Pages

Tuesday, April 5, 2016

உங்களுக்கு ஏற்ற காலணிகள்

நகை, உடைகள் வாங்குவதை போல செருப்புவாங்கும் போதும், அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. இதுகால்களை அழகாக்குவதுடன் பாதங்களின் மென்மை தன்மையை அதிகரிக்கிறது. கால மாற்றத்திற்கு தகுந்தபடி செருப்பு அணிவதால், நோய் பாதிப்பில் இருந்தும் தப்பிக்கலாம் என தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

செருப்பு வாங்க கடைகளுக்கு செல்லும் போது, டிசைன்களை, குறி வைத்து தேடுவதை விட அளவு பொருத்தமாக இருக்கும் படியும் பார்த்துக் கொள்ளவேண்டும். செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து நான்கைந்து அடி நடந்து பார்த்துதான் வாங்க வேண்டும். அதிக இறுக்கமான செருப்புகளை அணிய கூடாது.

விலை குறைந்த செருப்புகளை விட, விலைகுறைவான பாதங்களுக்கு ஏற்ற செருப்புகளையே வாங்க வேண்டும். தோல் செருப்புகளை தண்ணீரில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நனைந்தால் செருப்பின் ஆயுளும் குறையும். கால்களுக்கு பொருத்தமானதாகவும் இல்லாம அழகு கெட்டுவிடும்.

செருப்பு தரையில் வழுக்காமல், கிரிப் உள்ளபடி, அழுத்தம் இல்லாமலும், அதிக கணம் இல்லாமலும், மிருதுவாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் ரப்பர் செருப்புகளை அணியக் கூடது. ஏனெனில் அது வழுக்குவதுடன், துணிகளில் சேற்றை வாரி இறைத்துவிடும்.

வயதான பெண்களும், வாத நோய் உள்ளவர்களும் குளிரான இடங்களிலும், ஈரத்தன்மை உள்ள இடங்களிலும், செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது. பொதுவாக பெண்களின் பாதங்கள் மிருதுவானது என்பதால், இறுக்கமான செருப்புகளையோ, ஷுக்களையும் அணியக் கூடாது. அப்படி அணிந்தால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.

பிளாஸ்டிக் செருப்புகளைவிட, தோல் செருப்புகளும், ஷுக்கலுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் போன்றோருக்கு, உடலில் அதிக உஷ்ணம் ஏறி, சோர்வு அடைவதோடு, அதிக வியர்வை வெளியேறி, கண் எரிச்சல் ஏற்படும். எனவே பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்ப்பது நல்லது.

எவ்வளவு அவசரமாக இருந்தாலும், செருப்புகளையும், ஷுக்களையும் துடைத்து, உள்ளே ஏதாவது இருக்கிறதா என பார்த்து அணிய வேண்டும். செருப்பு மற்றும் ஷுக்களை அடிக்கடி பாலிஷ் செய்ய வேண்டும். இதனால் செருப்புகளுக்கு அழகும், ஆயுளும் கிடைக்கும். பாலிஷ் செய்யும் போது செருப்பில் இருக்கும் ஈரத்தன்மையும் நீங்கி விடும்.

No comments: