ஒரு பக்கம் ஆக்சிஜனும் குறைந்து, ரத்த அழுத்தமும் மாறுபடும். அதிகாலையில் எழுந்து வேலை செய்வது, இதய பாதிப்புள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள கார்டிசால் அளவு குறையும்.  

அந்த காலகட்டத்தில், வைரஸ் தொற்று நோய் மூலம் இதய பாதிப்புள்ளவர்களுக்கு பிரச்சினை வரலாம். இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக, டாக்கடர் சொல்படி நடப்பதே நல்லது. அறுபது வயதை கடந்தவர்கள் குளிர் காலத்தில்அதிகாலையில் எழுவது, வேலை செய்வது, வெளியில் வாக்கிங் போவது போன்றவற்றை `மூட்டை' கட்டி வைக்க வேண்டும்.  

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருப்பவர்கள், குளிர் காலத்தில் குளிரில் எந்த வேலையையும் வைத்துக் கொள்ளக்கூடாது. அதிகாலையில் எழுந்து போகும் பழக்கத்தை குளிர்காலம் போகும் வரை மாற்றிக் கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் குளிரை தடுக்க முடியாது. ஆனால், இதய பாதிப்பை தவிர்க்க சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்தால், இதய பாதிப்பில் இருந்து தப்பி விடலாம்.  

நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். குளிர் காலத்திலும் அதிகாலையில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வெயில் வந்தவுடன் செய்யலாம். காய்கறிகள், பழங்கள், அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். குளிர்பானங்களை விட, அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர் பருவம் வரை, டாக்டரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.  

அப்போது தான் ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கும். பெரும்பாலானவர் களுக்கு தூங்கி எழுந்ததும் கை-கால்களில் மூட்டு வலி இருக்கும். அவர்கள் எழுந்ததும் சுடு நீரில் கை, கால்களை வைக்க வேண்டும். படுக்கை அறையின் வெப்ப நிலை சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குளிரை தாங்கும், போர்வை, கம்பளி ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.  

தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெயை உடலில் தேய்க்கலாம். குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, குளிப்பதால் ஏற்படும் ஈரப்பதம் மற்றும் எண்ணெய் பசை இழப்பை ஈடு செய்ய உதவும்.  

மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும். வெதுவெதுப்பான சுடுநீரை பயன்படுத்த வேண்டும். குளிர்காலத்தில் பெருபாலா னவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினை உதடு வெடிப்பு, இதற்கு, பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம்.  

பெட்ரோலியம் ஜெல்லிக்கு பதிலாக வெண் ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும். குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழைசாறு தடவி, சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம்.  

இதனால், கூந்தல் மென்மையாக இருக்கும். மேலும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆலிவ் ஆயில் தடவலாம். இதனால், கூந்தலின் ஈரத்தன்மை வலுவடையும். எண்ணெயை சூடுபடுத்தி, தலையில் தேய்த்து குறைந்த நேரம் ஊற விட வேண்டும். தலையில், அதிக நேரம், எண்ணெயை ஊறவிட்டால் உடல் நலன் பாதிக்கப்படலாம்.  

குளிர்கால நோய்தோல் வறட்சி உள்ளவர் கள் சோப்பிற்கு மாறாக கடலை மாவை உபயோகிக்கலாம். கால்களில் வெடிப்பு ஏற்பட்டால் யூரியா மற்றும் ஆண்டிபயாட்டிக் கலந்த கிரீம்களை உபயோகிக்கலாம். காலுறைகளை தவறாது இரவு முழுவதும் அணிந்தால் கால்வெடிப்பு குறையும். பகலிலும் செருப்பிற்கு பதிலாக பூட்ஸ் அணிவது நல்ல பலனளிக்கும்.  

உணவில் தயிர், முட்டை, மீன், நல்லெண்ணெய் போன்றவைகளை அதிகமாக சாப்பிடலாம். தேவைப்படுவோருக்கு ஏ வைட்டமின் கலந்த மாத்திரைகளும் கொடுக்க வேண்டும். குளிர் சிறுவர்கள், குழந்தைகளையும் பாதிக்கும். அவர்களுக்கு ஐஸ்கிரீம், மற்றும் குளிர்பானங்களை வாங்கிக் கொடுக்க கூடாது. குழந்தைகள் தூங்கும் போது கைகள், கால்களில் ஷாக்ஸ் அணிந்து கொள்ளச் செயலாம்.  

குளிர் தாங்கும் ஆடைகளையும், படுக்கைகளையும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சிறுவர்கள் தும்மல், சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்படுவதை தடுக்கலாம். குளிர்காலத்தில் நம் உடல் நலனை பாதுகாக்க பொதுவான சில வழிமுறைகள்:-  

வெளியில் போகும் போது காதுகளை ஸ்கார்ப் அல்லது காது மூடிகளை கொண்டு நன்றாக மூடவும். இதனால் காது துளைகள் வெது வெதுப் பாகவும் உலர்ந்தும் இருக்கும். தொற்று ஏற்பட வழியில்லை. சிறுவர்கள் காது தொற்று நோயினால் பாதிக்கப்படுவதை தடுக்க பதப்படுத்தப்பட்ட பொருட்களை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும்.  

குளிர் காலத்தில் வயதான வர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் ஜலதோஷம் பிடிக்கும். உங்கள் உடம்பை ஸ்வெட்டர் போட்டு குளிர் தாக்காமல் பார்த்துக் கொள்ளவும். சளியை வெளியேற்றுவதற்காக அடிக்கடி மூக்கை வேகமாக சிந்த வேண்டாம். இப்படி செய்வது காதுகளை கடுமையாக பாதிக்கும்.  

சளித்தொற்று காதுகளை தாக்கும். குளிர் காலத்தில் நீச்சல் வேண்டாம். குளிர் காலம் என்றில்லாமல் தினமுமே குளிக்கும் போது காதுகளில் நீர் போகாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம். மருத்துவரின் வழிகாட்டு தல் இல்லாமல் காதுகளுக்குள் நீர், அல்லது எண்ணெய் விடுவது போன்றவற்றைத் தவிர்க்கவும்.  

சூடான பதார்த்தங்களையே சாப்பிடவும். குளிர்ந்த நீரோ, பொருட்களோ வேண்டாம். குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் காது தொற்று அதிகரிக்கும். அதிகாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் காது, மூக்கு போன்றவற்றில் குளிர்காற்று உட்புகாமல் இருக்க தகுந்த கவசங்கள் அணிந்து கொண்டு செல்லலாம். இவற்றையெல்லாம் கடைப்பிடித்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.

மாரடைப்பை குணப்படுத்தும் வெந்தயக் கீரை

வெந்தயக் கீரை
வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும். வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம். வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது.

குழந்தைகளின் அழுகைக்கான காரணங்கள்

குழந்தைகளின் அழுகை
குழந்தைகளின் அழுகைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. குழந்தைகளின் அழுகைக்கு என்ன காரணம், அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இங்கே காணலாம்.. பசியால்தான் பெரும்பாலும் குழந்தைகள் அழும். பசியால் அழுதால் எளிதாக கண்டு பிடித்துவிடலாம்.

குழந்தைகள் பால்குடிக்கும்போது என்ன அறிகுறிகளை காட்டுமோ அதை எல்லாம் அந்த அழுகையோடு வெளிப்படுத்தும். கைவிரலை சப்புதல், பால்குடிப்பதுபோல் உதடுகளை சுளித்தல், உதடுகளை அம்மாவின் உடல் மீது சேர்த்தல், அம்மாவின் முகத்தை பார்த்தல் போன்றவைகள் எல்லாம் பசியால் ஏற்படும் அழுகையின்போது வெளிப்படும்.

‘அம்மா நான் நனைத்துவிட்டேன்’

பசி தீர்ந்து, குழந்தை நன்றாக தூங்கும்போது திடீரென்று அழுதால் சிறுநீர் கழித்து நனைந்திருக்கிறது என்று அர்த்தம். அதுதான் காரணம் என்றால், நனைந்த துணியை மாற்றியதும் குழந்தை நிம்மதியாக தூங்கத் தொடங்கிவிடும்.

