Pages

Tuesday, December 10, 2013

காளானின் மருத்துவ குணங்கள்

காளான் மழைக்காலங்‌களில் மட்கிப் போன பொருட்களில் மீது வளரும் ஒரு பூஞ்சை இனம். இவற்றில் இயற்கையாய் வளரும் சில காளான்களில் விஷமுள்ளதும் விஷமற்றதாகவும் உள்ளன. காளான் வளர்ப்பு சிறந்த குடிசைத் தொழிலாக செய்து, வருமானம் ஈட்டி வருகின்றனர். இது மிகுந்த சத்து சுவை உடையதாக உள்ளது. மருத்துவ பயன்களை கொண்டது.

இந்தியாவில் எட்டு வகை காளான்கள் உள்ளன. இவற்றில் மொட்டுக் காளான், சிப்பிக் காளான் மட்டுமே அதிகப் பயன் பாட்டில் உள்ளது. காளான் ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை எடுத்து தேவைப்படும் இடத்துக்கு அனுப்பும் வியத்தகு பணியை காளானில் உள்ள வேதிப்பொருட்கள் செய்கின்றன. இதனால் உடலில் தேவையில்லாத இடத்தில் அதிகப்படியான கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இதனால் ரத்தம் சுத்தம் செய்யப்பட்டு, இதயம் சீராக இயங்க உதவுகிறது. இதயத்தை காப்பதில் காளானின் பங்கு அதிகம் எனலாம்.

ரத்த அழுத்தத்தின் போது ரத்தத்தில் உள்ள உட்புறம் வெளிப்புறம் செல்களில் பொட்டாசியம், சோடியம் ஆகிய வற்றை அளவு சமமாக இருக்க வேண்டும். அப்பணியை காளானில் உள்ள வேதிப்பொருட்கள் திறம்பட செய்கிறது. மேலும், காளானில் உள்ள தாமிர சத்து ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர் படுத்துகிறது. காளான் மூட்டு வாதம் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து. மலட்டுதன்மை மற்றும் கருப்பை நோயுள்ள பெண்களுக்கு சிறந்த மருந்து. காளானில் அமினோ அமிலங்கள் உள்ளதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. ஜீரணம், மலச்சிக்கலை தீர்க்கும் இயல்புடையது. பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதை தவிர்ப்பது நல்லது.

No comments: