Pages

Monday, July 11, 2016

நீங்க ஹார்ட் பேஷண்டா தினமும் 3 கப் டீ குடிங்க...!

டீ குடித்தால் இதய நோய் வரும் வாய்ப்பு குறைவு

ஹார்ட் பேஷண்ட்...! மனதை நெருட வைக்கும். இந்த பட்டத்தை சுமந்து வாழ பலரும் விரும்ப மாட்டார்கள். நவீன மருத்துவத்தில இதய நோய்க்கு இன்று பல தீர்வுகள் வந்து விட்டன. ஆனால் இந்த சிகிச்சை முறைகளுக்கு உட்பட்டால், கட்டாயம் மாத்திரைகளை ஆயுள் முழுக்க சாப்பிட வேண்டும். இதனால் தங்களுக்கு இதய நோய் வந்து விட்டதை போல் உணர்கின்றனர்.
ஆனால் வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வந்தாலே, இதய நோயை விரட்டிவிடலாம் என்பது தான் லேட்டஸ்ட் மருத்துவம். இதய நோய்க்கு, தொடர் சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம் என்பது மருத்துவர்கள் கூறும் அட்வைஸ். இதய நோய் வராமல் தடுக்க, நாம் தினமும் குடிக்கும் டீ உதவி செய்கிறது. என்றால் டீ குடிக்க கசக்குமா என்ன? தினமும் 3 கப் டீ குடித்தால் இதய நோய் வரும் வாய்ப்பு குறைவு என், பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனனர். டீ


டீ குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவு தடுக்கிறது. டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏற்கனவே பல ஆய்வுகள் மேகொள்ளப்பட்டிருந்தாலும், பிரிட்டனைச் சேர்ந்த உணவு முறை வல்லுநர் குழுவின் தலைவர் டாக்டர் கேரி ராக்ஸ்டன் ஆய்வு மேற்கொண்டு, டீ குடித்தால் இதய நோய்க்கான வாய்ப்பு 70 சதவீதம் குறைவு, என்பது தெரிய வந்துள்ளது. தவிர 2 கோப்பைக்கு அதிகமாக டீ குடிக்கும் நபருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு 21 சதவீதம் குறைவு.

Wednesday, July 6, 2016

கிருமிகள் தங்குமிடம்

 house cleaning
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறினால், அது கிருமிகளின் புகலிடமாக மாறலாம். அதற்கு வீட்டை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக ஒருசில இடங்களில் கவனம் செலுத்தி, நன்கு கழுவ வேண்டும். சரி, இப்போது வீட்டை கிருமிகளற்றதாக்க, செய்ய வேண்டியது என்னவென்று பார்ப்போம். வீட்டில் அழுக்குத் துணிகளை நீண்ட நேரத்திற்கு போட்டு வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறைந்தது இரு நாளைக்கு ஒரு முறையாவது துணிகளைத் துவையுங்கள். அதோடு உங்கள் வாஷிங் மெஷினையும், சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

இதை செய்ய சிறந்த வழி, உள்ளங்கையளவு பிளீச்சிங் அல்லது சுத்தம் செய்யும் பவுடரை அதில் போட்டு சில நிமிடம் ஓட விடுங்கள். இது அதில் சேர்ந்துள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றும். மற்றுமொரு பிரச்னை, அழுக்கு டவல்கள். அவற்றை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை துவைத்து, வெந்நீரில் அலசி கிருமிகளைப் போக்குங்கள்.

வீட்டில் உள்ளோர் அனைவரும், தனித்தனி டவல்களை பயன்படுத்துங்கள். வாரம் ஒருமுறை மெத்தை உறைகளை மாற்றுங்கள். மெத்தையில் அமர்ந்து உண்பதை அனுமதிக்காதீர்கள். இது, எறும்பு மற்றும் புழுக்களை ஈர்க்கும். சுத்தம் செய்யும் சானிடைசர் கொண்டு, பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் பொருட்களை சுத்தம் செய்யுங்கள். அலமாரி, கதவுக் கைப்பிடிகள் ஆகியவற்றை சுத்தம் செய்யவும் மறக்காதீர்கள். 

சிறிய வேக்யூம் கிளீனர் கொண்டு, கம்ப்யூட்டர் கீபோர்டை சுத்தம் செய்யுங்கள். சமையலறையில் பாத்திரம் கழுவும் இடமும், கிருமிகள் வளரும் இடமும் ஒரே இடமாதலால் அதை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். உங்கள் சமையலறை மேடைக்கும் இது பொருந்தும்.

யோகா தொடங்கும் முன் கவனிக்க வேண்டியவை


 * முதலில் இந்த யோகாசனப் பயிற்சிகளை செய்யும்போது சற்று தடுமாற்றமாக இருக்கும். ஆனால், தொடர்ந்து தினமும் செய்யும்போது, எளிதில் செய்யக்கூடிய அளவுக்கு உடல் வளைந்து கொடுக்கும் தன்மையைப் பெறும்.  

* குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்போ அல்லது பின்போ, யோகாசனம் செய்யலாம்.

* உணவு உண்ட பிறகு யோகாசனம் செய்யக் கூடாது.  காலை உணவு, சிற்றுண்டிக்குப் பிறகு 21/2 மணி நேரம் இடைவெளி விட வேண்டும். மதிய உணவுக்குப் பிறகு, 4 மணி நேர இடைவெளி தந்து யோகப் பயிற்சி செய்யலாம்.

* ஆசனங்களையும், உடற்பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் செய்யக் கூடாது. உடலைத் தளர்த்தும் பயிற்சிக்குப் பிறகே ஆசனங்களைத் துவங்க வேண்டும்.

* ஆசனங்களின் ஒவ்வொரு நிலையிலும் உடலைத் தளர்த்துவது மிக அவசியம். ஆசனங்களின் உச்ச நிலையிலும் எல்லா இறுக்கங்களையும் அகற்றவும். ஓர் ஆசனத்துக்கும் அடுத்த ஆசனத்துக்கும் இடையில் சில நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம்.    

* சுலபமாகக் கால்களை, கைகளை அசைப்பதற்கு வசதியாக உள்ள பருத்தி ஆடைகளை உடுத்துதல் நலம்.

* எந்த ஓர் ஆசனம் செய்த பிறகும், செய்பவர்களின் உடல் புத்துணர்ச்சியுடனும், சுகமாகவும் இருக்க வேண்டும். களைப்படைந்தோ, சக்தி இழந்தோ வியர்த்தோ போகக் கூடாது.

முகத்தை ஜொலிக்க செய்யும் மாஸ்க்



• ஒரு தேக்கரண்டி வெள்ளிக்காய் விழுது, ஒரு தேக்கரண்டி கடலை மாவில் தயிர், சிறிதளவு தேன் மற்றும் பன்னீரை கலந்து முகத்தில் தடவி வந்தால், சருமத்தின் இறுக்கம் குறைந்து இலகுவாகி சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

• நன்குக் காய்ச்சியப் பாலில் இருந்து எடுக்கப்பட்ட பாலாடையை இரவு தூங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு மாஸ்க் போல முகத்தில் உபயோகப்படுத்தி பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பிரகாசிக்கும்.

• தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் முல்தானி மெட்டியை பன்னீரில் கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின் குளிர்ந்த நாளில் முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் படிப்படியாக குறைந்துவிடும்.

நாடி சுத்தி விளக்கம்

நமது சுவாசத்தை நெறிப்படுத்தி, நமக்கு நிறைந்த உயிர் கொடுத்து நமது பிராணனாகிய உயிரை உயர்த்தி வளப்படுத்துவதற்க்கு, நமது மூச்சுக் காற்றோடு தொடர்புடைய உள் இழுக்கும் மற்றும் வெளியே தள்ளும் இயக்கங்களை மேம்படுத்தி வைப்பதற்காக மனிதர் யாருக்கும் எவருக்கும் ஏற்றவகையில் சில வகையான மூச்சுப்பயிற்சி முறைகளை நமது சித்தர் பெருமக்கள் கண்டறிந்து போதித்தனர்.

இவை 1. நாடிசுத்தி 2. ஜீவசுத்தி 3. பிராணசுத்தி 4. பந்தனசுத்தி 5. கண்டசுத்தி 6. சோஹம்சுத்தி என்பனவாகும்.

இவை அனைத்தும் உள்ளிளுக்கும் இயக்கம், வெளித்தள்ளும் இயக்கம் ஆகிய இருவகை இயக்கங்களை மேம்படுத்துபவை ஆகும். என்பதை நாம் உணரவேண்டும். இந்த ஆறுவகை மூச்சுப் பயிற்சிகளும், பிராணாயாமம் என்ற அதி உன்னதமான உயிர்க்கலைக்கு அடிப்படைப் பயிற்சிகளாகும்.

நாடிசுத்தி செய்யும் முறை:-

பத்மாசனத்தில் அமரவேண்டும். பத்மாசனம் சரியாக வராதவர்கள் வஜ்ராசனத்தில் அமரலாம். இடது பக்க நாசித்துளையை இடதுகைக் 
கட்டைவிரலால் மூடிக்கொண்டு, வலதுபக்க நாசித்துளை வழியே முதலில் உள்ளேயிருக்கின்ற காற்றை (கொஞ்சமாக இருந்தாலும்) சுத்தமாக வெளியேற்ற வெண்டும்.

வலது நாசித்துளை வழியே காற்றை வேகமாகவும் இல்லாமல், ரொம்ப மெதுவாகவும் இல்லாமல் ஒரு நிதானமான கதியில் காற்றை உள்ளே இழுக்கவேண்டும்.

நுரையீரல் காற்றால் நிறைந்ததும் இடதுகை நடுவிரலாலோ அல்லது ஆள்காட்டி விரலாலோ வலதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு, இடதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வேண்டும்.

இப்போது இடதுபக்க நாசித்துளை வழியே காற்றை நுரையீரல் நிரம்புமளவுக்கு இழுத்துக்கொண்டு, இடதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு வலதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வெண்டும்.

இது ஒருசுற்று நாடிசுத்தி ஆகும். இவ்வாறு குறைந்தது பத்துச் சுற்றுக்கள் முதல் இருபது சுற்றுக்கள் வரை செய்யலாம். பயிற்சியாளர் விரும்பினால் மேலும் பத்துச் சுற்றுக்கள் கூடுதலாகவும் செய்யலாம்.

திராட்சையால் தீராத நோய் எதுவும் இல்லை!



grapesதிராட்சை பழத்திலும், அதன் விதையிலும் உடலுக்கு பயன் தரும் பல நல்ல சத்துக்கள் உள்ளன. எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகம் உண்டு. சரியாக பசி இல்லாமல், வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள், கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரை டம்ளர் சாறு எடுத்து, அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தினால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு, திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதம். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு, கருப்பு திராட்சை சாறு நல்லது. அரை டம்ளர் சாறில், சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றை, தொடர்ந்து, 21 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்.

இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற, முதலில் வயிற்று புண்ணை ஆற்ற வேண்டும். எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு, கொதிக்க வைத்து, பின் ஆற வைத்து தொடர்ந்து காலை, மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தால் இருமல் நின்று விடும். தலைவலி இருப்பவர்கள் சூடான காபியில், அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது.

தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக பிளந்து, ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்து விட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும். எலுமிச்சம்பழத்தை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலச்சிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவுகள் வராது.

திராட்சை விதை சாற்றை, இயற்கை உணவு என ஜப்பான் அங்கீகரித்துள்ளது. உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின் -இ பாதுகாப்பில், மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்தை விட, திராட்சை விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது. ரத்தக் கொதிப்பு நோய்க்கு, அருமருந்தாக பயன்படுகிறது. ரத்தக் குழாய் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை திராட்சை பழவிதை குறைக்கிறது. ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப்படுத்துகிறது.

ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டிராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது. சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்ய பயன்படுகிறது. மாலைக்கண் நோய் நீக்கி, கண்களில் ஒளியைத்தருகிறது. பெண்களின் மார்பக புற்றுநோய், கருப்பை கோளாறுகளிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது. நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.

கத்தரிக்காய் வதக்கல்

 கத்தரிக்காய் வதக்கல்
தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 200 கிராம்
சிறிய கத்தரிக்காய் - 250 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகு தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
ப. மிளகாய்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
எலுமிச்சை சாறு
 
செய்முறை :

* கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது போட்டு  வதக்கவும்.

* அடுத்து கத்தரிக்காய், தேவையான அளவு உப்பு போட்டு காய் நன்கு வேகும் வரை வதக்கி மிளகாய்தூள், மஞ்சள் தூள், தனியா தூள், மிளகு தூள், ப. மிளகாய், கொத்தமல்லி இலை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து எலுமிச்சை சாறு பிழிந்து சிறிது நேரம் கிளறவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.