Pages

Showing posts with label குழந்தை பராமரிப்பு. Show all posts
Showing posts with label குழந்தை பராமரிப்பு. Show all posts

Friday, May 2, 2014

உங்கள் குழந்தையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

குழந்தை
ஒரு மனிதனுக்கு எல்லா செல்வங்களையும் விட சிறந்தது குழந்தைச் செல்வம் தான். அந்த குழந்தையின் வளர்ச்சியை கண்டு மகிழ்வதில் அளவில்லா இன்பம். சில சமயங்களில் குழந்தையின் வளர்ச்சிப் படிகள் சீறாக அமைவதில்லை. அப்படிப்பட்ட குழந்தைகளை எவ்வாறு கண்டு கொள்வது.

அவற்றை எப்படி சரி செய்வது என்பதை பற்றி விளக்குவதே இந்த கட்டுறையின் நோக்கம். ஒரு குழந்தை கருவில் இருந்து தான் அதன் முதல் வளர்ச்சி தொடங்குகின்றது. குழந்தை பிறப்பிற்கு பின் உள்ள வளர்ச்சிப்படிகளைப் பற்றி பார்ப்போம். குழந்தையின் வளர்ச்சியை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. உடல் சார்ந்த வளர்ச்சிகள்

2. அறிவு சார்ந்த வளர்ச்சிகள் இதில் உடல் சார்ந்த வளர்ச்சி என்பது குழந்தை பிறந்தது முதல் நடக்கும் வரை உள்ள பல்வேறு வளர்ச்சிப் படிகள். அதாவது குழந்தை பிறந்து 3 முதல் 4 மாதத்திற்குள் காலை நிற்க வேண்டும். 4 முதல் 5 மாதத்தில் திரும்பி படுத்தல்,

6-7 மாதத்தில் நெஞ்சால் தேய்த்துக் கொண்டு முன்னே நகருதல், 7-8 மாதத்தில் கைகளை ஊன்றி உட்காருதல், 8-9 மாதத்தில் தவழுதல், 9-10 மாதத்தில், உதவியுடன் பிடித்துக் கொண்டு நிற்றல், 10-11 மாதத்தில் உதவியுடன் நடத்தல்,

11-12 மாதத்தில் தனியாக நடத்தல், 14-18 மாதங்களில் மாடிப்படி ஏறுதல், 18-24 மாதங்களில் மாடிப்படி இறங்குதல், இந்த வளர்ச்சிப்படிகள் ஒன்றி அல்லது இரண்டு மாதங்கள் முன் பின் நடக்கலாம். ஆனால் அதைவிட அதிகமாக (இரண்டு மாதங்கள் கழிந்தும்) மாதங்கள் கடந்தும் வளர்ச்சிப்படியில் மாற்றம் இல்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அனுகி அதற்கான மருத்துவத்தை ஆரம்பிக்க வேண்டும்.

ஏனென்றால் சில பெற்றோர்கள் சரியான மாதத்தில் குழந்தையின் வளர்ச்சிப்படி இல்லை என்றாலும் அதை உடனடியாக கவனிக்க மறந்து விடுகின்றனர். அல்லது நமது குடும்பததில் எல்லோரும் சற்று தாமதமாகத்தான் நடந்தார்கள் என்று எண்ணி குழந்தையை வீட்டிலே வைத்து விடுகின்றனர். பின் தாமதமாக பயிற்சியளிப்பது மிக குறைவான முன்னேற்றத்தையே தரும்.

2. அறிவு சார்ந்த வளர்ச்சிப் படிகள்:- குழந்தையின் அறிவு சார்ந்த வளர்ச்சிப் படிகள் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே நம்மால் கண்டு கொள்ள முடியும். எளிமையாக கண்டு கொள்ள நான் இங்கு குழந்தையின் சில நடவடிக்கைகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

1. குழந்தையை கூப்பிடும் போது திரும்பிப் பார்க்காமல் இருத்தல்.

2. குழந்தையிடம் பேசும் போது முகத்தை பார்க்காமல் இருத்தல்.

3. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் இருந்தல்.

4. தனியாக விளையாடுதல்.

5. சில சமயங்களில் அடம் பிடித்தல்/ அழுது கொண்டே இருத்தல்.

6. ஓரிடத்தில் அமராமல் சுற்றிக் கொண்டே இருத்தல்.

7. பொது இடங்களில் சுய கட்டுப்பாடு இன்றி அழுதல், அடம் பிடித்தால், மற்றவர்களுடன் பழக மறுத்தல்.

8. பொருட்களை உடைத்தல்/ தூக்கி எறிதல்.

9. இயற்கை உபாதையை கட்டுப்பாடு இன்றி இருக்கும் இடத்திலேயே கழித்தல்.

10. 1 வயதில் பேசிய குழந்தை 1 வயது முதல் பேசாமல் இருத்தல்.

11. வயதுக்கேற்ற புரிதல், பேசுதல் இல்லாமல் இருத்தல்.

12. தனியாக அர்த்தமற்ற வார்த்தைகளால் பேசுதல் அல்லது கத்துதல்.

இது போன்ற செயல்களை நாம் வீட்டில் கவனித்தால் உடனடியாக இதற்கான பயிற்சியை கொடுக்க வேண்டும். பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் கவனிக்க வேண்டியவை.

1. பள்ளியில் ஓரிடத்தில் அமராமல் சுற்றித்திரிதல்.

2. தான் கொண்டு சென்ற பொருட்களை தொலைத்து விடுதல்.

3. சரியாக புரிந்து கொள்ளாமல் இருத்தல்.

4. கையெழுத்து சரியாக இல்லாமல் இருத்தல்.

5. கவனக்குறைவுடன் இருத்தல்.

6. (spelling mistake) எழுத்துப்பிழை உடன் எழுதுதல்.

7. மற்ற குழந்தைகளுடன் ஒத்துக் போகாமல் இருத்தல்.

8. home work சரியாக செய்யாமல் இருத்தல்.

9. வயதுக்கேற்ற பேச்சு இல்லாமல் இருத்தல்.

10. படித்ததை எளிதில் மறந்து விடுதல்.

11. (board copy) கரும் பலகையை பார்த்து எழுதாமல் இருத்தல்.

இது போன்ற பிரச்சினைகளை உங்கள் குழந்தைகளிடத்தில் இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொண்டு பயன் பெறுங்கள்.

Friday, February 28, 2014

குழந்தைகளின் அழுகைக்கான காரணங்கள்

குழந்தைகளின் அழுகை
குழந்தைகளின் அழுகைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. குழந்தைகளின் அழுகைக்கு என்ன காரணம், அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இங்கே காணலாம்.. பசியால்தான் பெரும்பாலும் குழந்தைகள் அழும். பசியால் அழுதால் எளிதாக கண்டு பிடித்துவிடலாம்.

குழந்தைகள் பால்குடிக்கும்போது என்ன அறிகுறிகளை காட்டுமோ அதை எல்லாம் அந்த அழுகையோடு வெளிப்படுத்தும். கைவிரலை சப்புதல், பால்குடிப்பதுபோல் உதடுகளை சுளித்தல், உதடுகளை அம்மாவின் உடல் மீது சேர்த்தல், அம்மாவின் முகத்தை பார்த்தல் போன்றவைகள் எல்லாம் பசியால் ஏற்படும் அழுகையின்போது வெளிப்படும்.

‘அம்மா நான் நனைத்துவிட்டேன்’

பசி தீர்ந்து, குழந்தை நன்றாக தூங்கும்போது திடீரென்று அழுதால் சிறுநீர் கழித்து நனைந்திருக்கிறது என்று அர்த்தம். அதுதான் காரணம் என்றால், நனைந்த துணியை மாற்றியதும் குழந்தை நிம்மதியாக தூங்கத் தொடங்கிவிடும்.

‘அம்மா எனக்கு தூக்கம் வருதே’

வீட்டில் அதிக சத்தமோ, திடீர் சீதோஷ்ணநிலை மாற்றமே ஏற்பட்டால் அது குழந்தைகளின் தூக்கத்தை பாதிக்கும். அப்போதும் அழத் தொடங்கிவிடும். குளிப்பாட்டி, பசியை   தீர்த்ததும் எல்லா குழந்தைகளும் தூக்கத்திற்கு தயாராகிவிடும். அப்போது தூக்கத்திற்கு   ஏற்ற சூழ்நிலை அமையாவிட்டால் குழந்தைகள் அழுதுவிடும். அந்த குழந்தையின் அருகில் இருந்து மற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தூங்க முடியாமல் குழந்தை தவிக்கும்.

‘அம்மா என்னை கொஞ்சம் எடுத்து கொஞ்சு’

சில நேரங்களில் குழந்தைகள் அம்மா தன்னை தூக்கி கொஞ்சவேண்டும் என்பதற்காகவும் அழும். அப்போது அம்மா எடுத்து, நெஞ்சோடு சேர்த்து, கொஞ்சி சிறிது நேரம் பேசினால் அழுகையை நிறுத்திவிடும். அம்மாவின் பாதுகாப்பும், அரவணைப்பும், வருடலும் குழந்தைகளுக்கு எப்போதும் தேவைப்படுகிறது. அது கிடைக்காதபோது அழுகையைத் தொடங்கிவிடும்.

‘அம்மா எனக்கு வாயு தொந்தரவு’

குழந்தைகளை அதிகமாக அழவைப்பது, அதன் வாயு தொந்தரவு. பால் குடித்த சிறிது நேரத்திலே இந்த தொந்தரவு ஏற்பட்டு குழந்தைகள் அழும். பிறந்த 3, 4 மாதங்களில் வாயு தொந்தரவு அதிகம் ஏற்படும். அதனால் பால் புகட்டியதும் சிறிது நேரம் தோளில் போட்டு தட்டிக்கொடுத்தால் குழந்தை ஏப்பம் விடும். அப்போது வாயு வெளியேறிவிடும்.

பால் புகட்டியதும் குழந்தையை படுக்கவைக்காமல் இருந்தால், இந்த அழுகை ஏற்படாது. குளிர் அல்லது திடீர் உஷ்ணத்தை குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதாலும் அழும். குளிப்பாட்டிவிட்டு உடனே தலையை துவட்டி, உடலை துடைக்காவிட்டாலும், நனைந்த நாப்கினை மாற்ற தாமதமானாலும் குளிரால் குழந்தைகள் அழும்.

குழந்தைகளை குளிப்பாட்டி முடிந்ததும் உடனே உடலை துடைத்துவிடவேண்டும். குளிர்ந்த நீரிலும், சுடுநீரிலும் குழந்தைகளை குளிப்பாட்டக்கூடாது. குளிப்பாட்டும் நீரில்   டெட்டால் போன்ற எதையும் கலக்கவும்கூடாது. பேபி சோப், பேபி லோஷன் போன்றவற்றை மட்டும் பயன்படுத்தவேண்டும்.

'அம்மா எனக்கு பல் முளைக்கப்போகிறது’

பல் முளைக்கும்போது சில குழந்தைகள் வலியால் அழும். அந்த அழுகை நீடித்தால் குழந்தையை டாக்டரிடம் காண்பிப்பதே நல்லது. 4 முதல் 7 மாதத்திற்குள் முதல் பல் முளைக்கும். அப்போது ஈறை தடவிப் பார்த்தால் உணர முடியும்.

அறிமுகமற்றவர்கள் தூக்கும்போதும், ஆடை தொந்தரவாக அமையும்போதும், பால் குடிப்பதும்- தூங்குவதுமாக பொழுதை போக்கி போரடித்தாலும் குழந்தைகள் அழும். காரணத்தைக் கண்டறிந்து, சரி செய்ய முடியாதபோது அழும் குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய் காண்பிப்பதே சரியான வழி.

Tuesday, February 18, 2014

குழந்தைக்கு ஏன் நல்லது? - பாட்டி வைத்தியம்

*****காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் நல்ல அக்மார்க் தேனில் ஒரு சொட்டு நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு சீக்கிரம் பேச்சு வரும்.

*****தினமும் இரவில் விள்கேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!

*****நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

*****சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும்.

*****குழந்தை அடிக்கடி வெளிக்குப் போனால், சுட்ட வசம்பை இரண்டு உரை உரைத்து ஊற்றினால் நின்று விடும்.

*****குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.

*****பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும்.

*****குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.

*****குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.

*****தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்.

*****குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து குளிப்பாட்டாத நாட்களில் வெந்நீரில் யுடிகோலோன் போட்டு குழந்தையைத் துடைத்து பவுடர் போட்டு சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.