Pages

Friday, February 28, 2014

முருங்கையின் மருத்துவ பயன்கள்

மூலிகைத் தாவரங்களில் ஒன்று முருங்கை 'டிரம்ஸ் டிக்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் முருங்கைக்காயின் அறிவியல் பெயர் மொரிங்கா ஆலிபெரா. முருங்கையின் கீரையும், காயும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. பூக்களும் ஆரோக்கியம் தரும். இதிலுள்ள சத்துக்களை இந்த வாரம் அறிந்து கொள்ளலாம்...

முருங்கை

* உலர்த்தப்பட்டு, பவுடராக தயாரிக்கப்பட்ட கீரையில் நிறைய அளவில் அமினோ அமிலங்கள் உள்ளன.

* முருங்கைக் காய் மற்றும் விதைகள் ஆலிக் அமிலம் நிறைந்தது. ஒற்றைப் பூரிதமாகாத கொழுப்புச்சத்து இதிலுள்ளது.

* முருங்கை விதைகள் எண்ணைச்சத்து மிக்கது. உயிரμ உற்பத்தியிலும் பங்கு வகிக்கிறது.

* பசுமையான முருங்கை கீரையில் 'வைட்டமின் ஏ', நிறைய அளவில் உள்ளது. 100 கிராம் கீரையில் டி.ஆர்.எல். முருங்கை 52 சதவீதம் உள்ளது. அதாவது உடலுக்கு அன்றாடம் கிடைக்க வேண்டிய வைட்டமின் தேவையைவிட 2 1/2 மடங்கு அதிகமாகவே கிடைக்கச் செய்கிறது கீரை.

* மேலும் 'வைட்டமின் ஏ', ஆனது கொழுப்பை கரைக்கும் ஆற்றல் உடையது. சிறந்த நோய் எதிர்ப் பொருளாகவும் செயல்படும். பார்வைத்திறன், சருமப்பொலிவு ஆகிய வற்றிற்கும் உதவுகிறது.

* முருங்கைக் காய்களில் அதிக அளவில் 'வைட்டமின் சி' உள்ளது. 100 கிராம் பூவில் 235 சதவீதம் டி.ஆர்.எல். அளவில் 'வைட்ட மின் சி' உள்ளது. இது உடலுக்கு நோய் தொற்றை எதிர்க்கும் ஆற்றலை வழங்குகிறது. பிரீ-ரேடிக்கல் உடலில் சேராமலும் தடுக்கிறது.

* பி- காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான வைட்டமின் பி-6, தயமின், ரிபோ பிளேவின், பான்டோதெனிக் அமிலம், நியாசின் போன்றவை உள்ளன. இவை கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு இவற்றின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு துணைக் காரணியாக உதவுகிறது.

* கால்சியம், இரும்பு, தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், செலினியம், மக்னீ சியம் போன்ற தாதுஉப்புக்கள் உள்ளன. இரும்புச்சத்து ரத்த சோகையை தடுக்கும், கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், துத்தநாகம் ரோம வளர்ச்சிக்கும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவும்.

* முருங்கை இலை (கீரை) அதிக அளவில் புரதம் நிறைந்தது. மற்ற கீரைகள் மற்றும் மூலிகைத்தாவரங்களில் இருப்பதைவிட மிகுதியாகவே புரதச் சத்து நிறைந்திருப்பது இதன் சிறப்பு. 100 கிராம் கீரையில் 9.8 கிராம் புரதம் உள்ளது. இது அன்றாடம் உடலில் சேர்க்கப்பட வேண்டிய புரத அளவில் 17.5 சதவீதம் ஆகும்.

No comments: