Pages

Saturday, March 19, 2016

வெந்தயத்தின் பயனை பற்றி பார்ப்போமா?

வெந்தயம்நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும பொருட்களை நன்றாக சுத்தபடுத்தி பயன்படுத்தினாலே நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். அதில் இப்பொழுது வெந்தயத்தின் பயனை பற்றி பார்ப்போமா?

வெந்தயம் உடல் சூட்டை தணிக்கவல்லது. ஆனால் நாம் அதை பயன்படுத்துவது மிகவும் குறைவுதான். வெந்தயத்தை நீரில் ஊற வைத்து வெயிலில் உலர்த்தினால் சுத்தமாகிவிடும். இந்த வெந்தயத்தை வாயில் போட்டு நீர் அல்லது மோரை குடித்தல் உடல் சூடு தணியும். பேதி, வயிறு உப்புசம், வயிற்றுப் பொருமல் இருந்தாலும் உடனே குணமாகும். தினமும் கொஞ்சம் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் அஜீரணக்கோளாறு, வயிற்றுப்புண் குணமாகும்.


கொஞ்சம் வெந்தயத்தை எடுத்து ஊற வைத்து அரைத்து தேன் கலந்து சாப்பிட்டுவர தாய்ப்பால் நன்றாக சுரக்கும். வெந்தயம் மற்றும் சீரகத்தை வறுத்து அரைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை இருவேளையும் அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயின் தாக்கம் குறைந்து நல்ல பலன் கிடைக்கும்.

அடிக்கடி வயிறு வலி, வயிற்றில் புண் இருந்தால் இளநீரில் ஓட்டை போட்டு அதில் சிறிது வெந்தயத்தை போட்டு அதை அப்படியே மூடி இரவு  முழுவதும் வைத்து காலையில் அந்த வெந்தயத்தை சாப்பிட்டு இளநீரையும் குடித்து வந்தால் பிரச்சனை தீரும்.
வெந்தயம் உடல் சூட்டை தணிக்கவல்லது. ஆனால் நாம் அதை 
வெந்தயம் சாப்பிட பிடிக்கலைனா வெந்தய தோசையாகவோ, களி செய்தும் சாப்பிடலாம். வெந்தயத்தில் குழம்பு வைத்தும் சாப்பிடலாம். இதனாலும் பலன் கிடைக்கும்.

தலை சீவும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை

தலை சீவும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை

தலைக்கு குளித்தவுடன் கூந்தலை சீவ வேண்டாம். ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவினால் முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சீப்பை கொண்டு சீவினால் முடியானது கொத்தாக வேரோடு வரும்.  

கூந்தலை சீவும் போது மண்டை ஓட்டில் நன்கு பதியும்படி நன்கு சீவ வேண்டும். கூந்தலும், தலைச்சருமமும் ஒன்றல்ல. ஆகவே கூந்தலை சீவும் போது தலைச்சருமத்தில் நன்குபடும்படி சீவினால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க்கால் நன்கு வளரும். இவ்வாறு தினமும் செய்தால் கூந்தலானது நன்கு ஆரோக்கியமாக வளரும். 


கூந்தலை முதலில் சீவ ஆரம்பிக்கும் போது கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் கூந்தலில் முடிச்சுகளானது முனையிலேயே அதிகமாக இருக்கும். ஆகவே அப்போது முதலில் இந்த முடிச்சுகளை அகற்றிப் பின் ஆரம்பித்தால் கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லையென்றால் கூந்தல் வேரோடு தான் வரும். 



மேலும் கூந்தலை இறுக்கமாக கட்டக்கூடாது. நிறையபேர் இந்த மாதிரியே கூந்தலை கட்டுகின்றனர். கூந்தலை போனி டைல் போடக்கூடாது. அப்படி போட்டால் முடியானது இடையில் கட் ஆகி உதிரும். தினமும் இரவில் படுக்க போகும் முன்னால் எண்ணெய் தோய்த்து கூந்தலை நன்றாக வாரி சடை போட்டு கொள்ள வேண்டும். சீப்பு தலையில் நன்றாக பதியும் படி தலையை வார வேண்டும். 

சேர்கோசைஸ் உடற்பயிற்சி


சேர்கோசைஸ் உடற்பயிற்சி


இப்போது பெரும்பாலானோருக்கு அலுவலகத்தில் நாற்காலியில் அமர்ந்து பார்க்கிற வேலைதான் அதிகம். 'எப்படா ஓய்வு கிடைக்கும், கொஞ்ச நேரம் உட்காரலாம்’ என்று ஏங்கிக்கிடந்த காலம் மாறி இன்றோ, எழுந்து நடக்கக்கூட இடம் அளிக்காத வகையில் வேலை. நீண்ட நேரம் அமர்ந்தபடி வேலை பார்ப்பவர்களுக்கு, மூட்டுகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். 


இதை ஆர்.எஸ்.ஐ (Repetitive strain injury) என்கிறோம். உடற்பயிற்சி செய்தால் மட்டுமே அதைத் தவிர்க்கலாம்' என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். 'உட்கார்ந்த இடத்தில் இருந்தே பயிற்சி மேற்கொள்ளும் சேர்கோசைஸ் முறை, வெளிநாடுகளில் மிகவும் பிரபலம். ஒரே நிலையில் அமர்ந்து இருப்பதால் ஏற்படும் பாதிப்பு சம்பந்தமாகவும், அதைத் தவிர்க்க டாக்டர்கள் பரிந்துரைக்கும் முறையையும் கேட்டு, அதற்கேற்ப ஸ்டெப்ஸ் அமைத்திருக்கிறார்கள். 



தினமும் இரண்டு முறை 10 நிமிடங்கள் இந்த உடற்பயிற்சியைச் செய்தால் போதும், நிச்சயம் உடல் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். அதேமாதிரி உற்சாகமான இசையுடன் 10 நிமிடங்கள் உட்கார்ந்த இடத்திலேயே டான்ஸ் ஆடுற மாதிரி உடற்பயிற்சி செய்வதும் உடலுக்கு மட்டுமில்லை, மனசுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். 



ஆபீஸில் வேலை செய்பவர்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் என எல்லோருக்கும் இந்த முறையைப் பயன்படுத்தி பயிற்சி பெறலாம். இப்போதுள்ள காலகட்டத்தில் பலருக்கும் பல மணி நேரம் கம்ப்யூட்டரில்தான் வேலை. இதனால் என் எனர்ஜி லெவல் ரொம்பவே குறையுது. முதுகு வலி, கழுத்து வலி, கண் பார்வை பாதிப்புனு நிறையப் பிரச்சனைகள். 



ஆனா, உட்காந்த இடத்திலேயே டான்ஸ் ஆடுற மாதிரி தினமும் இப்படி எக்சர்சைஸ் பண்றதால் ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கு. உடல்ரீதியாவும், மனரீதியாவும் புத்துணர்ச்சியா இருக்கும் என்கிறனர் வேலை பார்க்கும் பெண்கள். ஆபீஸ் நேரத்துல வேலையோட, மியூசிக் கேட்டுக்கிட்டே ரிலாக்ஸா மூவ்மென்ட்ஸ் பண்றது ரொம்பவே ஜாலியா, யூஸ்ஃபுல்லா இருக்கும். மன அழுத்தம் குறையும்.

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்


tomato க்கான பட முடிவு
உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட்  புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சராசரியாக ஒரு  வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ  தக்காளியைத் தமது உணவில் சேர்த்து கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய்  ஏற்படுவதற்கான சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.


உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக, புராஸ்டேட் சுரப்பியில் காணப்படுகிறது. பிரிட்டனில்  மட்டும் ஆண்டுக்கு 35 ஆயிரம் ஆண்களுக்கு இந்தப் புற்று நோய் ஏற்படுகிறது. அவர்களில் 10 ஆயிரம் பேர் இந்த நோய்  காரணமாக இறந்து போகிறார்கள். பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டுமானால் உணவில் பச்சைக் காய்கறிகள்  மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதோடு, இறைச்சியின் அளவையும் கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும்  குறைக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருந்து வருகிறது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 20 ஆயிரம் ஆண்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் குறித்து ஆய்வு  செய்தனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 50 முதல் 69 வயது வரையானதாக இருந்தது. இந்த ஆய்வில்  பங்கேற்றவர்களின் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் வாரத்துக்கு குறைந்தது 1500  கிராம் தக்காளியை உணவில் சோத்துக் கொண்டவர்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் தோன்றுவதன் சாத்தியம் 18 சதவீதம்  வீழ்ச்சியடைந்ததை இவர்கள் கண்டறிந்தனர். 

அத்துடன் சராசரியாக ஒரு நாளைக்கு தங்களின் மொத்த உணவில் குறைந்தது 500 கிராம் பச்சைக் காய்கறிகளையும்,  பழங்களையும், சாப்பிட்டவர்களுக்கு புராஸ்டேட் புற்று நோய் தாக்குவதற்கான சாத்தியம் 24 சதவீதம் அளவுக்குக் குறைவதையும்  இவர்கள் கண்டறிந்தனர். புராஸ்டேட் புற்றுநோய் தடுப்பில் தக்காளி முக்கிய பங்காற்றுவதாகத் தங்களின் ஆய்வு  கண்டறிந்திருப்பதாகக் கூறும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறையைச் சேர்ந்த வனசாஏர், அதே சமயம்,  இதை உறுதி செய்ய வேண்டுமானால் இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

தக்காளிக்குச் சிவப்பு நிறத்தை அளிக்கும் லைகோபீன் என்கிற இயற்கையான வேதிப்பொருள், மனித  செல்களில் மரபணு  மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக அந்தச் செல்கள் வேகமாகச் சிதைவுறுவதையோ அல்லது வேகமாக வளர்வதையோ தடுக்க  வல்லது. அதன் மூலம் இந்த லைகோபீன் மனித செல்களின் வேகமாக கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சி புற்றுநோயாக  உருவாவதைத் தடுக்கும் பணியை செய்வதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தக்காளியில் இருக்கும் லைகோபீன் மட்டுமல்லாமல் நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளான கோதுமை மாவில் இருந்து  தயாரிக்கப்படும் ரொட்டி , பாஸ்தா போன்றவற்றில் இருக்கும் செலீனியம் என்கிற வேதிப்பொருளும், பாலிலும் அதிலிருந்து  தயாராகும் அனைத்து வகையான உணவுப் பொருட்களிலும் இருக்கும் கால்சியமும்  கூட ஆண்களுக்கு உருவாகும் புராஸ்டேட்  புற்றுநோயைத் தடுக்க வல்லவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே ஆண்கள், கணிசமான தக்காளியையும், மாவுப்பொருளில் இருந்து தயாராகும் உணவுகள் மற்றும் பாலில் இருந்து  தயாரிக்கப்படும் உணவுகளைக் கூடுதலாகத் தங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தங்களுக்கு புராஸ்டேட்  புற்றநோய் வருவதைக் கணிசமான அளவுக்குக் கட்டுபடுத்த முடியும் என்றும் இந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

Thursday, March 17, 2016

குழந்தைப் பேறுக்கு இயற்கை வழிகள்


 குழந்தைப் பேறுக்கு இயற்கை வழிகள்
* மிளகு, வெள்ளைப் பூண்டு, வெள்ளைக் குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வேர் வகைக்கு 5 கிராம் எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்கலாம்.

* ஆலமரப்பட்டை பொடி அல்லது ஆலமரப் பூக்களைக் காயவைத்துப் பொடியாக்கி காலை வேளையில் பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பப் பை வீக்கம் குணமாகும்.

* ஆலமர இலைகளைப் பொடி செய்து வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி அல்லது மாத்திரை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப் பை தொந்தரவுகள் நீங்கும்.

* வாழைப்பூ சாறு அல்லது வாழைத் தண்டைப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப் பை கோளாறுகள் நீங்கும்.

* உளுந்தங்களி செய்து சாப்பிடப் பெண்களுக்கு கர்ப்பக் குழி சுத்தமாகும். அதைப் போல் முருங்கைப் பூவையும் சாப்பிடலாம்.

* இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்துப் பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள்வரை குடித்தால் நல்லது.

* சதகுப்பை, எள், கருஞ்சீரகம் சூர்ணம் (amenorrhoea) மாதவிடாய் வராத தன்மையில் பலன் அளிக்கிறது.

நீர்க்கடுப்பா? இதோ மருந்து


வெயில் காலங்களில் உடல் சூடு அதிகரிப்பது வழக்கமானது. உடலுக்கு குளிர்ச்சியான பழரசம், இளநீர், மோர் போன்ற திரவ ஆகாரங்களை சாப்பிட்டு அதை சரி செய்கிறோம். 

சிலர் தண்ணீர் அதிகம் குடிக்காமல், வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிகின்றனர். இதனால் நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்பட்டு அவஸ்தை படுகின்றனர். இதை போக்க எளிமையான வைத்தியம் உண்டு.

ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்று விடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடலாம். 

அப்படி சாப்பிட்டால் சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் வெப்பக்கட்டிகள் தோன்றும். இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவினால், வெகுவிரைவில் கட்டிகள் மறைந்து நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி, நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும். வெப்பம் சம்பந்தமான பிரச்னைகள் எதுவும் வராது.

பெண்களின் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும் இயற்கை பொருட்கள்

valaipoo க்கான பட முடிவு
பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்கவும் ஸ்லிம்மாக இருக்கவும், இயற்கையாக கிடைக்கும் கீழ்க்கண்ட பொருட்களை உணவாக அடிக்கடியோ, தினமுமோ சேர்த்து வரலாம்.

வெந்தயக்கீரை சப்பாத்தி

வெந்தயக்கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கி நல்லெண்ணெயில் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து சப்பாத்தி பதத்தில் பிசையவும். இறுதியாக வதக்கி வைத்திருக்கும் வெந்தயக் கீரையை சேர்த்துப் பிசையவும். இதனை வழக்கமான சப்பாத்தி போல போட்டு எடுக்கலாம். வித்தியாசமான நிறத்தில் இருக்கும். தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.

வாழைப்பூ குழம்பு

வாழைப்பூவை நன்றாக ஆய்ந்து பொடியாக நறுக்கி வைக்கவும். அத்துடன் உப்பு தண்ணீர் சேர்த்து தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குழம்புக்குத் தேவையான அளவு புளிக்கரைசல் தயாரிக்கவும். சீரகத்தை தனியாக நல்லெண்ணெயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். பூண்டு, வறமிளகாய் ஆகியவற்றையும் நசுக்கி வைத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களை புளிக் கரைசலில் போட்டு வாழைப்பூ, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.இதன் மூலம் கொழுப்பு குறைந்து தேவையற்ற சதைகளை குறைத்து ஸ்லிம்மாக மாற்றும்.

அன்னாசி பழ பச்சடி

அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதில் அன்னாசிப் பழ துண்டுகளையும் சேர்த்து லேசாக வதக்கி கொத்தமல்லித் இலை, கருவேப்பிலை சேர்த்து பச்சடி செய்யலாம். இதுவும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவும்.