*பனீர்
பட்டர் மசாலா தயாரிக்கும் போது இஞ்சி, வெங்காயம் விழுது சேர்த்து நன்கு
வதக்கி, ஒரு ஸ்பூன் தேங்காய் விழுது சேர்த்துக் கிளறினால் சுவை ஹோட்டலை
தோற்கடிக்கும்!
*சூப் தயாரிக்கும் போது இரண்டு ஸ்பூன் பார்லி வாட்டர் கலந்தால் தனிச் சுவை... உடலுக்கும் ஆரோக்கியம்!
*பனீரை சமையலில் பயன்படுத்துவதற்கு முன் மிதமான சூடுள்ள எண்ணையில் அரை நிமிட்ம் பொரித்து தண்ணீரில் போட்டு எடுத்து பயன்படுத்தினால் மிருதுவாகவும் புளிப்பில்லாமலும் இருக்கும்.
*வெஜிடபுள் புலாவ் அல்லது ஃபிரைடு ரைஸ் செய்யும் போது ஏலம், பட்டை, கிராம்பு ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடித்து தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவேண்டும். அந்த நீரை வடி கட்டி புலாவ் அரிசியை வேக வைக்கும் போது ஊற்றினால் புலாவ் மணக்கும் சாப்பிட சுலபமாக இருக்கும்.
*பாலக் கீரையோ, அரைக்கீரையோ எதுவாக இருந்தாலும் சுத்தம் செய்து விட்டு சர்க்கரை போட்டு நீரில் ஊற வைத்து பிறகு சமைத்தால் ருசியாக இருக்கும்.
*பூண்டு, வெங்காயம், மீன் ஆகியவற்றைக் கையாளும் போது கைகளில் இருந்து ஒருவிதமான வாசனை வரும். வேலை முடிந்ததும் கைகளில் சிறிது டுத் பேஸ்ட்டை தடவி தேய்த்துக் கழுவினால் வாடை நீங்கிவிடும்.
*முந்திரிப் பருப்பை வறுக்கும் போது நெய் சுட ஆரம்பித்த உடனேயே பருப்பைப் போட்டு விட வேண்டும். அப்போது தான் உள்ளேயும் வெளியேயும் ஒரே சீராக வறுபடும்.
*பிரெட் டோஸ்ட் செய்யும் போது நெய் ஊற்றினால் தோசைக் கல் தீயும். வெண்ணைய் போட்டால் தீயாது. கமகம வாசனை தூள் பறக்கும்.
*பூரி இடுகிற போது மாவைத் தொட்டு இட்டு எண்ணையில் பொரிப்பது வழக்கம். மாவுத் துகள்கள் எண்ணையில் படிந்து அடியில் கசடு படிவது தவிர்க்க முடியாமல் போகும். அதைத் தவிர்க்க பூரி இடுகிற மனையிலும், குழவியிலும் சிறிது எண்ணை தடவி விட்டு பிறகு பூரியை இட்டு எண்ணையில் பொரித்தால், எண்ணையில் கசடு சேராமல் அப்படியே பளிச் சென இருக்கும்.
*பக்கோடாவில் வெங்காயத்துக்குப் பதிலாக முட்டைகோஸ் அல்லது கேரட் அல்லது முள்ளங்கியை துருவிச் சேர்க்கலாம். மொறு மொறுப்பாக இருக்கும்.
*உளுந்து வடை மாவு நீர்த்துப் போய் விட்டதா? பாசிப்பாருப்பு மாவையோ, வேர்க்கடலைப் பொடியையோ கொஞ்சம் கலக்கலாம். சுவையும் கூடும்.
*முறுக்கு, தட்டை போன்றவை செய்யும் போது மாவை வெறும் கடாயில் வறுத்து விட்டுப் பயன் படுத்தினால் மொறு மொறுப்பாக இருக்கும். சீக்கிரம் நமத்துப் போகாமலும் இருக்கும்.
*உளுந்து வடைக்கு அறைக்கும் போது அதனுடன் 2-3 அவித்த உருளைக்கிழங்கையும் சேர்த்து அரைக்கவும். அந்த மாவில் தேவையான வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை தேவையான அளவு சேர்த்து வடையாகத் தட்டவும். எண்ணையில் பொறிக்கவும். புதுவிதமான 'கட்லெட் வடை' தயார்.
*2 ஸ்பூன் உளுத்தம் பருப்பை ஊறவைத்து, அரைத்து பஜ்ஜி மாவில் கலந்து செய்தால் புதுச்சுவை கிடைக்கும்.
*பக்கோடா செய்யும் போது, மாவில் சிறிது நெய்யும் உப்பிட்ட தயிரும் கலந்தால் பக்கோடா மொறு மொறுப்பாக இருக்கும்.
*பஜ்ஜிக்கு மாவு கரைக்கும் போது ஒரு டீஸ்பூன் எண்ணையை காய்ச்சி ஊற்றி பிறகு கரைத்தால் பஜ்ஜி அதிகம் எண்ணையை உறிஞ்சாது.
*வடை, பக்கோடவுக்கு சமையல் சோடாவை சேர்க்க சிலர் விரும்ப மாட்டார்கள். அவர்கள் அதற்குப் பதிலாக சிறிது ரவையைக் கலந்து செய்தால் அதே மொறுமொறுப்பு கிடைக்கும்.
*பாதாம், முந்திரி வைத்திருக்கும் டப்பாவில் சில கிராம்புகளைப் போட்டு வைத்தால் எப்போதும் ஃபிரெஷ்ஷாக இருக்கும்.
*இஞ்சி கைவசம் இல்லை என்றால் சுக்கைத் தட்டி சூடான தண்ணீரில் ஊறப் போட்டு அதற்கு பதிலாகப் பயன்படுத்தலாம்.
*விருந்து முடிந்த பிறகு பீடா, வெற்றிலை, சோம்பு ஆகியவற்றைக்குப் பதிலாக வெள்ளரித் துண்டுகளை சாப்பிட தரலாம். சாப்பிட்ட மசாலா வாசனை இருக்காது. புத்துணர்ச்சி பிறக்கும்.
*சன்னா மசாலாவோ, வேறு எந்த சுண்டல் வகையாகவோ இருந்தாலும் அதன் மீது பீட்ரூட், கேரட் துருவலை தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை.
*ஜாங்கிரிக்கான மாவை கிரைண்டரில் அரைக்காமல் ஆட்டுரலில் அரைத்தால் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
*ஏலக்காயை சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்திருந்து பிறகு எடுத்து பொடித்தால் தோல் இல்லாமல் நன்றாகப் பொடிக்க வரும்.

No comments:
Post a Comment