Pages

Wednesday, April 27, 2016

வாசனைத் திரவியங்கள்


 
வாசனைத் திரவியங்கள்
சில வாசனைத் திரவியங்கள் அதிக வாசனை
கொண்டவையாக உள்ளன. பலருக்கு அந்த வாசனை பிடிக்காமல் தலை சுற்றல், தலைவலி போன்றவை இருக்கும். அப்படியான வாசனைத் திரவியங்களை தவிர்த்து எல்லோரும் விரும்பத்தக்க வாசனை திரவியங்களை உபயோகித்தல் நல்லது.

பழங்காலத்தில் இருந்தே உலகமெங்கும் வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தபட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதன்முதலில் வாசனைத் திரவியங்களை பயன்படுத்திய பெருமை எகிப்தையே சேரும். ஒரு காலத்தில் அரசர்கள், பெரும் மதிப்புக்கு உரியவர்கள் மட்டுமே வாசனைத் திரவியங்களை உபயோகித்து வந்தனர்.

பொது வைபவங்கள், விழாக்களுக்கு செல்லும்போது மட்டுந்தான் வாசனைத் திரவியங்களை பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை எதுவும் கிடையாது. இன்னார்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை. சிலர் எளிதில் தூங்குவதற்காக இரவில் தூங்குவதற்கு முன் மென்மையான வாசனை வீசும் திரவியங்களை பூசிக் கொள்வர்.

பொதுவாக வாசனைத் திரவியங்கள் ஒருவித வசீகரமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன. இதனால் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் சந்தோஷமாக வெளியில் சுற்ற முடிகிறது. பலர் இருக்கக்கூடிய இடத்தில் உங்களை தனித்தன்மை வாய்ந்தவராகக் காட்டுகிறது. தன்னம்பிக்கையுடன் செயல்பட முடிகிறது.

வெயில் காலத்தில் லேசான வாசனைத் திரவியங்களையும், குளிர்காலங்களில் அதிக வாசனை தரக்கூடிய திரவியங்களையும் பயன்படுத்த வேண்டும். இயற்கையான நறுமணப் பொருட்களில் மட்டுமின்றி, கெமிக்கல்ஸ், ஆயில், ஆல்கஹால் போன்றவற்றில் இருந்தும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.

உடலில் பூசிக்கொள்பவை, உடையில் பூசிக்கொள்பவை என இரண்டு விதமான வாசனைத் திரவியங்கள் உள்ளன. அதில் உங்களுக்கு எது உகந்ததோ அதைத் தேர்ந்தெடுப்பது நல்லது. உடலில் பூசும் வகையிலான வாசனைத் திரவியங்களை பயன்படுத்தும்போது அலர்ஜியை ஏற்படுத்தாத வாசனைத் திரவியங்களாக பார்த்து பயன்படுத்த வேண்டும்.

மல்லிகையில் இருந்து தயாரிக்கும் வாசனை திரவியம் மல்லிகையின் மணம் கொண்டதாக அமையும். விதவிதமான வாசனைகளில், நிறங்களில் வாசனைத் திரவியங்கள் கிடைக்கின்றன. ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தனித்தனி வாசனைத் திரவியங்கள் உள்ளன. அதேபோல் பாரம்பரிய முறை, நவீன முறை என இரண்டு விதமான முறைகளில் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.

கூடுதலாக இளவயது ஆண், பெண் இருவருமே தங்களது எதிர்பாலினர்களைக் கவருவதற்காக வாசனைத் திரவியங்களை பயன்படுத்துகின்றனர். வாசனைத் திரவியங்களை வாங்கும் முன், மணிக்கட்டின் மீது சிறிதளவு தெளித்துப் பாருங்கள். சிறிது நேரம் கழித்து அலர்ஜி எதுவும் ஏற்படவில்லையென்றால், அதை வாங்கலாம்.

அலர்ஜி ஏற்படும் பட்சத்தில் வேறொன்றை பரிசோதிப்பது நல்லது. வாசனைத் திரவியங்களை பயன்படுத்தும் போது தலை முடிகளில் படாதவாறு பயன்படுத்த வேண்டும். சிறிதளவு தெளிக்க வேண்டுமே தவிர அதிகம் தெளிக்கக் கூடாது. வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நாடுகளில் பிரபலமானது, பிரான்ஸ் தான்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இதயநோய் வருவது ஏன்?

சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் டாக்டர்கள். அது என்ன? இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையில் உள்ளது கணையம் (பன்ச்ரியஸ்). இந்த உறுப்பு தான், இன்சுலின் என்ற ஹார்மோனை சுரக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது இந்த இன்சுலின் தான். ஒரு வேலை, இன்சுலின் சுரப்பது குறைந்து போனாலோ அல்லது நின்று போனாலோ, சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்கிறார்கள். மருத்துவ ஆராய்ச்சியளர்கள் சர்க்கரை நோய்க்கும், இதயம் தொடர்பான நோய்க்கும் (cardiovascular disease CVD) உள்ள நெருக்கம் பற்றி புதிது புதிதாக ஆராய்ந்து வருகிறார்கள். பொதுவாக, ரத்தத்திற்கு வெளியே இன்சுலின் குளுகோசாக மாறிய பின்னர் தான் ரத்த செல்களுக்குள் செல்லும்.


ஆனால் குளுகோசின் அளவு கூடினால், ரத்த ஓட்டத்தில் உள்ள இன்சுலினை பண்படுத்த முடியாமல், உடலானது பம்ப் பண்ணுவதால், சர்க்கரை நோய் அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால்தான் இதய நோய் (CVD) போன்ற நோய்கள் வருகின்றன. இன்சுலின் அளவும் ரத்தத்தின் சர்க்கரையின் அளவும் அநியாயத்திற்கு உயரும் போது ரத்த நாளங்களில் கொழுப்புகள் அதிகப்படியாக படிவதாலும், இதய நோய் வரலாம் என்கிறார்கள.

மருத்துவ ஆய்வாளர்களின் ஆய்வுப்படி, நடுத்தர வயதுடையவர்களில் அதிக எடைள்ள வர்களுக்குத்தான் (over வெயிட்) இன்சுலின் சுரப்பதி தடையும், ரத்தத்தில் அதிகளவு குளுக்கோசும் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களுக்குதான் ஆரோகியம்ற்ற கொலஸ்ட்ராலும் (unhealthy  cholesterol)


  உயர் ரத்த அழுத்தப் பிரச்சனையும் இருக்கும். இதனால்தான் சர்க்கரை நோய், இதய நோய், இதயத்தாக்கம் போன்றவறிற்ககான நோய் அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

கிழே உள்ள  சில வழிமுறைகள், உடலில் இன்சுலின் சுரப்பதில் பிரச்னை இருந்தாலோ, மற்ற நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அவற்றை எதிர்த்து போராடி சரி செய்ய உதவும். அதிக எடை உள்ளவர்களுக்கும் உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் உடலில் உள்ள உள்ளுறுப்புகளைச் சுற்றிலும் கொழுப்பு மறைந்திருக்கும். இதனைக் கட்டுப் படுத்த உடற்பயிற்சி மிகமிக உயர்ந்தவழி.

முறையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எட்டு மாதத்திற்கு பிறகு 8 சதா வீதம் கொழுப்பு கரைந்து விட்டதாகவும், அடி வயிற்றில் உள்ள கொழுப்பு குலைந்து தொப்பையின் அளவு குறைந்ததையும் கண்டுப்பிடிதர்கள். ஒரு வேளைக்கு 30 நிமிடம் என்று வாரத்திற்கு ஐந்து நாட்கள் நடப்பவர்கள், ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை உடல் எடையை குறைக்க முடியும். 58 சதவீதம் சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க முடியும். ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி மிகமிக அவசியம். அதிகம் டைப்2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு நான்கு மணி நேரம் சுறுசுறுப்பாக நடந்தால், மற்றவர்களை விட இதய நோய் அபாயம் மிகமிகக் குறைவு.

வாய் நாற்றமா? தீர்வு இருக்கு

காலையில் கண் விழித்ததும் நாம் ஒவ்வொருவரும் செய்ய நினைப்பது பல் துலக்குதலே. பல் துலக்குதல் வாயின் சுகாதாரத்தை பாதுகாப்பது மட்டுமில்லாமல், பற்சிதைவையும், ஈறுகளில் உண்டாகும் நோய்களையும், வாய் நாற்றத்தையும் தவிர்க்கும்.

பல் துலக்குவதன் நோக்கம்: 

பல் துலக்குவது வாயிலும், பற்களிலும் உள்ள அழுக்கை நீக்கத்தான். பல் ஈறுகளில் இருந்து நீக்கப்படாத உணவுத் துகளும், கிருமிக் கூட்டங்கலும் சேர்ந்த கலவையே இந்த அழுக்கு. பல் துலக்கி இரண்டு அல்லது மூன்று மணிகளுக்குள்ளேயே இந்த அழுக்கு படியத் துவங்கும். இவை பற்களுக்கு மட்டுமில்லாமல், பல் ஈறுகளுக்கும் பாதிப்பை உண்டாக்குவதோடு பல் இழப்பிற்கும் காரணமாகிறது. எனவே தினமும் இருமுறை பல் துலக்குதலும், உணவு உண்டவுடன் வாய் கொப்பளிப்பதும் இன்றியமையாத ஒன்று. இதற்கு தண்ணீரையோ, கொப்பளிக்கும் திரவத்தையோ பயன்படுத்தலாம்.

பல் துலக்கும் முறை:

பல் துலக்குவதற்கான நிலை, வாய், தாடையில் பற்கள் அமைந்துள்ளதை பொருத்து மாறுபடும்.

பெரியவர்கள்:

பல் துலக்கியின் குச்சுகள் 45 டிகிரி கோணத்தில் ஈறுகளின் மேல் சாய்த்துப் பிடித்து, ஒவ்வொரு முறையும் மூன்று பற்களின் மேல், முன்னும், பின்னும் நகர்த்தி சிறிது அதிர்வுடன் கூடிய சுழற்றும் முறையிலும் தேய்க்க வேண்டும். இம்முறையை கடைவாய் பல் துவங்கி முன் பற்கள் வரை மூன்று மூன்று பற்களாக முன்னேற வேண்டும். மேல் தாடையின், வலது, இடது, உள், வெளி பக்கங்களிலும் அதே போல், கீழ் தாடையிலும் இடது, வலது, உள், வெளி பக்கங்களிலும் தேய்க்க வேண்டும்.

இந்த சுழற்சியினை சுமார், 15 முதல் 20 முறைகள் ஒவ்வோர் இடத்திலும் தேய்க்க வேண்டும். முன் பற்களுக்கு மட்டும் பல் துலக்கியை செங்குத்தாக 45 டிகிரி கோணத்தில் பிடித்து மேலும், கீழும் நகர்த்தி, உள்ளும், வெளியும் தேய்த்து விட வேண்டும். கடைவாய் பகுதியில் மெல்லும் மற்றும் கடிக்கும் பகுதியில் பல் துலக்கியின் குச்சுகளை நன்றாக அழுத்திப் பிடித்து தேய்க்க வேண்டும். பற்களைத்தான் செம்மையாக தேய்த்து முடித்தாயிற்றே என்று, முடித்து விடாமல் மறவாமல் நமது நாக்கின் புற பகுதியில் பல் துலக்கியால் முன்னும், பின்னும் அசைத்து நகர்த்தி தேய்த்தால், வாய் துர்நாற்றம் வீசக் காரணமான கிருமிகளை அகற்றி விட முடியும்.

சிறியவர்:

சிறார்களை பல் முற்றும் ஈறுகளில், பல் துலக்கியின் குச்சுகளால் வட்ட வடிவில் சுழற்சி முறையில் தேய்க்க அறிவுறுத்த வேண்டும். பச்சிளம் பல் முளைக்காத பாலகர்களுக்கும், பக்குவமாக ஈறுகளை விரல்களால் தேய்த்து விடுவது மிகவும் சிறந்தது. 

பிரஷ் முக்கியம்:

முருதுவான, கூர் முனை இல்லாத, வட்ட வழுவழுப்பான முனைகள் கொண்ட நைலான் குச்சுகளுடன் கூடிய, பல் துலக்கியால் பல் துலக்குவது நல்லது. கூர்முனை குச்சுகளை தவிர்ப்பது நல்லது. கடினமான, மற்றும் விரைப்பான குச்சுகை கொண்ட பல் துலக்கிகள் பல்லின் எனாமல் மற்றும் ஈறுகளை சேதபடுத்திவிடும்.

Tuesday, April 5, 2016

மழைக்காலத்தில் நுரையீரல் பத்திரம்


நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய்கள் ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டையும் பாதிக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பாதிப்பும் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க, நுரையீரலை பாதுக்காப்பது மிக மிக முக்கியம். நம் சுவாசத்தை சீராக வைத்திருக்கும் நுரையீரலில், நோய் தாக்காமல் இருக்க, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.


நுரையீரல் பாதிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, நிமோனியா, காசநோய், ஆஸ்துமா, உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் ஏற்படுகிறது. இத்துடன் பஞ்சு, குவாரி, சிமிண்ட் உள்ளிட்ட தொழில் பணிபுரிவோருக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் தாக்குகின்றன.

நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகள்

இருமல், சளி, மூச்சு திணறல், நெஞ்சு வலி, இருமலுடன் ரத்தம் வருதல், இளைப்பு போன்றவை நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகளாகும். இரண்டு வாரம் தொடர்ந்து இருமல் இருந்தால் காசநோய் அல்லது ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறான நிலையில், மருத்துவரை அணுகி சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எவ்வித நோய் தாக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை தொடர வேண்டும்.

பனிகாலத்தில் வறண்ட காற்றை சுவாசிக்கும் போது நுரையீரல் பாதிக்கப்படும் என்பதால், இக்காலங்களில் வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. பஞ்சு, சிமென்ட் உள்ளிட்ட தூசி நிறைந்த இடங்களில் பணியாற்றும் போது, முகத்துக்கு, 'மாஸ்க்' அணிந்து  கொள்ள வேண்டும்.

சிகிச்சை முறைகள்
நுரையீரல் பாதிப்புக்கு, இரண்டு முறைகளில் சிகிச்சை அளிக்க அளிக்கப்படுகிறது. பரிசோதனையில், நுரையீரலில் பாதிப்பு ஏற்ப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் ரிலீவர் மருந்தும், பாதிப்பு முற்றிய நிலையில் இருந்தால் "கண்ட்ரோலர் " மருந்தும் அளிக்கப்படுகின்றன. இந்த மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரைப்படி பயன்படுத்த வேண்டும். பரிசோதிக்கும் மருத்துவருக்குத்தான் நோயின் தன்மை மற்றும் அதன் தாக்கத்தின் அளவு தெரியம்.

உங்களுக்கு ஏற்ற காலணிகள்

நகை, உடைகள் வாங்குவதை போல செருப்புவாங்கும் போதும், அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. இதுகால்களை அழகாக்குவதுடன் பாதங்களின் மென்மை தன்மையை அதிகரிக்கிறது. கால மாற்றத்திற்கு தகுந்தபடி செருப்பு அணிவதால், நோய் பாதிப்பில் இருந்தும் தப்பிக்கலாம் என தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

செருப்பு வாங்க கடைகளுக்கு செல்லும் போது, டிசைன்களை, குறி வைத்து தேடுவதை விட அளவு பொருத்தமாக இருக்கும் படியும் பார்த்துக் கொள்ளவேண்டும். செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து நான்கைந்து அடி நடந்து பார்த்துதான் வாங்க வேண்டும். அதிக இறுக்கமான செருப்புகளை அணிய கூடாது.

விலை குறைந்த செருப்புகளை விட, விலைகுறைவான பாதங்களுக்கு ஏற்ற செருப்புகளையே வாங்க வேண்டும். தோல் செருப்புகளை தண்ணீரில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நனைந்தால் செருப்பின் ஆயுளும் குறையும். கால்களுக்கு பொருத்தமானதாகவும் இல்லாம அழகு கெட்டுவிடும்.

செருப்பு தரையில் வழுக்காமல், கிரிப் உள்ளபடி, அழுத்தம் இல்லாமலும், அதிக கணம் இல்லாமலும், மிருதுவாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் ரப்பர் செருப்புகளை அணியக் கூடது. ஏனெனில் அது வழுக்குவதுடன், துணிகளில் சேற்றை வாரி இறைத்துவிடும்.

வயதான பெண்களும், வாத நோய் உள்ளவர்களும் குளிரான இடங்களிலும், ஈரத்தன்மை உள்ள இடங்களிலும், செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது. பொதுவாக பெண்களின் பாதங்கள் மிருதுவானது என்பதால், இறுக்கமான செருப்புகளையோ, ஷுக்களையும் அணியக் கூடாது. அப்படி அணிந்தால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.

பிளாஸ்டிக் செருப்புகளைவிட, தோல் செருப்புகளும், ஷுக்கலுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் போன்றோருக்கு, உடலில் அதிக உஷ்ணம் ஏறி, சோர்வு அடைவதோடு, அதிக வியர்வை வெளியேறி, கண் எரிச்சல் ஏற்படும். எனவே பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்ப்பது நல்லது.

எவ்வளவு அவசரமாக இருந்தாலும், செருப்புகளையும், ஷுக்களையும் துடைத்து, உள்ளே ஏதாவது இருக்கிறதா என பார்த்து அணிய வேண்டும். செருப்பு மற்றும் ஷுக்களை அடிக்கடி பாலிஷ் செய்ய வேண்டும். இதனால் செருப்புகளுக்கு அழகும், ஆயுளும் கிடைக்கும். பாலிஷ் செய்யும் போது செருப்பில் இருக்கும் ஈரத்தன்மையும் நீங்கி விடும்.

உடல் குண்டானவர்கள் மெலிய வேண்டும்

 உடல் குண்டானவர்கள் மெலிய வேண்டும் என்பதற்காக, உணவை வெறுத்து பட்டினி கிடக்கக் கூடாது.

  * உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க, உணவின் அளவைக் குறைக்க வேண்டும்.

* நன்கு வியர்க்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

  சாப்பிட்டவுடன் ஒரு போதும் தூங்கக் கூடாது. சாப்பிட்டு முடிந்த பின், இரண்டு மணி நேரம் கழித்தே     படுக்கச் செல்ல வேண்டும்.


* குண்டானவர்கள், பால் சாப்பிடுவதை தவிர்த்து, ஆடை நீக்கிய பால், சூப், போன்றவற்றை பருகலாம்.

* எண்ணெயில் வறுத்து, பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது.

நண்பர்களிடம் பேசிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, "டிவி' பார்த்துக் கொண்டோ உணவுப் பொருட்களை கொறிப்பதை, அறவே தவிர்க்க வேண்டும்.

* கூல்டிரிங்ஸ், காபி, டீ போன்றவற்றை அடிக்கடி குடிப்பதை தவிர்த்து, இளநீர், பழச்சாறு பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

செம்பட்டை முடியை கருமையாக்க!


*வறட்சியான, செம்பட்டை முடியை உடையவர்கள், ஆமணக்கு  எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* தலையில் தினமும் தேங்காய்ப் பால் தடவி குளித்து வந்தால், நாளடைவில் செம்பட்டை சரியாகும்.

* நிலா ஆவாரை, மரிக்கொழுந்து இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, குளித்து வந்தால் செம்பட்டை முடி மாறி கூந்தல் கருமை ஆகும்.

* தலைக்கு குளிப்பதற்கு, ஒரு மணி நேரத்திற்கு முன், ஆமணக்கு எண்ணெய் தடவி குளித்தாலும் செம்பட்டை முடி மாறும்.

* ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.