Healthy Tips, Natural Beauty, Beauty Tips, Beauty care Skin Care, Hair Beauty, Vegetable Recipes, Natural Food, Indian Recipes, New Recipes, Easy Recipes, Healthy Recipe, Cookery, Healthy Food, Breakfast Recipes, Top Secret Recipes --Visit this blog to know more!
Tuesday, November 8, 2016
Monday, November 7, 2016
இதய நோயாளிகளே...காளான் சாப்பிடுங்க!
காய்களின் ராஜாவாக கேரட்டையும், ராணியாக காளானையும் குறிப்பிடுவார்கள். காரணம் என்ன தெரியுமா? 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரத சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது புரதம். முட்டை, இறைச்சி ஆகியவற்றில் புரதம் உள்ளது, அதில் கொழுப்பும் இருக்கிறது.
ஆனால் அவை கொலஸ்ட்ராலை ரத்தத்தில் சேமித்து அபாயத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் காளானில் கொழுப்புச்சத்து இல்லை. எனவே காளானை பயமின்றி சாப்பிடலாம். இதனால்தான் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இதய வியாதி, மலச்சிக்கல், வளரும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி முதலியவற்றுக்கு காளான் உணவு சிபாரிசு செய்யப்படுகிறது.
குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் எளிதில் ஜீரணம் ஆக வேண்டும். காளானில் உள்ள மிக முக்கியமான அமிலங்கள் எளிதில் செரிமான சக்தியை தந்துவிடுகின்றன. புரத சத்து அதிகம் உள்ள காளானில் மிக முக்கியமான இரும்பு சத்தும், பல வைட்டமின்களும் உள்ளன. அதனால் மருத்துவ குணங்களும் அதிகம். வைட்டமின் 'ஏ' அதிகளவில் இருக்கிறது. காளானில் உடல் வளர்ச்சிக்கு தேவையான எட்டு வகையான அமிலோ, அமிலங்கள் உள்ளன.
காலரா, அம்மை நோய், விஷக் காய்ச்சல், மலேரியா போன்றவை குணமாக காளான் சூப் நல்ல பலன் தரும். காளானில் உள்ள ஒரு விதமான பொருள் புற்றுநோய் வைரஸ், பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மையை பெற்றுள்ளது. வயிற்றுப்புண், ஆசனப்புண் ஆகியவை குணமாக காளானை முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றுடன் சமைத்து சாப்பிடலாம்.
பிரியாணி செய்தால் காளான், முட்டை, பச்சைப் பட்டாணி ஆகிய மூன்றையும் தவறாமல் சேர்க்க வேண்டும். இது சத்தான உணவு. இது உடல் ஆரோக்கியத்துக்கும், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படும். உடல் நலத்தில் அக்கறை உள்ள அனைத்து தரப்பினரும் வாரத்தில் ஒரு முறை காளான் சூப் வைத்து சாப்பிடுவது நல்லது.
ஆரஞ்சு பழத்தை விட 4 மடங்கும், ஆப்பிள் பழத்தை விட 12 மடங்கும் முட்டைகோசைவிட2 மடங்கும் புரதச்சத்தும், மருத்துவ குணங்களும் நிரம்பியது காளான். நமது நாட்டில் எட்டு வகை காளான்கள் உள்ளன. இவற்றுள் மொட்டு காளான், சிப்பி காளான், வைக்கோல் காளான் என மூன்று வகை காளான்களை உற்பத்தி செய்து நாம் பயன்படுத்துகிறோம். இதய நோயாளிகள் வலி குறைந்து உற்சாகமாக இருக்க காளான் உணவுக்கு, முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
சிவப்பு அணுக்களை உருவாக்கும் லிச்சி!
பழங்கள் இயற்கை மனிதனுக்கு அளித்திருக்கும் கொடையாகும். உணவில்
பழங்களையும், காய்களையும் அதிகம் சேர்த்துக் கொண்டால், நோய் நம்மை விட்டு
தூர போய்விடும். அந்த அளவுக்கு அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியும், சத்தும்
நிறைந்துள்ளன. குறிப்பாக, லிச்சிப்பழத்தில் உடலுக்கு நன்மை தரும் பல முக்கிய சத்துக்கள் அடங்கி உள்ளன.
லிச்சிப்பழம் பற்றி தென் மாநில மக்களுக்கு அதிகம் தெரியாது. சீனாவை பூர்வீகமாக கொண்ட இப்பழம், வடமாநிலங்களில் அதிகம் கிடைக்கிறது. லிச்சிப்பழம் சிவப்பு நிறத்தில், கெட்டியான தோலுடன் இருக்கும். அதனுள்ளே வெள்ளை நிறத்தில், பழத்தின் சுளை முட்டை போல் இருக்கும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும் அப்பழத்தில், பல ஊட்டச்சத்துகள் உள்ளன.
லிச்சி, அதிக கலோரி கொண்ட பழமாகும். இதில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலை கட்டுப்படுத்தி, குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும். நார்ப்பொருள், 0.5 கிராமும், எலும்பு, பல் வலிமை பெற உதவும் கால்சியம், 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ், 35 மி.கி., இரும்புச்சத்து, 0.7 மி.கி., உள்ளன.
உடலில் முக்கிய உறுப்புகளாக செயல்படும், இதயத்தையும், ஈரலையும் ஆரோக்கியமாக வைக்க லிச்சிப்பழம் உதவும். லிச்சிப்பழத்தை தினமும் உண்டு வந்தால், இதயம் நல்ல ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்பாகவும் வேலை செய்யும். லிச்சியின் பழச்சாறு, ஈரலுக்கு உரம் ஊட்டும்; தாகத்தை தணிக்கும். இதில் வைட்டமின் சி, மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்களை கொண்டுள்ளதால், நோயை எதிர்க்கக் கூடிய ஆற்றலை பெற்றுள்ளது.
இது இருமல், சளி, காய்ச்சல், போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி, உடலுக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் இது சிறந்த பழம். தினமும் ஒரு லிச்சிப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த உற்பத்தி அதிகமாகும். ஏனெனில், சிவப்பணுக்கள் உருவாவதற்கு தேவையான மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம், இரும்பு மற்றும் போலேட் போன்ற அனைத்தையும் வழங்குகிறது.
வைட்டமின் சி கொண்டுள்ளதால் இரும்புச் சத்துகளை உறிஞ்சும் திறன் கொண்டு செயல்படுகிறது. தினம் ஒரு லிச்சிப்பழத்தை சாப்பிட்டு உடலை பாதுகாத்துக் கொள்வோம்...வாருங்கள்!
தொப்பையை கரைக்கும் ரஷ்யன் ட்விஸ்ட்
ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பிரச்சனை என்னவென்றால் அது தொப்பை. பெண்கள் தொப்பையை குறைக்க தினமும்
20 நிமிடம் செலவழித்தால் போதுமானது. இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது.
இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்து, தலை, மேல் உடல் மற்றும் கால் தரையில் படாதவாறு உயர்த்திக் கொள்ள வேண்டும். இரு கைகளையும் விரல்களால் கோத்துக் கொள்ள வேண்டும்.
கைகளை வலது புறமாக அசைக்கும்போது, கழுத்தை இடது புறமாகவும், கைகளை இடது புறம் அசைக்கும்போது கழுத்தை வலது புறமாகவும் திருப்ப வேண்டும். கைகள், தலையைத் தவிர, உடலின் மற்ற எந்தப் பகுதியும் அசையக் கூடாது.
தினமும் 20 நிமிடம் செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்ய சற்று கடினமாக இருக்கும். ஆனால் இந்த பயிற்சி விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது.
பலன்கள்: தொப்பை கரையும். தொடைப் பகுதியில் உள்ள தேவையற்ற சதை நீங்கும். முதுகுத்தண்டு வலுவடையும்.
இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்து, தலை, மேல் உடல் மற்றும் கால் தரையில் படாதவாறு உயர்த்திக் கொள்ள வேண்டும். இரு கைகளையும் விரல்களால் கோத்துக் கொள்ள வேண்டும்.
கைகளை வலது புறமாக அசைக்கும்போது, கழுத்தை இடது புறமாகவும், கைகளை இடது புறம் அசைக்கும்போது கழுத்தை வலது புறமாகவும் திருப்ப வேண்டும். கைகள், தலையைத் தவிர, உடலின் மற்ற எந்தப் பகுதியும் அசையக் கூடாது.
தினமும் 20 நிமிடம் செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்ய சற்று கடினமாக இருக்கும். ஆனால் இந்த பயிற்சி விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது.
பலன்கள்: தொப்பை கரையும். தொடைப் பகுதியில் உள்ள தேவையற்ற சதை நீங்கும். முதுகுத்தண்டு வலுவடையும்.
Subscribe to:
Posts (Atom)