நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய்கள் ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டையும் பாதிக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பாதிப்பும் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க, நுரையீரலை பாதுக்காப்பது மிக மிக முக்கியம். நம் சுவாசத்தை சீராக வைத்திருக்கும் நுரையீரலில், நோய் தாக்காமல் இருக்க, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.
நுரையீரல் பாதிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, நிமோனியா, காசநோய், ஆஸ்துமா, உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் ஏற்படுகிறது. இத்துடன் பஞ்சு, குவாரி, சிமிண்ட் உள்ளிட்ட தொழில் பணிபுரிவோருக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் தாக்குகின்றன.
நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகள்
இருமல், சளி, மூச்சு திணறல், நெஞ்சு வலி, இருமலுடன் ரத்தம் வருதல், இளைப்பு போன்றவை நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகளாகும். இரண்டு வாரம் தொடர்ந்து இருமல் இருந்தால் காசநோய் அல்லது ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறான நிலையில், மருத்துவரை அணுகி சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எவ்வித நோய் தாக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை தொடர வேண்டும்.
பனிகாலத்தில் வறண்ட காற்றை சுவாசிக்கும் போது நுரையீரல் பாதிக்கப்படும் என்பதால், இக்காலங்களில் வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. பஞ்சு, சிமென்ட் உள்ளிட்ட தூசி நிறைந்த இடங்களில் பணியாற்றும் போது, முகத்துக்கு, 'மாஸ்க்' அணிந்து கொள்ள வேண்டும்.
சிகிச்சை முறைகள்
நுரையீரல் பாதிப்புக்கு, இரண்டு முறைகளில் சிகிச்சை அளிக்க அளிக்கப்படுகிறது. பரிசோதனையில், நுரையீரலில் பாதிப்பு ஏற்ப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் ரிலீவர் மருந்தும், பாதிப்பு முற்றிய நிலையில் இருந்தால் "கண்ட்ரோலர் " மருந்தும் அளிக்கப்படுகின்றன. இந்த மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரைப்படி பயன்படுத்த வேண்டும். பரிசோதிக்கும் மருத்துவருக்குத்தான் நோயின் தன்மை மற்றும் அதன் தாக்கத்தின் அளவு தெரியம்.