Pages

Monday, July 11, 2016

காதுவலி குணமாக...


இரண்டு கிராம் பெருங்காயத்தை, 
20 மில்லி நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து, 
ஓரிரு துளிகள் காதில் விட்டால், காது வலி குணமாகும்.

இடுப்புவலி நீங்க வழிகள்


  • சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணையைவிட்டு, மீண்டும் கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளம்சூட்டுடன் இடுப்பில் நன்றாக தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
  •  வெண்டைக்காய் விதையை சிறிது பார்லி கஞ்சியில்போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். 
  • உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையை சாப்பிட்டு வந்தால், ரத்தக்குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
  • வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. காரத்தைக் குறைத்துக் சாப்பிடுங்கள். தேங்காய் துண்டுகளை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவரா? நீங்கள்



  • பொடி செய்த ஓமத்தை, பாலில் கலந்து வடிகட்டி படுக்கப் போவதற்கு முன் குழந்தைகளுக்கு கொடுத்தால், சளியை தூர விரட்டும். 
  • திராட்சையை பன்னீரில் ஊற வைத்து சாப்பிட்டால் இதயம் பலம் பெரும், தொடர்ந்து திராட்சை சாப்பிடுபவர்களுக்கு நிச்சயம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • மாதுளம் பழச்சாறு தினமும் குடித்து வந்தால், ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என, பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
  • குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால், தினமும் உணவுக்குப் பின், வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள். 
  • சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்குங்கள்,வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில், இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வர, நரம்பு தளர்ச்சி, குணமாகும், உடலும் குளிர்ச்சியடையும்.

எது அசல் தேன்?


அசல் தேன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்டுப் போகாமல் நல்ல நிலையில் அப்படியே இருக்கும். ஆனால் சிலர் சர்க்கரைப் பாகு அல்லது வெள்ளப் பாகுவை தேன் என்று விற்று விடுகின்றனர். நாமும் அதை அசல் தேன் என்று நம்பி விடுகின்றோம்.

அசல் தேன், கலப்பட தேன் எது? என்பதை எளிமையான முறையில் மூன்று வழிகளில் கண்டறியலாம்.

1) ஒரு வெள்ளைத் தாளில் ஒரு துளி தேனை விடுங்கள்.அந்த தேனை தேன் ஊற்றப்பட்ட காகிதம் உறிஞ்சாமலும், மேலும் அந்த வெள்ளைத் தாளில் பரவாமலும் இருந்தால், அது அசல் தேன் என்பதை கண்டறியலாம்.

அல்லது அந்த வெள்ளைத் தாள் ஒரு துளி தேனை உறிஞ்சிவிட்டாலோ, பரவ விட்டாலோ அந்த தேன் கலப்பட தேன் என்பதை கண்டறியலாம்.

2) ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள், அதில் ஒரு துளி தேனை விடுங்கள். அந்த ஒரு துளி தேன் தண்ணீரில் கரையாமல், நேராக கீழே சென்று விழுந்தால் அது அசல் தேன்.

ஒரு வேலை அந்த ஒரு துளி தேன் தண்ணீரோடு கலந்து விட்டால் அது கலப்பட தேன் என்பதை கண்டறியலாம்.

ஒரு தீக்குச்சியின் மருந்துப் பகுதியில், ஒரு துளி தேனை விட்டு, தீப்பெட்டியின் பக்க வாட்டில் உள்ள மருந்துப் பட்டையில் உரசுங்கள், உடனே தீப்பற்றி எறிந்தால், அது அசல் தேன் என்பதை கண்டறியலாம்.

ஒரு வேலை அந்த தீக்குச்சி எரியாமல் போனால் அது கலப்பட தேன் என்பதை கண்டறியலாம்.

நீங்க ஹார்ட் பேஷண்டா தினமும் 3 கப் டீ குடிங்க...!

டீ குடித்தால் இதய நோய் வரும் வாய்ப்பு குறைவு

ஹார்ட் பேஷண்ட்...! மனதை நெருட வைக்கும். இந்த பட்டத்தை சுமந்து வாழ பலரும் விரும்ப மாட்டார்கள். நவீன மருத்துவத்தில இதய நோய்க்கு இன்று பல தீர்வுகள் வந்து விட்டன. ஆனால் இந்த சிகிச்சை முறைகளுக்கு உட்பட்டால், கட்டாயம் மாத்திரைகளை ஆயுள் முழுக்க சாப்பிட வேண்டும். இதனால் தங்களுக்கு இதய நோய் வந்து விட்டதை போல் உணர்கின்றனர்.
ஆனால் வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வந்தாலே, இதய நோயை விரட்டிவிடலாம் என்பது தான் லேட்டஸ்ட் மருத்துவம். இதய நோய்க்கு, தொடர் சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம் என்பது மருத்துவர்கள் கூறும் அட்வைஸ். இதய நோய் வராமல் தடுக்க, நாம் தினமும் குடிக்கும் டீ உதவி செய்கிறது. என்றால் டீ குடிக்க கசக்குமா என்ன? தினமும் 3 கப் டீ குடித்தால் இதய நோய் வரும் வாய்ப்பு குறைவு என், பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனனர். டீ