‘அம்மா எனக்கு தூக்கம் வருதே’

வீட்டில் அதிக சத்தமோ, திடீர் சீதோஷ்ணநிலை மாற்றமே ஏற்பட்டால் அது குழந்தைகளின் தூக்கத்தை பாதிக்கும். அப்போதும் அழத் தொடங்கிவிடும். குளிப்பாட்டி, பசியை   தீர்த்ததும் எல்லா குழந்தைகளும் தூக்கத்திற்கு தயாராகிவிடும். அப்போது தூக்கத்திற்கு   ஏற்ற சூழ்நிலை அமையாவிட்டால் குழந்தைகள் அழுதுவிடும். அந்த குழந்தையின் அருகில் இருந்து மற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தூங்க முடியாமல் குழந்தை தவிக்கும்.

‘அம்மா என்னை கொஞ்சம் எடுத்து கொஞ்சு’

சில நேரங்களில் குழந்தைகள் அம்மா தன்னை தூக்கி கொஞ்சவேண்டும் என்பதற்காகவும் அழும். அப்போது அம்மா எடுத்து, நெஞ்சோடு சேர்த்து, கொஞ்சி சிறிது நேரம் பேசினால் அழுகையை நிறுத்திவிடும். அம்மாவின் பாதுகாப்பும், அரவணைப்பும், வருடலும் குழந்தைகளுக்கு எப்போதும் தேவைப்படுகிறது. அது கிடைக்காதபோது அழுகையைத் தொடங்கிவிடும்.

‘அம்மா எனக்கு வாயு தொந்தரவு’

குழந்தைகளை அதிகமாக அழவைப்பது, அதன் வாயு தொந்தரவு. பால் குடித்த சிறிது நேரத்திலே இந்த தொந்தரவு ஏற்பட்டு குழந்தைகள் அழும். பிறந்த 3, 4 மாதங்களில் வாயு தொந்தரவு அதிகம் ஏற்படும். அதனால் பால் புகட்டியதும் சிறிது நேரம் தோளில் போட்டு தட்டிக்கொடுத்தால் குழந்தை ஏப்பம் விடும். அப்போது வாயு வெளியேறிவிடும்.

பால் புகட்டியதும் குழந்தையை படுக்கவைக்காமல் இருந்தால், இந்த அழுகை ஏற்படாது. குளிர் அல்லது திடீர் உஷ்ணத்தை குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதாலும் அழும். குளிப்பாட்டிவிட்டு உடனே தலையை துவட்டி, உடலை துடைக்காவிட்டாலும், நனைந்த நாப்கினை மாற்ற தாமதமானாலும் குளிரால் குழந்தைகள் அழும்.

குழந்தைகளை குளிப்பாட்டி முடிந்ததும் உடனே உடலை துடைத்துவிடவேண்டும். குளிர்ந்த நீரிலும், சுடுநீரிலும் குழந்தைகளை குளிப்பாட்டக்கூடாது. குளிப்பாட்டும் நீரில்   டெட்டால் போன்ற எதையும் கலக்கவும்கூடாது. பேபி சோப், பேபி லோஷன் போன்றவற்றை மட்டும் பயன்படுத்தவேண்டும்.

'அம்மா எனக்கு பல் முளைக்கப்போகிறது’

பல் முளைக்கும்போது சில குழந்தைகள் வலியால் அழும். அந்த அழுகை நீடித்தால் குழந்தையை டாக்டரிடம் காண்பிப்பதே நல்லது. 4 முதல் 7 மாதத்திற்குள் முதல் பல் முளைக்கும். அப்போது ஈறை தடவிப் பார்த்தால் உணர முடியும்.

அறிமுகமற்றவர்கள் தூக்கும்போதும், ஆடை தொந்தரவாக அமையும்போதும், பால் குடிப்பதும்- தூங்குவதுமாக பொழுதை போக்கி போரடித்தாலும் குழந்தைகள் அழும். காரணத்தைக் கண்டறிந்து, சரி செய்ய முடியாதபோது அழும் குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய் காண்பிப்பதே சரியான வழி.