நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும பொருட்களை நன்றாக சுத்தபடுத்தி பயன்படுத்தினாலே நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். அதில் இப்பொழுது வெந்தயத்தின் பயனை பற்றி பார்ப்போமா?
வெந்தயம் உடல் சூட்டை தணிக்கவல்லது. ஆனால் நாம் அதை பயன்படுத்துவது மிகவும் குறைவுதான். வெந்தயத்தை நீரில் ஊற வைத்து வெயிலில் உலர்த்தினால் சுத்தமாகிவிடும். இந்த வெந்தயத்தை வாயில் போட்டு நீர் அல்லது மோரை குடித்தல் உடல் சூடு தணியும். பேதி, வயிறு உப்புசம், வயிற்றுப் பொருமல் இருந்தாலும் உடனே குணமாகும். தினமும் கொஞ்சம் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் அஜீரணக்கோளாறு, வயிற்றுப்புண் குணமாகும்.
கொஞ்சம் வெந்தயத்தை எடுத்து ஊற வைத்து அரைத்து தேன் கலந்து சாப்பிட்டுவர தாய்ப்பால் நன்றாக சுரக்கும். வெந்தயம் மற்றும் சீரகத்தை வறுத்து அரைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை இருவேளையும் அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயின் தாக்கம் குறைந்து நல்ல பலன் கிடைக்கும்.
அடிக்கடி வயிறு வலி, வயிற்றில் புண் இருந்தால் இளநீரில் ஓட்டை போட்டு அதில் சிறிது வெந்தயத்தை போட்டு அதை அப்படியே மூடி இரவு முழுவதும் வைத்து காலையில் அந்த வெந்தயத்தை சாப்பிட்டு இளநீரையும் குடித்து வந்தால் பிரச்சனை தீரும்.
வெந்தயம் உடல் சூட்டை தணிக்கவல்லது. ஆனால் நாம் அதை
வெந்தயம் சாப்பிட பிடிக்கலைனா வெந்தய தோசையாகவோ, களி செய்தும் சாப்பிடலாம். வெந்தயத்தில் குழம்பு வைத்தும் சாப்பிடலாம். இதனாலும் பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment