சப்போட்டா |
இயற்கைக் கொடுத்த பல அற்புதங்களில் மனித வாழ்க்கைக்கு எப்பொழுதும் 'சப்போர்ட்'டாக விளங்குவதில் ' சப்போட்டா' பழம் முதல் சாய்ஸ் என்றே சொல்லலாம். அப்படி என்னதான் இருக்கிறது எனகேள்வி கேட்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம். நாம் சுறுசுறுப்பாக நடந்து செல்ல நமக்கு மிகவும் அவசியமாக இருப்பது ஆற்றல். அந்த ஆற்றலை அதிகளவு கொண்டுள்ளது சப்போட்டா பழம்.
ஏனெனில் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் குளுக்கோஸ் அதில் அதிகம் உள்ளது. விளையாட்டு வீரர்கள் தங்களுக்குத் தேவையான அதிக ஆற்றலை பெற இது உகந்தது. வைட்டமின் 'ஏ' மற்றும் 'பி' இதில் அதிகம் காணப்படுவதால் நமது தோலின் அமைப்பு முறையை ஆரோக்கியமாகப் பராமரிக்கிறது. சப்போட்டாவில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.
எலும்பைப் பலப்படுத்தத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்களை அதிகளவு கொண்டுள்ள சப்போட்டா பழத்தை, தொடர்ந்து சாப்பிடுவதால் எலும்பு பலப்படுகிறது. சப்போட்டாவிலிருந்து நமது உடலுக்கு 56/100 கிராம் அளவு நார்ச்சத்து கிடைப்பதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனையும் வராது. இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்றபடி பாதுகாக்கும் தன்மையைச் சப்போட்டா பழம் கொண்டுள்ளது.
சப்போட்டா பழச்சாறுடன் தேயிலை சாறும் சேர்த்து பருகினால் ரத்த பேதி குணமாகும். தூக்கமின்மையால் அவதிபடுபவர்கள் இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு டம்ளர் சப்போட்டா பழ ஜூஸ் குடித்தால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம். சப்போட்டா பழத்தைச் சாப்பிட்டுவிட்டு ஒரு தேக்கரண்டி சீரகத்தை நான்கு மென்று விழுங்கினால் போதும் பித்தம் பறந்தே போகும். பித்த மயக்கத்திற்கு இது நல்ல மருந்து.
சப்போட்டா பழத்தைக் கூழக்கி சிறுது சுக்கு சித்தரத்தையைப் பொடித்துப் போட்டுச் சாப்பிடலாம். ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிப்படி பார்வையைப் பலப்படுத்துவதோடு முதுமையைத் தள்ளிபோடும் ஆற்றலும் இதில் அதிகம். எனவே தினமும் ஒரு சப்போட்டா பழம் எடுத்துக் கொண்டால்போதும் உங்கள் ஆரோக்கியத்திற்கான ' புல் சப்போர்ட்' டும் சப்போட்டா பழம் வழங்குகிறது.
வைட்டமின் ஏ மற்றும் பி உள்ளதால் உடலில் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. சப்போட்டாவில் உள்ள ஆண்டியாக்கிடடண்ட் நார்சத்து மற்றும் ஊட்டசத்துக்கள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை தரும். எலும்பை பலப்படுத்த தேவையான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளதால் எலும்பை பலப்படுத்தும். சப்போட்டா பழத்தை சாப்பிட்டதும் ஒரு தேக்கரண்டி சீர்த்தை நன்கு மென்று விழுங்கினால் பித்த விலகும். விளையாட்டு வீரர்களுக்கு அதிக சக்தி தேவைப்படும் என்பதால் சப்போட்டா பரிந்துரைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment