காய்களின் ராஜாவாக கேரட்டையும், ராணியாக காளானையும் குறிப்பிடுவார்கள். காரணம் என்ன தெரியுமா? 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரத சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது புரதம். முட்டை, இறைச்சி ஆகியவற்றில் புரதம் உள்ளது, அதில் கொழுப்பும் இருக்கிறது.
ஆனால் அவை கொலஸ்ட்ராலை ரத்தத்தில் சேமித்து அபாயத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் காளானில் கொழுப்புச்சத்து இல்லை. எனவே காளானை பயமின்றி சாப்பிடலாம். இதனால்தான் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இதய வியாதி, மலச்சிக்கல், வளரும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி முதலியவற்றுக்கு காளான் உணவு சிபாரிசு செய்யப்படுகிறது.
குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் எளிதில் ஜீரணம் ஆக வேண்டும். காளானில் உள்ள மிக முக்கியமான அமிலங்கள் எளிதில் செரிமான சக்தியை தந்துவிடுகின்றன. புரத சத்து அதிகம் உள்ள காளானில் மிக முக்கியமான இரும்பு சத்தும், பல வைட்டமின்களும் உள்ளன. அதனால் மருத்துவ குணங்களும் அதிகம். வைட்டமின் 'ஏ' அதிகளவில் இருக்கிறது. காளானில் உடல் வளர்ச்சிக்கு தேவையான எட்டு வகையான அமிலோ, அமிலங்கள் உள்ளன.
காலரா, அம்மை நோய், விஷக் காய்ச்சல், மலேரியா போன்றவை குணமாக காளான் சூப் நல்ல பலன் தரும். காளானில் உள்ள ஒரு விதமான பொருள் புற்றுநோய் வைரஸ், பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மையை பெற்றுள்ளது. வயிற்றுப்புண், ஆசனப்புண் ஆகியவை குணமாக காளானை முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றுடன் சமைத்து சாப்பிடலாம்.
பிரியாணி செய்தால் காளான், முட்டை, பச்சைப் பட்டாணி ஆகிய மூன்றையும் தவறாமல் சேர்க்க வேண்டும். இது சத்தான உணவு. இது உடல் ஆரோக்கியத்துக்கும், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படும். உடல் நலத்தில் அக்கறை உள்ள அனைத்து தரப்பினரும் வாரத்தில் ஒரு முறை காளான் சூப் வைத்து சாப்பிடுவது நல்லது.
ஆரஞ்சு பழத்தை விட 4 மடங்கும், ஆப்பிள் பழத்தை விட 12 மடங்கும் முட்டைகோசைவிட2 மடங்கும் புரதச்சத்தும், மருத்துவ குணங்களும் நிரம்பியது காளான். நமது நாட்டில் எட்டு வகை காளான்கள் உள்ளன. இவற்றுள் மொட்டு காளான், சிப்பி காளான், வைக்கோல் காளான் என மூன்று வகை காளான்களை உற்பத்தி செய்து நாம் பயன்படுத்துகிறோம். இதய நோயாளிகள் வலி குறைந்து உற்சாகமாக இருக்க காளான் உணவுக்கு, முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.