டீ குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவு தடுக்கிறது. டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏற்கனவே பல ஆய்வுகள் மேகொள்ளப்பட்டிருந்தாலும், பிரிட்டனைச் சேர்ந்த உணவு முறை வல்லுநர் குழுவின் தலைவர் டாக்டர் கேரி ராக்ஸ்டன் ஆய்வு மேற்கொண்டு, டீ குடித்தால் இதய நோய்க்கான வாய்ப்பு 70 சதவீதம் குறைவு, என்பது தெரிய வந்துள்ளது. தவிர 2 கோப்பைக்கு அதிகமாக டீ குடிக்கும் நபருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு 21 சதவீதம் குறைவு.

Wednesday, July 6, 2016

கிருமிகள் தங்குமிடம்

 house cleaning
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறினால், அது கிருமிகளின் புகலிடமாக மாறலாம். அதற்கு வீட்டை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக ஒருசில இடங்களில் கவனம் செலுத்தி, நன்கு கழுவ வேண்டும். சரி, இப்போது வீட்டை கிருமிகளற்றதாக்க, செய்ய வேண்டியது என்னவென்று பார்ப்போம். வீட்டில் அழுக்குத் துணிகளை நீண்ட நேரத்திற்கு போட்டு வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறைந்தது இரு நாளைக்கு ஒரு முறையாவது துணிகளைத் துவையுங்கள். அதோடு உங்கள் வாஷிங் மெஷினையும், சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

இதை செய்ய சிறந்த வழி, உள்ளங்கையளவு பிளீச்சிங் அல்லது சுத்தம் செய்யும் பவுடரை அதில் போட்டு சில நிமிடம் ஓட விடுங்கள். இது அதில் சேர்ந்துள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றும். மற்றுமொரு பிரச்னை, அழுக்கு டவல்கள். அவற்றை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை துவைத்து, வெந்நீரில் அலசி கிருமிகளைப் போக்குங்கள்.

வீட்டில் உள்ளோர் அனைவரும், தனித்தனி டவல்களை பயன்படுத்துங்கள். வாரம் ஒருமுறை மெத்தை உறைகளை மாற்றுங்கள். மெத்தையில் அமர்ந்து உண்பதை அனுமதிக்காதீர்கள். இது, எறும்பு மற்றும் புழுக்களை ஈர்க்கும். சுத்தம் செய்யும் சானிடைசர் கொண்டு, பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் பொருட்களை சுத்தம் செய்யுங்கள். அலமாரி, கதவுக் கைப்பிடிகள் ஆகியவற்றை சுத்தம் செய்யவும் மறக்காதீர்கள். 

சிறிய வேக்யூம் கிளீனர் கொண்டு, கம்ப்யூட்டர் கீபோர்டை சுத்தம் செய்யுங்கள். சமையலறையில் பாத்திரம் கழுவும் இடமும், கிருமிகள் வளரும் இடமும் ஒரே இடமாதலால் அதை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். உங்கள் சமையலறை மேடைக்கும் இது பொருந்தும்.

யோகா தொடங்கும் முன் கவனிக்க வேண்டியவை


 * முதலில் இந்த யோகாசனப் பயிற்சிகளை செய்யும்போது சற்று தடுமாற்றமாக இருக்கும். ஆனால், தொடர்ந்து தினமும் செய்யும்போது, எளிதில் செய்யக்கூடிய அளவுக்கு உடல் வளைந்து கொடுக்கும் தன்மையைப் பெறும்.  

* குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்போ அல்லது பின்போ, யோகாசனம் செய்யலாம்.

* உணவு உண்ட பிறகு யோகாசனம் செய்யக் கூடாது.  காலை உணவு, சிற்றுண்டிக்குப் பிறகு 21/2 மணி நேரம் இடைவெளி விட வேண்டும். மதிய உணவுக்குப் பிறகு, 4 மணி நேர இடைவெளி தந்து யோகப் பயிற்சி செய்யலாம்.

* ஆசனங்களையும், உடற்பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் செய்யக் கூடாது. உடலைத் தளர்த்தும் பயிற்சிக்குப் பிறகே ஆசனங்களைத் துவங்க வேண்டும்.

* ஆசனங்களின் ஒவ்வொரு நிலையிலும் உடலைத் தளர்த்துவது மிக அவசியம். ஆசனங்களின் உச்ச நிலையிலும் எல்லா இறுக்கங்களையும் அகற்றவும். ஓர் ஆசனத்துக்கும் அடுத்த ஆசனத்துக்கும் இடையில் சில நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம்.    

* சுலபமாகக் கால்களை, கைகளை அசைப்பதற்கு வசதியாக உள்ள பருத்தி ஆடைகளை உடுத்துதல் நலம்.

* எந்த ஓர் ஆசனம் செய்த பிறகும், செய்பவர்களின் உடல் புத்துணர்ச்சியுடனும், சுகமாகவும் இருக்க வேண்டும். களைப்படைந்தோ, சக்தி இழந்தோ வியர்த்தோ போகக் கூடாது.