சுண்டைக்காய் |
வனப்பகுதிகளில்
இயற்கையாகவே வளரும் பல அறிய மூலிகைகள் குறித்து நாம் அதிகம்
அறிந்துகொள்ளாததுடன் நாம் உட்கொள்ளும் பல உணவுகளிலும் அதன் முழு
பயன்களையும் தெரியாமலே உட்கொள்கிறோம்.
அந்த வகையில் நீலகிரி பந்தலூர் பகுதி வனங்களில் அதிகளவில் வளர்ந்துள்ள சுண்டைக்காய் மருத்துவ குணங்களை கொண்டது. எந்த ரசாயன உரங்களோ, மருந்துகளோ தெளிக்காமல் வனப்பகுதிகளில் செடியாக வளரும் சுண்டைக்காய் கத்தரி-கண்டங்கத்தரி தாவர இனத்தை சேர்ந்தது. காய் சிறு கசப்பு சுவையுடையது. இவை வத்தக்குழம்புகளில் அதிகம் சேர்க்கப்படும். புரதம், கால்சியம், இரும்புசாத்து கொண்ட சுண்டைக்காய் ரத்தத்தை சுத்தமாக்கும்.
உடர்சோர்வு நீங்குதல், வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மையும் வயிற்றின் உட்புற சுவர்கள் பலமடையவும் பயன்படுகிறது. பல்வலிக்கும் சிறந்த மருந்தாகும். பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காய்ந்து குலுங்கும் சுண்டைக்காய்களை சமவெளிப் பகுதிகளிலிருந்து இப்பகுதி கடைகளுக்கு சாம்பார் பொருட்கள் கொண்டு வரும் பலரும் வத்தல் செய்வதற்காக பறித்து செல்கின்றனர். உள்ளூரில் இதன் மருத்துவ குணம் தெரியாததால் இதனை மக்கள் உதாசீனப் படுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment