பிறந்தது
முதலே தாயின் அரவணைப்பில் இருப்பதற்கு ஒவ்வொரு குழந்தையும்
விரும்புகின்றது. தனது உறக்கமும் தாயுடன் இருக்க விரும்பும் குழந்தைகள்
அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்ன அசைவில் இருந்து கூட தெரிந்து
கொண்டு விடுகிறது. தொடக்கம் முதல் தாயுடன் தூங்க விரும்பும் குழந்தைகள்
இப்பழக்கத்தை 16,17 வயது வரையில் தொடர விரும்பும் போதுதான் பிரச்சினையாகிறது.
இப்படிப்பட்ட ' வளர்ந்த பிள்ளைகள்' எல்லா செயல்பாடுகளிலும் அம்மா
பிள்ளைகளாகவே இருந்து இளம் வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை
இழந்துவிடுவார்கள் என்று குடும்பநல ஆலோசகர் மகேஷ் கூறுகிறார் மேலும் அவர்
கூறியதாவது:
சில குழந்தைகள் தாய்பால் குடித்து வயிறு நிரம்பியதும் உறங்கிவிடுவார்கள். அப்படி தூங்கி ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஒரு விரலை எடுத்து வாயில் வைத்து சூப்பிக் கொண்டிருப்பார்கள். இது அன்னிச்சையாக நடந்தாலும், உண்மையில் தாயிடம் பால் குடித்து கொண்டிருப்பதாக அவர்கள் நம்பும் அந்த நம்பிக்கைதான் இப்படி விரலை சப்பச் செய்கிறது. இது அவர்களை தாயின் பாதுகாப்பு வளையத்திற்குள் நிம்மதியாக இருப்பதை உணரவைக்கிறது. இதுவே அவர்களின் மனவளர்ச்சிக்கும் அறிவு மேம்பாட்டுக்கும் ஏதுவாகின்றது.
சின்னக்குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் பகல் நேரத்தில் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்கார பெண்ணின் நேரடி பார்வையிலோ தான் இருப்பார்கள். அதே நேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனியாக இருந்த நேரங்கள் ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்தி கொள்வார்கள்.
2வது குழந்தை பிறக்கும் பொழுது முதல் குழந்தையின் நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. 2வது குழந்தை பிறக்கும் பொழுது தனிமையை உணரத் தொடங்கும் முதல் குழந்தை. 2வது குழந்தையை எதிரியாக பார்க்கத் துவங்கிவிடும். இத்தகைய மனக்கசப்பு முதல் குழந்தைக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒரு குழந்தை தாயிடம் படுத்துக்கொண்டால், 2வது குழந்தை தந்தையிடம் படுத்துக்கொள்ள வைக்க வேண்டும். தாயிடம் காட்டும் பாசத்துக்கு இணையாக தந்தையிடம் குழந்தைகள் ஓட்டிக்கொள்ளும்.
ஏழு மற்றும் எட்டு வயதில், குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளிஇடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கின்றனர். இந்நிலையில், தனியறையில் தூங்கும் அளவிற்கு அவர்களுக்குள் மாற்றம் நேரிடுகிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்ல விதமாய் பெற்றோரே எடுத்து சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விட வேண்டும். திகில் கதைகள் கேட்பது படங்கள் பார்ப்பதன் மூலம் தனியறையில் படுக்க பயப்படலாம்.
இப்படி பயக்கும் குழந்தைகள் பெற்றோர் தூங்கும் அறையிலே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம். இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக பயப்படுபவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும் வரை படுத்திருக்கலாம். நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாக தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள்.

No comments:
Post a Comment